பெமாங்கில் தீவு
பெமாங்கில் தீவு (மலாய்: Pulau Pemanggil; ஆங்கிலம்:Pemanggil Island; சீனம்: 柏芒吉岛) என்பது மலேசியா, ஜொகூர், மெர்சிங் மாவட்டம், தென் சீனக் கடலில் உள்ள ஒரு தீவு.[1] ஜொகூர் பாருவின் மேற்குப் பக்கத்திலும், தியோமான் தீவிற்கு தெற்கிலும் அமைந்துள்ளது.[2]
10 கி.மீ. தொலைவில் இருந்து பெமங்கில் தீவு | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென் சீனக் கடல் |
ஆள்கூறுகள் | 2°34′52″N 104°19′37″E / 2.58111°N 104.32694°E |
தீவுக்கூட்டம் | தீபகற்ப மலேசியா; மலேசியா |
மொத்தத் தீவுகள் | 1 |
பரப்பளவு | 8.508 km2 (3.285 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 223 m (732 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 34 (2020) |
அடர்த்தி | 3.996 /km2 (10.35 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் குறியீடு | 86800 |
பெமாங்கில் தீவு உண்மையில் ஒரு தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியாகும். இதனுடன் மேலும் மூன்று தீவுகள் உள்ளன. அவை: அவுர் தீவு, லாங் தீவு மற்றும் டாயாங் தீவு.
மெர்சிங் நகரில் இருந்து கிழக்கே 45 கிமீ தொலைவில் தென் சீனக் கடலில் அமைந்துள்ள இந்தத் தீவு, ஜொகூர் கடல் பூங்காவின் (Johor Marine Park) ஒரு பகுதியாகும்.[3]
பொது
தொகுபெமாங்கில் தீவு ஆழ்கடல் மீன்பிடிச் செயல்பாடுகளுக்கும்; மற்றும் மார்லின் வகை மீன்கள்; கானாங்கெளுத்தி மீன்களுக்கும் பெயர் பெற்றது.
இந்தத் தீவின் வெளிப்பகுதியில் ஒரு மலையும்; வடகிழக்கு கடற்கரையில் தெலுக் லாங்காங் எனும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட விரிகுடாவும் உள்ளது. தீவின் மையத்தில், உள்ளூர் மக்கள் புனிதமாகக் கருதும் பத்து புவாவு (Batu Buau) எனும் ஒரு பெரிய பாறையும் உள்ளது.
போக்குவரத்து
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Pemanggil Island | Pulau Pemanggil Mersing, Johor, Malaysia". attractionsinmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
- ↑ "How to get to Pemanggil · myisland.my". 7 January 2021. பார்க்கப்பட்ட நாள் 16 March 2024.
- ↑ "Pulau Pemanggil". Tourism Johor. Archived from the original on 2019-09-08.
- ↑ "Pemanggil Island Jetty · myisland.my". 7 January 2021. பார்க்கப்பட்ட நாள் 16 March 2024.