துருஸ்மாடி மலை

துருசுமாடி மலை (மலாய் மொழி: Gunung Trusmadi; ஆங்கிலம்: Mount Trusmadi) என்பது மலேசியாவில் இரண்டாவது உயர்ந்த மலையாகும். இது சபா, தம்புனான் மாவட்டத்தில், தம்புனான் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மலேசியாவில் மிக உயர்ந்த மலையான கினபாலு மலைக்கு அருகாமையில் இருக்கும் இந்த மலையின் உயரம் 2,642 மீட்டர், (8,669 அடி).[1]

துருசுமாடி மலை
Gunung Trusmadi
உயர்ந்த புள்ளி
உயரம்2,642 m (8,668 அடி)
ஆள்கூறு5°33′N 116°31′E / 5.550°N 116.517°E / 5.550; 116.517
புவியியல்
அமைவிடம்சபா, போர்னியோ
மூலத் தொடர்துருசுமாடி மலைத்தொடர்
ஏறுதல்
எளிய வழிதம்புனான் நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவு
சபா மாநிலத்தில் தம்புனான் மாவட்டம்

துருசுமாடி மலை, தனித்தன்மை வாய்ந்த பல தாவர விலங்கினங்களுக்கு புகலிடமாக விளங்கி வருகிறது. அவற்றில் pitcher plant எனும் கெண்டி தாவரங்கள் பிரசித்தி பெற்றவை.[2] பெரிய இலைக் குப்பி என்று அழைக்கப்படும் Nepenthes macrophylla எனும் தாவரம் துருசுமாடி மலையில் மட்டுமே காணப்படுகிறது.[3]

இங்கேதான் துருசுமாடியென்சிசு எனும் அரிதான தாவரம் இருக்கிறது. துருசுமாடி எனும் பெயரில் இருந்து அந்தத் தாவரத்திற்கு துருசுமாடியென்சிசு எனும் பெயர் வைக்கப்பட்டது.[4] இதன் மலைப்பாதைகள் மிகவும் கரடு முரடானவை. கினபாலு மலையை விட 1,453 மீட்டர்கள் உயரம் குறைவாக இருந்தாலும், இதில் ஏறுவது மிகவும் கடினம் என்று சொல்லப்படுகிறது.[5]

துருசுமாடி வனங்காப்பகம்

தொகு

துருசுமாடி வனங்காப்பகம் ரானாவ். தம்புனான், கெனிங்காவ் மாவட்டங்களின் எல்லையில் அமைந்து இருக்கிறது. அதில் ஒரு பகுதிதான் சபா வன நிர்வாகப் பிரிவின் கீழ் வருகிறது. துருசுமாடி வனங்காப்பகத்தைச் சபா வன நிர்வாகப் பிரிவு என்று அழைப்பது உண்டு.[6] துருசுமாடி வனங் காப்பகம் தாவரவியலாளர்கள் ஆய்வுகள் செய்வதற்கு பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. இதுவரை 600 வகையான தாவர இனங்கள் அடையாலம் காணப்பட்டு உள்ளன.

இந்த வனங்காப்பகத்தைச் சுற்றிய பகுதிகளில் காட்டு மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.[7]

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "About 20km southeast of Tambunan town is the dramatic Mt Trus Madi, Sabah's second-highest peak, rising to 2642m". Archived from the original on 2015-09-01. பார்க்கப்பட்ட நாள் 2014-12-31.
  2. Marabini, J. 1984. A field trip to Gunong Trusmadi. Carnivorous Plant Newsletter 13(2): 38–40.
  3. Kitayama, K., J. Kulip, J. Nais & A. Biun 1993. Vegetation survey on Mount Trus Madi, Borneo a prospective new mountain park. Mountain Research and Development 13(1): 99–105. எஆசு:10.2307/3673647
  4. Bourke, G. 2007. Exploring the upper reaches of Gunung Trus Madi. Carniflora Australis (9): 9–16.
  5. "Trus Madi is 1,453 meters lower than Mt. Kinabalu, the popular belief is that it is tougher to conquer and the trails are rougher than Mt. Kinabalu". Archived from the original on 2015-01-02. பார்க்கப்பட்ட நாள் 2014-12-31.
  6. "Trus Madi Forest Reserve, also known as Sabah Forest Management Unit (FMU) 10 (Tambunan)". Archived from the original on 2016-08-28. பார்க்கப்பட்ட நாள் 2014-12-31.
  7. "Although logging concessions encircle the mount, the upper slopes and peak are wild and jungle-clad and classified as forest reserve". Archived from the original on 2015-09-01. பார்க்கப்பட்ட நாள் 2014-12-31.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mountains of Sabah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருஸ்மாடி_மலை&oldid=3652258" இலிருந்து மீள்விக்கப்பட்டது