பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி

பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pasir Puteh; ஆங்கிலம்: Pasir Puteh Federal Constituency; சீனம்: 巴西富地国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், பாசிர் பூத்தே மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P028) ஆகும்.[8]

பாசிர் பூத்தே (P028)
மலேசிய மக்களவைத் தொகுதி
கிளாந்தான்
Pasir Puteh (P028)
Federal Constituency in Kelantan
பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி
(P028 Pasir Puteh)
மாவட்டம் பாசிர் பூத்தே
கிளாந்தான்
வாக்காளர்களின் எண்ணிக்கை113,570 (2023)[1][2]
வாக்காளர் தொகுதிபாசிர் பூத்தே தொகுதி
முக்கிய நகரங்கள்பாசிர் பூத்தே, செமராக், புக்கிட் ஜாவா
பரப்பளவு423 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்நிக் முகமது சவாவி சாலே
(Nik Muhammad Zawawi Salleh)
மக்கள் தொகை135,823 (2020)[4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6][7]

  மலாயர் (99.1%)
  சீனர் (0.5%)
  இதர இனத்தவர் (0.3%)

பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]

பாசிர் பூத்தே

தொகு

பாசிர் பூத்தே நகரம் கிளாந்தான் மாநிலத்தின் வட கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் கோத்தா பாருவின் தெற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் செமாராக் ஆற்றின் (Semerak River) கரையில் பாசிர் பூத்தே நகரம் அமைந்துள்ளது. அதே வேளையில் பாசிர் பூத்தே மாவட்டம் திராங்கானு மாநிலத்தின் தென்கிழக்கில் எல்லையாக உள்ளது.

பாசிர் பூத்தே வரலாறு

தொகு

இந்த நகரம் பாசிர் பூத்தே என்று அழைக்கப் படுவதற்கு முன்பு, பங்காலான் லிம்போங்கான் (Pangkalan Limbungan) என்று அழைக்கப்பட்டது. கிளாந்தான் சுல்தான் நான்காம் முகமது (Sultan Muhammad IV) இங்கு வருகை தந்த பிறகு, பாசிர் பூத்தே நகரம் அதன் தற்போதைய பெயரைப் பெற்றது.

செமாராக் ஆற்றின் கரையோரங்களில் பளபளக்கும் வெண்மணலைப் பார்த்து சுல்தான் முகம்மது ஈர்க்கப் பட்டார். 1911-ஆம் ஆண்டில், சுல்தான் இந்த இடத்தின் பெயரை பாசிர் பூத்தே என்று அறிவித்தார். பாசீர் பூத்தே என்பது ஒரு மலாய்ச் சொல். வெள்ளை மணல் என்று பொருள்.

பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதி

தொகு
பாசிர் பூத்தே மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1958-ஆம் ஆண்டில் பாசிர் பூத்தே தொகுதி உருவாக்கப்பட்டது
மலாயா கூட்டமைப்பின் நாடாளுமன்றம்
1-ஆவது மலாயா மக்களவை P022 1959–1963 முகமது அசுரி மூடா
(Mohamed Asri Muda)
மலேசிய இசுலாமிய கட்சி
மலேசிய நாடாளுமன்றம்
1-ஆவது மலேசிய மக்களவை P022 1963–1964 முகமது அசுரி மூடா
(Mohamed Asri Muda)
மலேசிய இசுலாமிய கட்சி
2-ஆவது மக்களவை 1964–1969
1969–1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[10][11]
3-ஆவது மக்களவை P022 1971–1973 வான் சுலைமான் இப்ராகிம்
(Wan Sulaiman Ibrahim)
மலேசிய இசுலாமிய கட்சி
1973–1974 பாரிசான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
4-ஆவது மக்களவை P025 1974–1978 பாரிசான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
5-ஆவது மக்களவை 1978–1982 வான் முகமது நஜிப் வான் முகமது
(Wan Mohd. Najib Wan Mohamad)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P024 1986–1990 வான் உமர் வான் மஜித்
(Wan Omar Wan Majid)
8-ஆவது மக்களவை 1990–1995 செமாங்காட் 46
9-ஆவது மக்களவை P028 1995–1999 முகமது அப்துல்லா
(Mohamed Abdullah )
10-ஆவது மக்களவை 1999–2004 அல்வி ஜூசோ
(Alwi Jusoh)
மாற்று முன்னணி
(மலேசிய இசுலாமிய கட்சி)
11-ஆவது மக்களவை 2004 Kalthom Othman
(Kalthom Othman)
மலேசிய இசுலாமிய கட்சி
2004–2008 சே மின் சே அகமது
(Che Min Che Ahmad)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013 Muhammad Husin
(Muhammad Husin)
பாக்காத்தான் ராக்யாட்
(மலேசிய இசுலாமிய கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2018 நிக் மசியான் நிக் முகமட்
(Nik Mazian Nik Mohamad)
14-ஆவது மக்களவை 2018–2020 நிக் முகமது சவாவி சாலே
(Nik Muhammad Zawawi Salleh)
மலேசிய இசுலாமிய கட்சி
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

பாசிர் பூத்தே மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
113,070
வாக்களித்தவர்கள்
(Turnout)
82,228 73.03% - 8.63%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
81,319 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
237
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
1,020
பெரும்பான்மை
(Majority)
29,120 35.94%   + 33.94
வெற்றி பெற்ற கட்சி மலேசிய இசுலாமிய கட்சி
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[12]

பாசிர் பூத்தே வேட்பாளர் விவரங்கள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
மலேசிய இசுலாமிய கட்சி நிக் முகமது சவாவி சாலே
(Nik Muhammad Zawawi Salleh)
81,319 53,108 65.37% + 17.96%  
பாரிசான் நேசனல் சவாவி ஒசுமான்
(Zawawi Othman)
- 23,988 29.43% - 15.98 %
பாக்காத்தான் அரப்பான் முகமது உசின்
(Muhammad Husin)
- 3,873 4.77% - 2.41 %
தாயக இயக்கம் வான் மர்சுடி வான் உமர்
(Wan Marzudi Wan Umar)
- 350 0.43% + 0.43%  

மேற்கோள்கள்

தொகு
  1. "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  7. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  8. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  9. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
  10. Ahmad Fauzi Mustafa (2012-03-12). "Hanya Yang di-Pertuan Agong ada kuasa panggil Parlimen bersidang". Utusan Online இம் மூலத்தில் இருந்து 2016-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160604045153/http://ww1.utusan.com.my/utusan/info.asp?y=2012&dt=0312&pub=Utusan_Malaysia&sec=Rencana&pg=re_05.htm. 
  11. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-18.
  12. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு