பாசிர் பூத்தே மாவட்டம்

மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம்

பாசிர் பூத்தே மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Pasir Puteh; ஆங்கிலம்: Pasir Puteh District; சீனம்: 巴西富地县; ஜாவி: ڤاسير ڤوتيه‎‎;) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பாசிர் பூத்தே எனும் பெயரில் ஒரு நகரமும் உள்ளது. மலேசிய மக்களவைத் தொகுதியின் பெயரும் பாசிர் பூத்தே.

பாசிர் பூத்தே
Pasir Puteh District
மாவட்டம்
பாசிர் பூத்தே-இன் கொடி
கொடி
பாசிர் பூத்தே is located in மலேசியா
பாசிர் பூத்தே
பாசிர் பூத்தே
      பாசிர் பூத்தே மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°50′N 102°24′E / 5.833°N 102.400°E / 5.833; 102.400
நாடு மலேசியா
மாநிலம் கிளாந்தான்
மாவட்டம் பாசிர் பூத்தே மாவட்டம்
தொகுதிபாசிர் பூத்தே
உள்ளூராட்சிபாசிர் பூத்தே ஊராட்சி
அரசு
 • மாவட்ட அதிகாரிஅப்துல் பத்தா அசுபுல்லா[1]
பரப்பளவு
 • மொத்தம்433.8 km2 (167.5 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,17,383
அஞ்சல் குறியீடு
16xxx
தொலைபேசி எண்கள்+6-09
போக்குவரத்துப் பதிவெண்கள்D

கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவின் தெற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் செமாராக் ஆற்றின் (Semerak River) கரையில் பாசிர் பூத்தே நகரம் அமைந்துள்ளது. அதே சமயத்தில் பாசிர் பூத்தே மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் தென்கிழக்கில் எல்லையாக உள்ளது.

வரலாறு

தொகு

இந்த நகரம் பாசிர் பூத்தே என்று அழைக்கப் படுவதற்கு முன்பு, பங்காலான் லிம்போங்கான் (Pangkalan Limbungan) என்று அழைக்கப்பட்டது. கிளாந்தான் சுல்தான் நான்காம் முகமது (Sultan Muhammad IV) இங்கு வருகை தந்த பிறகு, பாசிர் பூத்தே நகரம் அதன் பெயரைப் பெற்றது.

செமாராக் ஆற்றின் கரையோரங்களில் பளபளக்கும் வெண்மணலைப் பார்த்து சுல்தான் முகம்மது ஈர்க்கப் பட்டார். 1911-ஆம் ஆண்டில், சுல்தான் இந்த இடத்தின் பெயரை பாசிர் பூத்தே என்று அறிவித்தார். பாசீர் பூத்தே என்பது ஒரு மலாய்ச் சொல். வெள்ளை மணல் என்று பொருள்.

மக்கள் தொகையியல்

தொகு
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1991 96,348—    
2000 1,04,404+8.4%
2010 1,13,191+8.4%
2020 1,36,157+20.3%
ஆதாரம்: [3]

2020-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி பாசிர் பூத்தே மாவட்டத்தின் மக்கள்தொகை 136157. பெரும்பான்மையினர் கிளாந்தான் மலாய் மக்கள்.

நிலை மாவட்டம்/முக்கிம் மக்கள் தொகை 2000
1 செமராக் 21,670
2 புக்கிட் ஜாவா 19,329
3 லிம்போங்கான் 14,164
4 பாடாங் பாக் அமாட் 13,360
5 புக்கிட் அபால் 10,624
6 கோங் டத்தோ 8,721
7 ஜெராம் 8,552
8 புக்கிட் அவாங் 7,984

மேற்கோள்கள்

தொகு
  1. "Perutusan Ketua Jajahan - Laman Web Rasmi Pejabat Tanah Dan Jajahan Pasir Puteh". ptjpp.kelantan.gov.my. Archived from the original on November 30, 2018.
  2. "Latar Belakang - Laman Web Rasmi Pejabat Tanah Dan Jajahan Pasir Puteh". ptjpp.kelantan.gov.my. Archived from the original on November 30, 2018.
  3. "TABURAN PENDUDUK MENGIKUT PBT & MUKIM 2010". Department of Statistics, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிர்_பூத்தே_மாவட்டம்&oldid=4026878" இலிருந்து மீள்விக்கப்பட்டது