லாயாங் லாயாங்

மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், குளுவாங் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்.

லாயாங் லாயாங், (மலாய்: Layang-Layang; ஆங்கிலம்: Layang-Layang; சீனம்: 拉央-拉央) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், குளுவாங் மாவட்டத்தில்; ஜொகூர் பாரு மாநகரத்திற்கு வடக்கே 72 கி.மீ.; குளுவாங் நகரத்திற்கு தெற்கே 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நகரம். இந்த நகரம் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ளது.

லாயாங் லாயாங்
Layang-Layang
 ஜொகூர்
Map
ஆள்கூறுகள்: 1°49′00″N 103°29′00″E / 1.81667°N 103.48333°E / 1.81667; 103.48333
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
நகரத் தோற்றம்1900-களில்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
81850

வரலாறு

தொகு

இந்த நகரம் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவாக்கப்பட்டது. மலாயா கம்யூனிஸ்டுகளுக்கும் பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கத்திற்கும் இடையிலான இராணுவ மோதலின் போது சீன மக்களுக்கான ஒரு புதிய கிராமமாக இந்த இடம் உருவாக்கப்பட்டது. காலப் போக்கில் அதுவே ஒரு நகரமாக மாறியது.[1]

1990-ஆம் ஆண்டுகள் வரை, லாயாங் லாயாங் சீனர் சமூகத்தின் பிரதான இடமாக இருந்தது. இருப்பினும் அண்மைய காலங்களில் சீன இளம் தலைமுறையினர் ஜொகூர் பாரு; கோலாலம்பூர்; சிங்கப்பூர் போன்ற நகரங்களில் குடியேறும் போக்கைக் கொண்டனர். அதனால் சீனர் சமூகத்தின் மக்கள் தொகையும் குறைந்தது.

பொருளாதாரம்

தொகு

லாயாங் லாயாங் நகரத்தின் பொருளாதாரம் ரப்பர், எண்ணெய்ப்பனைத் தோட்டங்கள் மற்றும் விவசாயத்தை மையமாகக் கொண்டு உள்ளது. தீபகற்ப மலேசியாவின் தென் பகுதியை இணைக்கும் பிரதான சாலையில் இருந்து இந்த லாயாங் லாயாங் நகரம் சற்றுத் தொலைவில் உள்ளது.

இருந்தாலும், இரயில் வழியான இணைப்பு அதன் வாழ்வாதாரத்திற்குக்கு ஒரு முக்கிய காரணமாக அமிகின்றது.

இந்தப் பகுதியில் நன்கு அறியப்பட்ட தோட்டங்களில் உலு ரெமிஸ் தோட்டம் ஒன்றாகும். 1960-ஆம் அண்டுகளில் கத்ரி நிறுவனத்திற்குச் சொந்தமாக இருந்தது. அண்மைய காலங்களில் செம்புராங் தோட்டம்; சி.இ.பி. ரெங்கம் தோட்டம் போன்ற தோட்டங்கள் சைம் டார்பி நிறுவனத்திற்குச் சொந்தமாகி உள்ளன. மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான பல சிறிய தோட்டங்களும் இங்கு உள்ளன.

லாயாங் லாயாங் தமிழ்ப்பள்ளிகள்

தொகு

லாயாங் லாயாங் சுற்று வட்டாரங்களில் நான்கு தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2020-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி அந்தப் பள்ளிகளில் 81 மாணவர்கள் பயின்றார்கள். 33 ஆசிரியர்கள் பணிபுரிந்தார்கள்.

பள்ளி
எண்
பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
வட்டாரம் மாணவர் ஆசிரியர்
JBD2033 SJK(T) Ladang Layang லாயாங் லாயாங் தமிழ்ப்பள்ளி லாயாங் லாயாங் 5 6
JBD2034 SJK(T) Ladang Ulu Remis உலு ரெமிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி லாயாங் லாயாங் 33 11
JBD2036 SJK(T) Ladang Sembrong செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி லாயாங் லாயாங் 18 8
JBD2049 SJK(T) Cep. Niyor Kluang சி.இ.பி. நியோர் தமிழ்ப்பள்ளி குளுவாங் 25 8

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாயாங்_லாயாங்&oldid=3930942" இலிருந்து மீள்விக்கப்பட்டது