ஜெர்த்தே
ஜெர்த்தே அல்லது செர்த்தே; (ஆங்கிலம்: Jerteh; அல்லது Jertih மலாய்: Bandar Jerteh) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், பெசுட் மாவட்டத்தில் (Besut District) உள்ள நகரம். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 90 கி.மீ. கி.மீ.; கோலா பெசுட் நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.[2]
ஜெர்த்தே | |
---|---|
Jerteh | |
திராங்கானு | |
ஆள்கூறுகள்: 5°45′N 102°30′E / 5.750°N 102.500°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | திராங்கானு |
மாவட்டம் | பெசுட் |
தொகுதி | ஜெர்த்தே |
பரப்பளவு | |
• மொத்தம் | 254 km2 (98 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 86,376 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 22000[1] |
மலேசியத் தொலைபேசி | +6-09-697 |
மலேசியப் போக்குவரத்து எண் | T |
இந்த நகரம் கிளாந்தான் மாநில எல்லைக்கு அருகில் உள்ளது. கம்போங் லாவில் (Kampong La) அமைந்துள்ள உலு பெசுட் (Hulu Besut) மற்றும் ஆயர் பனாஸ் லா (Air Panas La) ஆகிய சுற்றுலா இடங்களில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் உள்ள தெம்பாக்கா அருவிக்கு (Lata Tembakah) செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த ஜெர்த்தே நகரம் ஒரு நிறுத்துமிடமாக மாறியுள்ளது.
பொது
தொகுபெசுட் மாவட்டத்தின் தலைநகரம் கம்போங் ராஜா நகரம் (Kampung Raja), . இருப்பினும் பெசுட் மாவட்டத்தின் ஜெர்த்தே நகரம், கம்போங் ராஜா நகரத்தைவிட மிகவும் வளர்ச்சி அடைந்த நகரமாகத் திகழ்கின்றது.
ஜெர்த்தே நகரத்திற்கு அருகில் உள்ள மற்றொரு முக்கிய நகரம் மீன்பிடித் துறைமுகமான கோலா பெசுட் (Kuala Besut). தவிர சாபி (Jabi), அப்பால் (Apal), பாசிர் அகார் (Pasir Akar) மற்றும் தெம்பிலா (Tembila) போன்ற பிற சிறிய நகரங்களும் கிராமங்களும் இந்த ஜெர்த்தே நகரத்திற்கு அருகில் உள்ளன.
ஜெர்த்தே நகரத்திற்கு கிழக்கில் தென் சீனக்கடல்; வடக்கிலும் மேற்கிலும் கிளாந்தான் மாநிலம் எல்லைகளாக உள்ளன. இந்த நகரம்ம் திராங்கானு மாநிலத்தின் வடக்கு நுழைவாயிலாகவும் அமைகின்றது.
திராங்கானு மலாய் மொழி
தொகுஜெர்த்தே நகரத்தில் உள்ள பெரும்பாலான மலாய்க்காரர்கள், திராங்கானிய அடையாளத்தை விட (Terengganuan identity) கிளந்தானிய அடையாளத்துடன் (Kelantanese identity) தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். திராங்கானு மலாய் மொழிக்குப் (Terengganu Malay) பதிலாக அவர்கள் கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியை (Kelantanese Malay) பேச முனைகிறார்கள்.
ஜெர்த்தே நகரத்தில் வாழும் சீன மக்களைப் பொறுத்த வரையில், இவர்கள் ஜெர்த்தே நகருக்கு அருகில்தான் அதிக அளவில் வாழ்கின்றனர். நகர்ப்புறத்தை மையமாகக் கொண்டுள்ளனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jerteh, Jerteh - Postcode - 22000". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 27 May 2018.
- ↑ "Jerteh is the center or town in Besut district (Terengganu)". www.malaysiasite.nl. பார்க்கப்பட்ட நாள் 2 July 2023.
- ↑ "Guan Di Tan-Jerteh". My Time....Chinese temple in Malaysia. 17 March 2013. பார்க்கப்பட்ட நாள் 2 July 2023.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு