ராபிலேசியா வனக் காப்பகம்
ராபிலேசியா வனக் காப்பகம் (மலாய்: Hutan Simpan Rafflesia; ஆங்கிலம்: Rafflesia Forest Reserve) என்பது மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, தம்புனான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு வனக்காப்பகம் ஆகும்.
ராபிலேசியா வனக் காப்பகம் Rafflesia Forest Reserve | |
---|---|
ஐயுசிஎன் வகை Iஏ (Strict Nature Reserve) | |
அமைவிடம் | சபா, மலேசியா |
அருகாமை நகரம் | தம்புனான் |
ஆள்கூறுகள் | 5°46′38″N 116°20′36″E / 5.777333°N 116.343333°E |
பரப்பளவு | 356 சதுர கிலோமீட்டர்கள் (137 sq mi) |
நிறுவப்பட்டது | 1984 |
1984-ஆம் ஆண்டு இந்தப் பகுதியில் ஏராளமாகக் காணப்படும் ராபிலேசியா (Rafflesia pricei) மலர்களைப் பாதுகாக்க, இந்த வனப் பாதுகாப்பகம் சபா வனத் துறையால் (Sabah Forestry Department) நிறுவப்பட்டது.
பொது
தொகுஇந்த வனக் காப்பகத்தைப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature - IUCN), ஒரு பாதுகாப்பு காப்பகமாக அறிவித்து உள்ளது. இந்த வனக் காப்பகத்தின்பரப்பளவில் 356 ஹெக்டர்.
தம்புனான் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் இந்த வனக் காப்பகம் உள்ளது. உலகின் மிகப்பெரிய மலரான ராபிலேசியா மலர்களுக்காக இந்த வனக் காப்பகம் உருவாக்கப்பட்டு உள்ளது.[1] [2]
காட்சியகம்
தொகு-
ராபிலேசியா மலர் 1
-
ராபிலேசியா மலர் 2
-
இந்தோனேசியா ராபிலேசியா மலர் அஞ்சல்தலை
-
ராபிலேசியா மலர் 3
ராபிலேசியா தகவல் மையம்
தொகுகோத்தா கினபாலுவில் இருந்து தம்புனான் செல்லும் சாலையில் ராபிலேசியா தகவல் மையம் (Rafflesia Information Centre) எனும் பெயரில் ஒரு தகவல் அலுவலகத்தை அமைத்து உள்ளார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rafflesia Information Centre, Tambunan | Forest Reserve | Sabah Tourist & Travel Guide | Malayisia". sabah.attractionsinmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 6 April 2022.
- ↑ "Rafflesia Forest Reserve: Conserving not only Rafflesia but also Endemic, Rare and Interesting Insects". பார்க்கப்பட்ட நாள் 6 April 2022.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- "Rafflesia Forest Reserve". சபா வனத்துறை. Archived from the original on 2012-02-06. பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.