இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி

இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Indera Mahkota; ஆங்கிலம்: Indera Mahkota Federal Constituency; சீனம்: 英迪拉马哥打国会议席) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், குவாந்தான் மாவட்டத்தில் (Kuantan District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P082) ஆகும்.[6]

இந்திரா மக்கோத்தா (P082)
மலேசிய மக்களவைத் தொகுதி
பகாங்
Indera Mahkota (P082)
Federal Constituency in Pahang
இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி
(P082 Indera Mahkota)
மாவட்டம்குவாந்தான் மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை120,549 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிஇந்திரா மக்கோத்தா
முக்கிய நகரங்கள்குவாந்தான்
பரப்பளவு392 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2003
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்சைபுதீன் அப்துல்லா
(Saifuddin Abdullah)
மக்கள் தொகை248,946 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2004
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]




2022-இல் இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள்:[5]

  மலாயர் (68.7%)
  சீனர் (25.4%)
  இதர இனத்தவர் (0.5%)

இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2004-ஆம் ஆண்டில் இருந்து இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]

குவாந்தான் மாவட்டம்

தொகு

குவாந்தான் மாவட்டம், பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் குவாந்தான். பகாங் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் வடக்கில் திராங்கானு மாநிலத்தின் கெமாமான் மாவட்டம்; கிழக்கில் தென்சீனக் கடல்; மேற்கில் மாரான் மாவட்டம் மற்றும் ஜெராண்டுட் மாவட்டம்; தெற்கில் பெக்கான் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.

பண்டார் இந்திரா மக்கோத்தா

தொகு

இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குவாந்தான் மற்றும் பண்டார் இந்திரா மக்கோத்தா (Bandar Indera Mahkota). இதர நகரங்கள் பஞ்சிங், சுங்கை லெம்பிங், கம்பாங் மற்றும் பெசெரா. 11-ஆம் நூற்றாண்டில், குவாந்தான் நிலப்பகுதி, சயாமியர்களால் கையகப்படுத்தப் படுவதற்கு முன்பு, பெங்-கெங் (Pheng-Kheng) எனும் மற்றும் ஒரு சிறிய பேரரசால் ஆளப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டில், சிறிது காலம் மலாக்கா அரசாலும் ஆளப்பட்டது.

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீனாவில் இருந்து சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சீன வணிகர்களின் வருகையால் குவாந்தான் வளர்ச்சி பெறத் தொடங்கியது. குவாந்தான் நகரம் 1850-ஆம் ஆண்டுகளில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதி

தொகு
இந்திரா மக்கோத்தா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
2003-ஆம் ஆண்டில் இந்திரா மக்கோத்தா தொகுதி உருவாக்கப்பட்டது
11-ஆவது மக்களவை P082 2004–2008 அட்னான் வான் மமாட்
(Adnan Wan Mamat)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013 அசான் இசுமாயில்
(Azan Ismail)
பாக்காத்தான் ராக்யாட்
(மக்கள் நீதிக் கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2018 பவுசி அப்துல் ரகுமான்
(Fauzi Abdul Rahman)
14-ஆவது மக்களவை 2018–2020 சைபுதீன் அப்துல்லா
(Saifuddin Abdullah)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

இந்திரா மக்கோத்தா தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
சைபுதீன் அப்துல்லா
(Saifuddin Abdullah)
பெரிக்காத்தான் நேசனல்41,69244.6544.65  
சுரைடி இசுமாயில்
(Zuraidi Ismail)
பாக்காத்தான் அரப்பான்33,29335.669.20
குவெக் தாய் சியோங்
(Quek Tai Seong)
பாரிசான் நேசனல்16,53017.709.96
முகமது நோர் சுந்தரி
(Mohamad Nor Sundari)
தாயக இயக்கம்1,8601.992.00  
மொத்தம்93,375100.00
செல்லுபடியான வாக்குகள்93,37598.87
செல்லாத/வெற்று வாக்குகள்1,0671.13
மொத்த வாக்குகள்94,442100.00
      பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது
மூலம்: [8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  8. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF PAHANG" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு