தம்புனான்

மலேசியா, சபா, தம்புனான் மாவட்டத்தின் தலைநகரம்

தம்புனான் என்பது (மலாய்: Pekan Tambunan; ஆங்கிலம்: Tambunan Town) மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, தம்புனான் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.[1]

தம்புனான் நகரம்
Tambunan Town
சபா
District Adminsitration Office
தம்புனான் மாவட்ட அலுவலகம்
அலுவல் சின்னம் தம்புனான் நகரம்
சின்னம்
தம்புனான் நகரம் is located in மலேசியா
தம்புனான் நகரம்
தம்புனான் நகரம்
சபாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 05°40′9″N 116°21′57″E / 5.66917°N 116.36583°E / 5.66917; 116.36583
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுஉட்பகுதி பிரிவு
மாவட்டம்தம்புனான் மாவட்டம்
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்35,667
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
மலேசிய அஞ்சல் குறியீடு
89650
மலேசியத் தொலைபேசி+60-87
மலேசிய வாகனப் பதிவெண்கள்SD

கடசான்-டூசுன்; இனக் குழுவினர் 86 % பெரும்பான்மையாகக் கொண்ட நகரம். இந்தக் குழுவினருக்கு அடுத்து மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் பிற பழங்குடியினர் உள்ளனர்.[2]

சபா மாநிலத் தலைநகரான கோத்தா கினபாலுவில் இருந்து கிழக்கே 80 கி.மீ. தொலைவில்; கோத்தா கினாபாலு - தம்புனான் - கெனிங்காவ் நெடுஞ்சாலையால் இணைக்கப்பட்டு உள்ளது. ரானாவ் நகருக்கு தெற்கே 48 கி.மீ. மற்றும் கெனிங்காவ் நகரில் இருந்து வடக்கே 48 கி.மீ. தொலைவில் உள்ளது.[3]

பொது

தொகு

சராசரியாக 750 மீட்டர் உயரத்தில், குரோக்கர் மலைத்தொடரின் ஒரு பகுதியாக இந்தப் பள்ளத்தாக்கு நகரம் அமைந்து உள்ளது. ஆண்டு முழுவதும் மிதமான வெப்பமண்டல காலநிலையைக் கொண்டது.

குரோக்கர் மலைத்தொடரின் பள்ளத்தாக்குச் சரிவுகளில் அடுக்கடுக்காய் நெல் வயல்கள். ஏறக்குறைய 70 கிராமங்கள் நிறைந்து உள்ளன. தம்புனான் நகரைச் சுற்றிலும் அடர்ந்த மூங்கில் காடுகள் உள்ளன.

இவை பிரித்தானியக் காலனித்துவக் காலத்தின் மரபுகளைப் பறைசாற்றுகின்றன. ஒரு மூங்கிலை வெட்டினால் 20 மூங்கில் குருத்துகளை நட வேண்டும் என்று பிரித்தானியர்கள் சட்டம் போட்டு இருந்தார்கள்.

சொற்பிறப்பியல்

தொகு

தம்புனான் எனும் பெயர் தம் "அடோன்" (Tam adon") மற்றும் "கோம் புனான் ("Gom '"bunan) எனும் வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது. இரண்டு சொற்களும் இணைந்து "தம்புனான்" ஆனது.[2]

சுற்றுலா தளங்கள்

தொகு

மாட் சாலே நினைவகம்

தொகு

கம்போங் தீபபார் (Kampung Tibabar) எனும் கிராமத்தில் நெல் வயல்களுக்கு நடுவில் மாட் சாலே நினைவகம் (Mat Salleh Memorial) அமைந்துள்ளது. மாட் சல்லே என்பவரின் நினைவாக மாநில அரசாங்கத்தால் கட்டப்பட்ட நினைவுச் சின்னமாகும்.

மாட் சாலே என்று நன்கு அறியப்பட்ட அவர், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு (British North Borneo Company) எதிரான கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

பிப்ரவரி 1, 1900-இல் பிரித்தானிய காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் கொல்லப்பட்டார். மலேசியாவின் ஒரு பகுதியாக சபா மாறிய பிறகு, மாட் சாலே கொல்லப்பட்ட அதே இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.[4]

ராபிலேசியா வனக் காப்பகம்

தொகு

தம்புனான் அதன் லைகிங் (Lihing) மற்றும் தபாய் (Tapai) எனும் மதுபானத் தயாரிப்புகளுக்கு நன்கு அறியப்பட்டது. அவை சபாவின் கடாசான் மற்றும் டூசுன் மக்களால் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் அரிசிவகை மதுபானங்கள்.

தம்புனான் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் ராபிலேசியா வனக் காப்பகம் (Rafflesia Forest Reserve) உள்ளது. உலகின் மிகப்பெரிய மலரான ராபிலேசியா மலர்களுக்காக இந்த வனக் காப்பகம் உருவாக்கப்பட்டு உள்ளது.[5][6]

தம்புனானுக்குக் கிழக்கே சபாவின் இரண்டாவது உயரமான மலையான துருஸ்மாடி மலை (Trus Madi) (2642 மீட்டர்) அமைந்து உள்ளது.

பொருளியல்

தொகு

தம்புனான் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். தம்புனான் மக்களில் பெரும்பாலோர் நெல், காய்கறிகள், மீன் பண்ணை, ரப்பர் தோட்டம், பாமாயில் தோட்டம், பொது ஊழியர் வேலைகள் செய்கிறார்கள். 2021 ஆண்டு வரையில், தம்புனானில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குப் பெரிய தொழில்கள் எதுவும் இல்லை.

இந்த நகரம் கோத்தா கினபாலுவில் இருந்து சற்று தொலைவில் உள்ளதால் வளர்ச்சியின் தாக்கங்கள் குறைவு. தம்புனானில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள பெரிய நகரமான கெனிங்காவ் நகரின் வளர்ச்சியினால் இந்த நகரத்தின் வளர்ச்சி குன்றி உள்ளது.[3]

காலநிலை

தொகு
தட்பவெப்ப நிலைத் தகவல், தம்புனான்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30
(86)
30.6
(87)
31.7
(89)
32.2
(90)
32.2
(90)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.1
(88)
30.6
(87)
30
(86)
31.1
(88)
தாழ் சராசரி °C (°F) 19.4
(67)
18.3
(65)
18.9
(66)
19.4
(67)
20
(68)
19.4
(67)
18.9
(66)
18.9
(66)
19.4
(67)
19.4
(67)
19.4
(67)
20
(68)
19.4
(67)
பொழிவு mm (inches) 147
(5.8)
94
(3.7)
147
(5.8)
191
(7.5)
208
(8.2)
185
(7.3)
130
(5.1)
124
(4.9)
163
(6.4)
178
(7)
173
(6.8)
152
(6)
1,890
(74.4)
ஆதாரம்: Weatherbase[7]

மேற்கோள்

தொகு
  1. Post, Sabah (13 February 2019). "Daerah Tambunan yang merupakan salah sebuah kawasan tanah tinggi yang letaknya di bahagian pedalaman, Sabah". Sabah Post. பார்க்கப்பட்ட நாள் 6 April 2022.
  2. 2.0 2.1 "The area that is called Tambunan in present day was only but a thick jungle with abundance of wild animals and jungle produce". பார்க்கப்பட்ட நாள் 6 April 2022.
  3. 3.0 3.1 "Tambunan is located in the interior division of Sabah and is also the capital of the Tambunan district. The distance between Kota Kinabalu and Tambunan town is 75 kilometres apart. Tambunan is a town where it's filled with terraced paddy fields as the main source of income there is dominated by rice production". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 April 2022.
  4. "Mat Salleh Memorial - This memorial site which is located in Kampung Tibabar, Tambunan is set up to commemorate local patriot, Datuk Paduka Mat Salleh, for his heroism during the British Colonial times". Sabah, Malaysian Borneo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 April 2022.
  5. "Rafflesia Information Centre, Tambunan | Forest Reserve | Sabah Tourist & Travel Guide | Malayisia". sabah.attractionsinmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2022.
  6. "Rafflesia Forest Reserve: Conserving not only Rafflesia but also Endemic, Rare and Interesting Insects". பார்க்கப்பட்ட நாள் 6 April 2022.
  7. "Weatherbase: Historical Weather for Tambunan, Malaysia". Weatherbase. 2011. Retrieved on 24 November 2011.

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்புனான்&oldid=3925197" இலிருந்து மீள்விக்கப்பட்டது