சரதோக்

சரதோக் மாவட்டத்தின் தலைநகரம்

சரதோக் (மலாய் மொழி: Bandar Saratok; ஆங்கிலம்: Saratok Town; சீனம்: 萨拉托克镇) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பெத்தோங் பிரிவில் உள்ள ஒரு நகரம்; மற்றும் சரதோக் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.

சரதோக் நகரம்
Saratok Town
Bandar Saratok
சரதோக் is located in மலேசியா
சரதோக்
      சரதோக்       மலேசியா
ஆள்கூறுகள்: 1°44′24″N 111°20′13.2″E / 1.74000°N 111.337000°E / 1.74000; 111.337000
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுபெத்தோங் பிரிவு
மாவட்டம்சரதோக் மாவட்டம்
நிர்வாக மையம்சரதோக்
மக்கள்தொகை
 (2020)[1]
 • மொத்தம்54,400
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
96410
இணையதளம்www.mukah.sarawak.gov.my

இந்த நகரம் பெத்தோங் நகரில் இருந்து 50 கிலோமீட்டர் (31 மைல்) தொலைவில் உள்ளது. 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 54,400.[2][3]

பொது

தொகு

சரதோக் நகரத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையோர் இபான் மக்கள் (51%). மற்ற இனத்தவர்கள்: மலாய் மக்கள் (40%), சீனர் (7%); அவர்களில் பிடாயூ மக்கள் மற்றும் மெலனாவு மக்கள் சிறுபான்மையின மக்களாக உள்ளனர்.

இருப்பினும் சரதோக் மாவட்டத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையோர் இபான் மக்கள் ஆவார்கள். அவர்களில் பெரும்பாலோர் கிராமப்புறங்களில் நீளவீடுகளில் வாழ்கின்றனர். நெல், மிளகு மற்றும் ரப்பர் மரம் சீவுதல் போன்ற பொதுவான தொழில் வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.

இபான் மக்கள்

தொகு

இபான் மக்களில் சிலர் செம்பனைத் தோட்டங்களில் (Palm Oil Plantations) வேலை செய்கிறார்கள்; அல்லது சொந்தமாக வேளாண்மையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பொதுவாக, இந்த மாவட்டத்தில் உள்ள மலாய்ச் சமூகத்தினர் ஆறுகளுக்கு அருகில் தங்கி, மீன்பிடித்தல்; மற்றும் அன்னாசி, கொக்கோ மற்றும் தென்னை நடவுகள் செய்து வாழ்கின்றனர்.

சரதோக் நகரத்தில் உள்ள பெரும்பாலான கடைக்காரர்கள் சீனர்கள் ஆகும்.[4]

இனக்குழுக்கள்

தொகு

சரதோக் மாவட்டம் பாரம்பரியமாக இபான், மலாய் மக்கள் மற்றும் சீனர் மக்களின் தாயகமாக உள்ளது. பெரும்பாலான இபான் மக்கள், பெத்தோங் மாவட்டம் மற்றும் சரதோக் மாவட்டத்தின் கிராமப் புறங்களில் வாழ்கின்றனர்.

சீன மக்கள் பெத்தோங் மற்றும் சரதோக் போன்ற நகரப் பகுதிகளில் அதிக அளவில் உள்ளனர். பிற இனங்களான பிடாயூ மக்கள், மெலனாவு மக்கள் மற்றும் ஒராங் உலு மக்கள் ஆகியோர் பெத்தோங் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல. வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

இருப்பினும், சரவாக் முழுவதும் இருந்தும், அண்மைய காலங்களில் அதிகமானோர் பெத்தோங்; சரத்தோக் மாவட்டங்களுக்குள் குடியேறி வருகிறார்கள். வெளிநாட்டு தொழிலாளர்கள் அரிதாகவே காணப் படுகின்றனர். அவர்களில் பலர் செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்கின்றனர்.

காலநிலை

தொகு

சரதோக் நகரம் ஒரு வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமழை முதல் மிக அதிக மழைப்பொழிவைக் காண்கிறது.


தட்பவெப்ப நிலைத் தகவல், Saratok
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30.1
(86.2)
30.3
(86.5)
31.3
(88.3)
32.1
(89.8)
32.5
(90.5)
32.3
(90.1)
32.2
(90)
32.0
(89.6)
31.9
(89.4)
31.7
(89.1)
31.5
(88.7)
30.8
(87.4)
31.56
(88.81)
தினசரி சராசரி °C (°F) 26.2
(79.2)
26.3
(79.3)
27.0
(80.6)
27.4
(81.3)
27.8
(82)
27.5
(81.5)
27.2
(81)
27.1
(80.8)
27.2
(81)
27.1
(80.8)
27.0
(80.6)
26.5
(79.7)
27.03
(80.65)
தாழ் சராசரி °C (°F) 22.4
(72.3)
22.4
(72.3)
22.7
(72.9)
22.8
(73)
23.1
(73.6)
22.7
(72.9)
22.3
(72.1)
22.3
(72.1)
22.5
(72.5)
22.6
(72.7)
22.5
(72.5)
22.3
(72.1)
22.55
(72.59)
மழைப்பொழிவுmm (inches) 364
(14.33)
283
(11.14)
276
(10.87)
253
(9.96)
264
(10.39)
169
(6.65)
171
(6.73)
277
(10.91)
262
(10.31)
279
(10.98)
303
(11.93)
405
(15.94)
3,306
(130.16)
ஆதாரம்: Climate-Data.org[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Official Portal of the Sarawak Government". sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2022-12-06.
  2. "Iban of Brunei". People Groups.
  3. Sutrisno, Leo (2015-12-26). "Rumah Betang". Pontianak Post. Archived from the original on 2015-12-29. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
  4. "Peta Pentadbiran Bahagian Betong". betong.sarawak.gov.my. Pentadbiran Bahagian Betong. Archived from the original on 2021-07-12. பார்க்கப்பட்ட நாள் 20 November 2020.
  5. "Climate: Saratok". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரதோக்&oldid=4106858" இலிருந்து மீள்விக்கப்பட்டது