இலாவாசு மாவட்டம்

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம்

இலாவாசு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Lawas; ஆங்கிலம்: Lawas District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; இலிம்பாங் பிரிவில் ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இலாவாசு நகரம்.[1]

இலாவாசு மாவட்டம்
Lawas District
சரவாக்
Location of இலாவாசு மாவட்டம்
இலாவாசு மாவட்டம் is located in மலேசியா
இலாவாசு மாவட்டம்
      இலாவாசு மாவட்டம்
      மலேசியா
ஆள்கூறுகள்: 01°27′34″N 110°29′56″E / 1.45944°N 110.49889°E / 1.45944; 110.49889
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுசமரகான் பிரிவு
மாவட்டம்இலாவாசு மாவட்டம்
நகரம்இலாவாசு நகரம்
உள்ளூராட்சிஇலாவாசு மாவட்டக் கழகம்
Majlis Daerah Lawas (MPL)
பரப்பளவு
 • மொத்தம்3,811.90 km2 (1,471.78 sq mi)
மக்கள்தொகை
 (2000)
 • மொத்தம்35,300
இனக்குழுக்கள்லுன் பாவாங், புரூணை மலாய் மக்கள், கெடாயன், இபான், சீனர், மற்றவர்கள்

லாவாசு மாவட்டம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

  • சுந்தர் துணை மாவட்டம் - Sundar Sub-District
  • துருசான் துணை மாவட்டம் - Trusan Sub-District

பொது

தொகு
 
லாவாஸ் மாவட்டம்

சரவாக் மாநிலத் தலைநகரான கூச்சிங்கில் இருந்து 120 கி.மீ. தொலைவிலும்; சபா மாநிலத் தலைநகரான கோத்தா கினபாலுவில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும் இந்த மாவட்டம் அமைந்து உள்ளது.

சமரகான் பிரிவின் மக்கள்தொகை கலாசார அடிப்படையில் ஒரு கலவையாக உள்ளது. பெரும்பாலும் லுன் பாவாங், இபான் மக்கள், புரூணை மலாய் மக்கள், சீனர் இனக்குழுவினர் மிகுதியாக வாழ்கின்றனர்.

இலாவாசு நகரம்

தொகு

காடுகளில் உள்ள காட்டு மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்வதும்; விவசாயமும் தான், இந்த நகரின் முக்கியமான பொருளாதார ஆதாரங்கள். பாகெலாலான் (Ba'Kelalan) எனப்படும், லாவாசு மேட்டு நிலப் பகுதிகளில் ஆப்பிள் சாகுபடி பரிசோதனை செய்யப்படுகிறது. சில இடங்களில் ஆப்பிள் அறுவடை செய்கிறார்கள்.

இலாவாசு மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்களை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மாநில அரசாங்கத்திடம் முன்மொழியப்பட்டுள்ளன.

இலாவாசு பகுதியில் நெல் சாகுபடி நிலத்தின் பெரும்பகுதி எண்ணெய்ப் பனைத் தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இலாவாசு வானூர்தி நிலையம்

தொகு

இலாவாசு நகரில் இலாவாசு வானூர்தி நிலையம் உள்ளது. இலாவாசு வாழ் மக்களுக்கு வானூர்திச் சேவை வழங்கப்படுகிறது (IATA: LWY). மிரி, பாகெலாலான் மற்றும் கோத்தா கினபாலு, சபா ஆகிய இடங்களுக்குச் செல்ல விமானங்கள் உள்ளன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Official Portal of the Sarawak Government". www.sarawak.gov.my.
  2. "Official Portal Ministry of Transportation, Malaysia. List of Airports".

இவற்றையும் பார்க்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாவாசு_மாவட்டம்&oldid=3650769" இலிருந்து மீள்விக்கப்பட்டது