தெபெடு மாவட்டம்
தெபெடு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Tebedu; ஆங்கிலம்: Tebedu District) என்பது மலேசியா, சரவாக், செரியான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் நிர்வாக மையமாக தெபெடு நகரம் (Tebedu) விளங்குகிறது.[1][2][3]
தெபெடு மாவட்டம் Tebedu District Daerah Tebedu | |
---|---|
ஆள்கூறுகள்: 1°00′55″N 110°21′17″E / 1.0154°N 110.3546°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | செரியான் பிரிவு |
மாவட்டம் | சிபுரான் மாவட்டம் |
நிர்வாக மையம் | தெபெடு நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 421 km2 (163 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 11,434 |
• அடர்த்தி | 27/km2 (70/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இதற்கு முன்னர், தெபெடு மாவட்டம் செரியான் மாவட்டத்தின் கீழ் ஒரு துணை மாவட்டமாக இருந்தது. இந்த மாவட்டத்தின் பெரும்பான்மையான மக்கள் பிடாயூ இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்.[4]
பொது
தொகுதெபெடு மாவட்டம் 421 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டம் இந்தோனேசியா-மலேசியா எல்லையின் முதல் பன்னாட்டு நுழைவாயிலாக அமைகிறது. அந்த வகையில் இந்த மாவட்டம் மேற்கு கலிமந்தனில் உள்ள பொந்தியானாக் நகரத்தையும் சரவாக்கில் உள்ள கூச்சிங் நகரத்தையும் இணைக்கிறது.[5][6]
இந்த மாவட்டத்தின் எல்லையில் உள்ள இந்தோனேசிய நகரம் எந்திகோங் ஆகும்.[7]அத்துடன் தெபெடு குடிவரவு வளாகம், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் கட்டப்பட்டது.[6]
1991-இல், 57,000-க்கும் மேற்பட்ட இந்தோனேசியர்கள் மேற்கு கலிமந்தான் மற்றும் தெபெடு மாவட்டத்திற்கு இடையே அமைந்துள்ள குடியேற்ற மையத்தைப் பயன்படுத்தி, எந்திகோங் வழியாக மலேசியாவிற்குள் நுழைந்தனர்.[8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
- ↑ "Malaysia: Administrative Division". City Population. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
- ↑ "Ini nama daerah, bahagian di Sarawak: Mohon permit pergerakan rentas daerah". Sarawak Voice. 7 May 2021 இம் மூலத்தில் இருந்து 2021-05-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210531003826/https://sarawakvoice.com/2020/05/07/ini-nama-daerah-bahagian-di-sarawak-mohon-permit-pergerakan-rentas-daerah/.
- ↑ "Toponymic Guidelines for Map and Other Editors for International Use" (PDF) (in ஆங்கிலம்). Malaysia: Jawatankuasa Kebangsaan Nama Geografi. 2017. Archived (PDF) from the original on 2021-05-23. பார்க்கப்பட்ட நாள் 22 May 2021.
- ↑ "Pengiktirafan kepada Bidayuh yang menyumbang kepada negara: KM". serian.sarawak.gov.my. en:The Borneo Post. 13 April 2015. Archived from the original on 2021-07-10. பார்க்கப்பட்ட நாள் 20 May 2020 – via Laman web Pentadbiran Bahagian Serian.
- ↑ 6.0 6.1 Irfan Setiawan (2020). Kecamatan di Wilayah Perbatasan Negara: Tinjauan Teoritk, Normatif Dan Implementatif. RTujuh Mediaprinting. p. 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786239565909.
- ↑ "Daerah Kecil Tebedu". serian.sarawak.gov.my. Archived from the original on 2021-07-10. பார்க்கப்பட்ட நாள் 20 May 2020 – via Laman web Pentadbiran Bahagian Serian.
- ↑ Anex-Antara (2 April 1992). "5,000 Indons visit Malaysia via Entikong" (in en). en:New Straits Times. https://www.klik.com.my/item/story/985823/5-000-indons-visit-malaysia-via-entikong.
- ↑ Anex-Antara (2 April 1992). "Entikong checkpoint" (in en). Business Times. https://www.klik.com.my/item/story/2468486/entikong-checkpoint.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Siburan தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Pentadbiran Bahagian Serian.