மெர்சிங் மாவட்டம்
மெர்சிங் மாவட்டம் (ஆங்கிலம்: Mersing District; மலாய்: Daerah Mersing; சீனம்:古来区; ஜாவி: مرسيڠ ) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு மெர்சிங் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.
மெர்சிங் மாவட்டம் Daerah Mersing Mersing District | |
---|---|
ஜொகூர் மாநிலத்தில் மெர்சிங் மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 2°20′N 103°40′E / 2.333°N 103.667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
தொகுதி | மெர்சிங் மக்களவைத் தொகுதி |
உள்ளாட்சி | மெர்சிங் நகராட்சி |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | அசுமான் சா அப்துல் ரகுமான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,838.47 km2 (1,095.94 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 78,195 |
• அடர்த்தி | 28/km2 (71/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 86xxx |
தொலைபேசி எண்கள் | +6-07 |
வாகனப் பதிவெண்கள் | J |
மெர்சிங் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 355 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 127 கி.மீ.; பகாங், பெக்கான் அரச நகரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
பொது
தொகுதென் சீனக் கடலைக் கடற்கரையாகக் கொண்ட மெர்சிங் மாவட்டம் நிறைய சுற்றுலாத் தீவுகளைக் கொண்டது. இங்கு அழகு அழகான கடற்கரைகள்; குறைந்த விலையில் தங்கும் விடுதிகள்; தடங்கல் இல்லா படகுச் சேவைகள்; விதம் விதமான கடல்வகை உணவுப் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன.[2]
இந்த மாவட்டத்தின் கிழக்குப் பகுதி, கண்ணிற்கு எட்டிய தூரம் வரையில் வெண்மணல் கடற்கரைகளுக்கும், இயற்கை அழகிற்கும் பிரபலமானது.[3]
பொருளாதார நடவடிக்கைகள்
தொகுஇந்த மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார நடவடிக்கைகள் என்றால் இயற்கைச் சுற்றுச்சூழல் சுற்றுலா, மீன்பிடித் தொழில், கடல் சார் மீன்வளர்ப்புத் தொழில், விவசாயம் மற்றும் இலகு வகை தொழிற்சாலைகள் ஆகும்.
மெர்சிங் மாவட்டத்தில் ஏழுக்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவை உள்நாட்டு; வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன. தியோமான் தீவிற்குச் சுற்றுலாப் பயணிகளைப் படகு மூலம் கொண்டு செல்ல மெர்சிங் நகரத்தில் படகுத் துறையும் உள்ளது.[4][5]
வரலாறு
தொகுசீன மொழிச் சொல்லான "மாவ் ஷெங் போர்ட்" (Mau Sheng Port) எனும் சொல்லில் இருந்து மெர்சிங் எனும் சொல் பெறப்பட்டு இருக்கலாம் நம்பப் படுகிறது. 1880-ஆம் ஆண்டு முதல் அந்தச் சொல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. நல்ல அறுவடை என்று அந்தச் சொல் பொருள் படுகிறது.
மேலும் அமீர் சிங் (Amir Singh) அல்லது மென் சிங் (Men Singh) என்று பெயர் கொண்ட சீக்கிய வணிகர் ஒருவரிடம் இருந்தும், மெர்சிங் எனும் பெயர் பெறப்பட்டு இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.[6][7]
நிர்வாகப் பகுதிகள்
தொகுமெர்சிங் மாவட்டம் 10 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப் படுகிறது.[8]
- மெர்சிங், பத்து சாவான் தீவு (Mersing, Pulau Batu Chawan)
- திரியாங், லாலாங் தீவு (Triang Pulau Lalang)
- செதிண்டான் தீவு, காஜா தீவு (Pulau Setindan, Pulau Gajah)
- பெஞ்சாபோங், பெலாண்டோக் தீவு, மாவார் தீவு, பூச்சோங் தீவு (Penyabong, Pulau Pelandok, Pulau Mawar, Pulau Puchong)
- தெங்காரோ, கெராங்கா தீவு, லீலாங் தீவு (Tenggaroh, Pulau Kerengga, Pulau Lilang)
- ஜெமாலுவாங், பெலுனாக் தீவு (Jemaluang, Pulau Belunak)
- இதர தீவுகள்
- பாடாங் எண்டாவ் (Padang Endau)
- செம்புரோங் (Sembrong)
- லெங்கோர் (Lenggor)
தேர்தல் முடிவுகள்
தொகுமலேசிய மக்களவை
தொகுமலேசிய மக்களவையில் மெர்சிங் மாவட்டத்தின் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.
# | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P153 | செம்புரோங் மக்களவைத் தொகுதி | இசாமுடின் உசேன் | பாரிசான் நேசனல் (அம்னோ) |
P154 | மெர்சிங் மக்களவைத் தொகுதி | அப்துல் லத்தீப் அகமட் | பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.) |
ஜொகூர் மாநிலச் சட்டமன்றம்
தொகுஜொகூர் மாநிலச் சட்டமன்றத்தில் மெர்சிங் மாவட்டப் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[9]
# | மாநிலம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P153 | N31 | ககாங் | வித்தியநாதன் ராமநாதன் | பாரிசான் நேசனல் (ம.இ.கா) |
P154 | N32 | எண்டாவ் | அல்வியா தாலிப் | பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.) |
P154 | N33 | தெங்காரோ | ரவின் குமார் ராமசாமி | பாரிசான் நேசனல் (ம.இ.கா) |
சுற்றுலா இடங்கள்
தொகுமெர்சிங் மாவட்டத்தின் கடல் எல்லையில் உள்ள 13 தீவுகளில் ஆக்ஸ்பில் (Hawksbill) ஆமை; மற்றும் பச்சை கடல் ஆமைகள் முட்டையிடும் தளங்களாக உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கிட்டத்தட்ட 200 ஆமைகள் ஜொகூரில் கரை ஒதுங்குகின்றன.[10]
- அவுர் தீவு (Aur Island)
- ஜொகூர் பெசார் தீவு (Besar Island)
- அரிமாவ் தீவு (Harimau Island)
- அரோங் பொழுதுபோக்கு வனப்பூங்கா (Arong Recreational Forest)
- பெமாங்கில் தீவு (Pemanggil Island)
- ராவா தீவு (Rawa Island)
- சிபு தீவு (Sibu Island)
- எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்கா (Taman Negara Endau Rompin)
காட்சியகம்
தொகு-
மெர்சிங் ராவா தீவு கடற்கரை
-
மெர்சிங் ராவா தீவு கடற்கரை (2)
-
மெர்சிங் அவூர் தீவு கடற்கரை
-
மெர்சிங் சிபு தீவு
-
மெர்சிங் பெசார் தீவு
-
மெர்சிங் புலாவ் தெங்கா தீவு
-
மெர்சிங் கடற்கரை
-
மெர்சிங் லேமான் படகுத்துறை கடற்கரை
-
மெர்சிங் ஆயர் பாப்பான் கடற்கரை
-
மெர்சிங் புலாவ் பெசார் தீவுக்கு படகுச் சேவை
ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Pejabat Tanah Mersing". ptj.johor.gov.my.
- ↑ Latif, Zulkifly Ab (14 July 2020). "Mersing's main claim to fame is it being the principal gateway to Johor's group of islands as well as the neighboring Pahang's Tioman island". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
- ↑ "Mersing, Johor, Malaysia". johor.attractionsinmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
- ↑ "Mersing, Johor". ECERDC. பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
- ↑ "Mersing Harbour Centre Tourism Portal - Looking for ferry tickets to Tioman Island for 2022? Mersing Harbour Centre is the place to be". mersingharbourcentre.com. பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
- ↑ "【柔佛10县名字由来】柔佛子民随堂考:10县名字由来,知道一半以上算你牛". JOHORNOW 就在柔佛 by NOW MEDIA GROUP SDN BHD. 24 May 2017. பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
- ↑ "Toponymy Heritage Places". பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
- ↑ "Majlis Daerah Mersing". Portal Rasmi Majlis Daerah Mersing (MDM). பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
- ↑ "PILIHAN RAYA PARLIMEN BAGI NEGERI JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 26 July 2024.
- ↑ "Turtles have the potential to become a tourist attraction in Mersing islands". பார்க்கப்பட்ட நாள் 24 November 2021.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Mersing District தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.