பஞ்சூர்
பஞ்சூர் (மலாய்; ஆங்கிலம்: Panchor; சீனம்: 班卒); என்பது மலேசியா, ஜொகூர், மூவார் மாவட்டத்தில், மூவார் ஆற்றின் அருகே அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும்.
பஞ்சூர் | |
---|---|
Panchor | |
ஜொகூர் | |
ஆள்கூறுகள்: 2°09′43″N 102°43′28″E / 2.16194°N 102.72444°E[1] | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | மூவார் மாவட்டம் |
அரசு | |
• வகை | மலேசிய உள்ளாட்சி மன்றங்கள் |
• நிர்வாகம் | மூவார் நகராட்சி |
மக்கள்தொகை (2023) | |
• மொத்தம் | 5,000++ |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 84500[2] |
தொலைபேசி எண் | +6-07 |
போக்குவரத்துப் பதிவெண் | JXX |
பஞ்சூர் முன்பு ஒரு பரபரப்பான ஆற்றுத் துறைமுகமாக இருந்தது. அதன் உள்பகுதியில் இருந்து வேளாண் உற்பத்திப் பொருட்கள்; மற்றும் தோட்ட உற்பத்திப் பொருட்களான அரிசி, செம்பனை, இரப்பர் போன்றவை படகுகளில் ஏற்றப்பட்டு மூவார் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
பொது
தொகு1970-களில் சாலை அமைப்புகள் மேம்படத் தொடங்கின. அதன் பின்னர், 1980-களில் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் கட்டுமானத்துடன் பஞ்சூரில் ஆறுகளின் போக்குவரத்து வெகுவாகக் குறைந்தன. அதனுடன் பஞ்சூர் நகரத்தின் முக்கியத்துவமும் குறைந்துவிட்டது.
இருப்பினும், அண்மைய காலத்தில் நகரத்தின் அருகாமையில் சில தொழில்துறைப் பூங்காக்கள் திறக்கப்பட்டதும்; நகரத்தின் மக்கள்தொகை சற்றே கூடியது; மற்றும் அதன் பொருளாதாரத்தில் ஒரு சிறிய மறுமலர்ச்சியும் ஏற்பட்டது.
2006-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும்; 2007-ஆம் ஆண்டின் முற்பகுதியிலும், கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத ஒரு வெள்ளம் ஏற்பட்டது. ஜொகூர் மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தால் பஞ்சூர் நகரமும் பாதிக்கப்பட்டது.
வரலாறு
தொகுபஞ்சூர் லனாட்ரோன் தோட்டம்
தொகுமலாயாவில் மிகப் பழைமையான இரப்பர் தோட்டங்களில் ஜொகூர், மூவார், பஞ்சூர், லனாட்ரோன் தோட்டமும் ஒன்றாகும். லனாட்ரோன் தோட்டத்திற்கு 1881-ஆம் ஆண்டில் 22 தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். அதே ஆண்டில் மலாயாவுக்கு 3670 தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.[3]
ஜொகூர் மாநிலத்தின் முதல் தமிழ்ப்பள்ளி லனாட்ரோன் தோட்டத்தில் 1903-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப் பட்டது.[4] 1881-ஆம் ஆண்டில் காபித் தோட்டமாக உருவெடுத்த லனாட்ரோன் தோட்டம் 1897-ஆம் ஆண்டு இரப்பர் தோட்டமாக மாற்றம் கண்டது. அதற்கு பியர்ஸ் தோட்டம் (Pears estate) என்று பெயர் வைக்கப்பட்டது.
முதலில் இந்தத் தோட்டத்தில் 1500 ஏக்கரில் இரப்பர் பயிரிடப்பட்டது. பின்னர் 1903-ஆம் ஆண்டு மேலும் 500 ஏக்கருக்கு விரிவு செய்யப்பட்டது. தோட்டத்தின் 732 தொழிலாளர்களில் 450 தமிழர்கள்; 60 சீனர்கள்; 100 மலாய்க்காரர்கள்; 150 ஜாவானியர்கள் வேலை செய்தனர்.[3]
லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி
தொகுஜொகூர்; மூவார் மாவட்டத்தின் பஞ்சூர் நகர்ப்பகுதியில் லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் 69 மாணவர்கள் பயில்கிறார்கள். 23 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[5] மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[6]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
JBD5084 | பஞ்சூர் | SJK(T) Ladang Lanadron[7] | லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி | 84500 | பஞ்சூர் | 69 | 23 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Longitude latitude in Panchor, Johor, Malaysia GPS coordinates". www.longitude-latitude-maps.com. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
- ↑ "Panchor, Johor Postcode List - Page 1 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
- ↑ 3.0 3.1 Wright, Arnold (1908). Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources. London: Lloyd's Greater Britain Publishing Company. p. 363.
- ↑ "LANADRON ESTATE TAMIL NATIONAL TYPE SCHOOL, PANCHOR, MUAR was established in 1903 with the name LANADRON ESTATE PRIMARY TAMIL SCHOOL by the riverside of Ladang Lanadron, Panchor". SEKOLAH TAMIL LANADRON. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
- ↑ "SJK(T) Ladang Lanadron - The Community Chest". commchest.org.my. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
- ↑ "Senarai Sekolah Rendah Kementerian Pendidikan Malaysia - MAMPU". archive.data.gov.my (in ஆங்கிலம்). Malaysia Education Ministry. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
- ↑ "ஜொகூர் மாநிலத்தின் முதல் தமிழ்ப் பள்ளி லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி". AKTIVITI SJK TAMIL LANADRON 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Bukit Bakri தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.