பாகோ
பாகோ (மலாய்: Pagoh; ஆங்கிலம்: Pagoh; சீனம்: 巴果); என்பது மலேசியா, ஜொகூர், மூவார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். மூவார் நகரில் இருந்து 21 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து சுமார் 154 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1]
பாகோ | |
---|---|
Pagoh | |
ஜொகூர் | |
ஆள்கூறுகள்: 2°9′0″N 102°46′0″E / 2.15000°N 102.76667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | மூவார் |
அரசு | |
• வகை | மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் |
• நிர்வாகம் | மூவார் நகராட்சி மன்றம் (Muar Municipal Council) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 84xxx |
தொலைபேசி எண் | +6-07 |
போக்குவரத்துப் பதிவெண் | J |
தீபகற்ப மலேசியாவின் மேற்குக் கடற்கரையில் உள்ள முக்கிய விரைவுச் சாலையான வடக்கு-தெற்கு விரைவுசாலையில் உள்ள முக்கியச் சாலைப் பரிமாற்றங்களில் வழியாகப் பாகோவிற்குச் செல்லலாம்.
இந்த நகரம் மூவார்-லாபிஸ் (J32) சாலை (Jalan Muar-Labis); பாகோ-பாரிட் சூலோங் (J23) சாலை (Jalan Pagoh-Parit Sulong); ஆகிய இரண்டு முக்கிய சாலைகளால் இணைக்கப்பட்டு உள்ளது.
அருகில் உள்ள நகரங்கள்
தொகு- மூவார் (Muar Town)
- பாரிட் ஜாவா (Parit Jawa)
- பாரிட் சூலோங் (Parit Sulong)
- பக்ரி (Bakri)
- சுங்கை பாலாங் (Sungai Balang)
- புக்கிட் கெப்போங் (Bukit Kepong)
- புக்கிட் பாசிர் (Bukit Pasir)
- பஞ்சூர் (Panchor)
- லெங்கா (Lenga)
- ஜாலான் பக்ரி (Jalan Bakri)
- புக்கிட் நானிங் (Bukit Naning)
மலேசிய நாடாளுமன்றம்
தொகுமலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) பாகோ நாடாளுமன்றத் தொகுதியில், மலேசியாவின் 8-ஆவது பிரதமர் முகிதீன் யாசின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
நாடாளுமன்றம் | தொகுதி | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P143 | பாகோ | முகிதீன் யாசின் | பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்.) |
காட்சியகம்
தொகு-
பாகோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம்
-
பாகோவில் உள்ள மூவார்-லாபிஸ் சாலை
-
பாகோ சந்திப்பு
-
லனாட்ரோன் தோட்டத் தமிழ்ப்பள்ளி
தமிழ்ப்பள்ளிகள்
தொகுஜொகூர், மூவார் மாவட்டம், பாகோ நகருக்கு அருகில் இருக்கும் பஞ்சூர் நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி. ஜொகூர் மாநிலத்தில் தோற்றுவிக்கப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி எனும் பெருமையும் இந்தப் பள்ளிக்கு உண்டு. இந்தப் பள்ளியில் 152 மாணவர்கள் பயில்கிறார்கள். 27 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பாகோ நகரின் புறநகர்ப் பகுதியில் மேலும் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் பன் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி. இந்தப் பள்ளியில் 7 மாணவர்கள் பயில்கிறார்கள். 8 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். பன் ஹெங் தோட்டத்தில் பணிபுரிந்த தமிழர்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு மாறிச் செல்வதால், இந்தப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருகிறது. தக்க நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை என்றால் இந்தப் பள்ளியும் மூடப் படலாம்.
மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[2]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|
JBD5084 | பஞ்சூர் | SJK(T) Ladang Lanadron[3] | லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி | பஞ்சூர் | 154 | 17 |
JBD5087 | பன் ஹெங் தோட்டம் | SJK(T) Ladang Ban Heng[4] | பன் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | பாகோ | 7 | 8 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Pagoh is a large town located in Muar district, Johor, Malaysia. The location is about 21 kilometers from Muar town. It is connected by two main roads namely Jalan Muar-Labis and Jalan Pagoh-Parit Sulong. This large town has an elevated junction for the North South Highway". heritagemalaysia.my. பார்க்கப்பட்ட நாள் 26 November 2022.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
- ↑ "ஜொகூர் மாநிலத்தின் முதல் தமிழ்ப் பள்ளி லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி". AKTIVITI SJK TAMIL LANADRON 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
- ↑ "பன் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SRJK (T) Ladang Ban Heng Ditubuhkan pada tahun 1947". www.sjktladangbanheng.yolasite.com.
வெளி இணைப்புகள்
தொகு