கோலா பெசுட்
கோலா பெசுட்; (ஆங்கிலம்: Kuala Besut; மலாய்: Kuala Besut) என்பது மலேசியா, திராங்கானு மாநிலத்தில், பெசுட் மாவட்டத்தில் (Besut District) உள்ள நகரம்; ஒரு முக்கிம். திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு (Kuala Terengganu) மாநகரில் இருந்து 107 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அமைதியான நகரம் தென்சீனக் கடல் கரையோரத்தில், தீபகற்ப மலேசியாவின் வடகிழக்கில் அமைந்துள்ளது.[2]
கோலா பெசுட் | |
---|---|
Kuala Besut | |
திராங்கானு | |
ஆள்கூறுகள்: 5°50′N 102°34′E / 5.833°N 102.567°E[1] | |
நாடு | மலேசியா |
மாநிலம் | திராங்கானு |
மாவட்டம் | பெசுட் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 22xxx |
மலேசியத் தொலைபேசி | +6-09-6 |
மலேசியப் போக்குவரத்து எண் | T |
கோலா பெசுட் துறைமுகப் பட்டினம், மலேசியாவின் மிக அழகான தீவுகளில் ஒன்றான பெர்கெந்தியான் தீவுகளின் (Perhentian Islands) நுழைவாயில் (Departure Point) என்று அழைக்கப்படுகிறது. பெர்கெந்தியான் தீவுகளுக்குச் செல்ல, வணிக ரீதியில் பல படகுத் துறைகள் கோலா பெசுட் துறைமுகப் பட்டினத்தில் இயங்குகின்றன. [பெர்கெந்தியான் தீவு]]களைப் பற்றிய நினைவுப் பொருட்களை விற்கும் சிறிய கடைகளும் கோலா பெசுட் நகரத்தின் முழுமைக்கும் உள்ளன.
பொது
தொகு1942 டிசம்பர் 10-ஆம் தேதி, மலாயாவை சப்பானியர்கள் தென்சீனக் கடல் வழியாக ஆக்கிரமிப்பு செய்த போது முதலில் கோத்தா பாருவில் தான் தரை இறங்கினார்கள். அடுத்தக் கட்டமாக திராங்கானுவின் தலைநகரான கோலா திராங்கானுவிற்குச் செல்வது அவர்களின் திட்டம்.
இருப்பினும் அதற்கு முன்னர் கோலா பெசுட் நகரத்தைக் கைப்பற்றினார்கள். ஏன் என்றால் கோலா பெசுட் நகரத்திற்கு அருகில்தான் கோங் கெடாக் இராணுவ வானூர்தி நிலையம் (Gong Kedak RMAF - Royal Malaysian Air Force) உள்ளது. ஆகவே வானூர்தி நிலையத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் கோலா பெசுட் நகரத்தைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கோங் கெடாக் இராணுவ வானூர்தி நிலையத்தை கைப்பற்றிய பின்னர் தான் கோலா திராங்கானுவின் மீது படை எடுத்தார்கள்.
காலநிலை
தொகுமாராங் ஒரு வெப்பமண்டல மழைக்காடு காலநிலையையும்; ஆண்டு முழுவதும் கனமான மழை பொய்வையும் கொண்டுள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், கோலா பெசுட் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 28.7 (83.7) |
29.5 (85.1) |
30.9 (87.6) |
32.0 (89.6) |
32.4 (90.3) |
32.0 (89.6) |
31.6 (88.9) |
31.4 (88.5) |
31.3 (88.3) |
30.6 (87.1) |
29.3 (84.7) |
28.6 (83.5) |
30.69 (87.25) |
தினசரி சராசரி °C (°F) | 25.6 (78.1) |
25.9 (78.6) |
26.8 (80.2) |
27.7 (81.9) |
28.1 (82.6) |
27.8 (82) |
27.4 (81.3) |
27.3 (81.1) |
27.2 (81) |
26.9 (80.4) |
26.2 (79.2) |
25.8 (78.4) |
26.89 (80.41) |
தாழ் சராசரி °C (°F) | 22.3 (72.1) |
22.4 (72.3) |
22.7 (72.9) |
23.5 (74.3) |
23.8 (74.8) |
23.6 (74.5) |
23.2 (73.8) |
23.2 (73.8) |
23.1 (73.6) |
23.2 (73.8) |
23.2 (73.8) |
23.0 (73.4) |
23.1 (73.58) |
மழைப்பொழிவுmm (inches) | 252 (9.92) |
116 (4.57) |
125 (4.92) |
80 (3.15) |
118 (4.65) |
137 (5.39) |
119 (4.69) |
190 (7.48) |
224 (8.82) |
288 (11.34) |
535 (21.06) |
621 (24.45) |
2,805 (110.43) |
ஆதாரம்: Climate-Data.org[3] |
காட்சியகம்
தொகு-
கோலா பெசுட் படகுதுறை
-
கோலா பெசுட் ஆறு
மேற்கோள்கள்
தொகு- ↑ "KAMPUNG RAJA, BESUT". Find Latitude and Longitude (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2 July 2023.
- ↑ Travellers, Bucket List (9 February 2023). "Kuala Besut is a convenient place for a quick stop-over on the way to the Perhentian Islands. This quiet town is located in the north east of Peninsular Malaysia on the South China Sea". Bucket List Travellers (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 July 2023.
- ↑ "காலநிலை: கோலா பெசுட்". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 28 October 2020.
- Nawanit Yupho (1989). "Consonant Clusters and Stress Rules in Pattani Malay". Mon-Khmer Studies 15: 125–137. http://sealang.net/sala/archives/pdf8/nawanit1986consonant.pdf.