சிம்பாங் ரெங்கம்

சிம்பாங் ரெங்கம் (மலாய்: Simpang Renggam; ஆங்கிலம்: Simpang Renggam; சீனம்: 新邦令金) என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரம். இந்த நகரம் குளுவாங் நகரத்திற்கு தெற்கே அமைந்து உள்ளது.[1][2]

சிம்பாங் ரெங்கம்
Simpang Renggam
 ஜொகூர்
சிம்பாங் ரெங்கம் நகரம்
சிம்பாங் ரெங்கம் நகரம்
Map
ஆள்கூறுகள்: 1°50′N 103°19′E / 1.833°N 103.317°E / 1.833; 103.317
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம்குளுவாங் மாவட்டம்
அரசு
 • வகைஉள்ளாட்சி மன்றம்
 • நிர்வாகம்சிம்பாங் ரெங்கம் மாவட்ட ஊராட்சி
 • தலைவர்அனிஸ் முசல்மான் சலேகான்
பரப்பளவு
 • மொத்தம்65.5 km2 (25.3 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்34,701
 • அடர்த்தி431.4/km2 (1,117/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
86200
போக்குவரத்து பதிவெண்கள்J

மலேசிய கூட்டரசு சாலை 1 வழியாக ஜொகூர் பாருவிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ளது.

பொது

தொகு

ரெங்கம் நகரத்தின் வரலாறு ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1950-களில் இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் விக்டோரியா மகாராணி ஆகியோரின் வருகைகளைப் பெற்றுள்ளது.[1]

அந்தக் காலக்கட்டத்தில் இந்த இடம் ஒரு முக்கிய குடியேற்றப் பகுதியாக இருந்தது. கத்ரி ரப்பர் தோட்டம், உலு ரெமிஸ் ரப்பர் தோட்டம் போன்ற பெரிய ரப்பர் தோட்டங்கள் இங்கு இருந்தன. இன்றும் உள்ளன.

அத்துடன் பிரித்தானியக் காலனித்துவத்தின் மையமாகவும் இருந்தது; இன்றும் அந்த இரப்பர் தோட்டங்கள் உள்ளன.[1] குழிப்பந்தாட்ட மைதானங்கள், வானூர்தி நிலையங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள் இன்றுவரை நிலைக்கும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆகும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Info Simpang Renggam: The main jobs are as farmers, traders and government and private employees". Portal Rasmi Majlis Daerah Simpang Renggam (MDSR). 12 November 2015. பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.
  2. "Official Portal of Simpang Renggam District Council (MDSR)". Majlis Daerah Simpang Renggam (MDSR). பார்க்கப்பட்ட நாள் 29 March 2024.

வெளி இணைப்புகள்

தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்பாங்_ரெங்கம்&oldid=3918032" இலிருந்து மீள்விக்கப்பட்டது