செம்போல் நகரம்
செம்போல் நகரம் அல்லது பண்டார் ஜெம்போல் (மலாய்; ஆங்கிலம்: Bandar Seri Jempol; சீனம்: 斯里仁保镇) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் செம்போல் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம். இந்த நகரம் 1980-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரமாகும்.[2]
செம்போல் நகரம் (பண்டார் ஜெம்போல்) | |
---|---|
Bandar Seri Jempol | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°54′41.71″N 102°23′28.6″E / 2.9115861°N 102.391278°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | செம்போல் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 72120[1] |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 06458 0000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
இந்த நகரத்தின் பழைய பெயர் செர்த்திங் (Serting). அதிகாரப்பூர்வமாக பண்டார் ஜெம்போல் என்று இந்த நகரம் அழைக்கப்பட்டாலும் இங்கு வாழும் மக்களில் பெரும்பாலோர் செர்த்திங் என்றே அழைக்கின்றனர்.
பொது
தொகுசெம்போல் மாவட்டத்தின் இரு முக்கிய நகரங்களில் செம்போல் நகரமும் ஒன்றாகும். மற்றொரு முக்கியமான நகரம் பகாவ்.
கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 137 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து கிழக்கே 70 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. மிக அருகாமையில் உள்ள நகரம் பகாவ் நகரம். 21 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
போக்குவரத்து
தொகு- நெடுஞ்சாலை (Malaysia Federal Route 10); செம்போல் நகரத்திற்கான முக்கிய சாலையாகும். இந்தச் சாலை பகாவ் நகரத்தின் வழியாக செம்போல் நகரத்தை அடைந்து பின்னர் பகாங் தெமர்லோ நகரத்தை அடைகிறது.
- பெரா நெடுஞ்சாலை (Bera Highway) ; செம்போல் பகுதியைக் கிழக்கு - மேற்குத் திசையாக வெட்டிச் செல்கிறது. இந்தச் சாலை செம்போல் நகரில் தொடங்கி, பின்னர் தெற்கு பகாங்கில் உள்ள பண்டார் துன் அப்துல் ரசாக் நகரத்திற்கு அருகே முடிவு அடைகிறது.
- நெடுஞ்சாலை (Malaysia Federal Route 13); கோலா பிலா தொகுதியில் பகாவ் நகரத்தையும் சுவாசே நகரத்தையும் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலைவழியாக செம்போல் நகரத்தை அடையலாம்.
- பகாவ் தொடருந்து நிலையம் தான், இந்த செம்போல் நகரத்திற்கும் செம்போல் மாவட்டத்திற்கும் சேவை செய்யும் முதன்மை தொடருந்து நிலையம் ஆகும்.
செம்போல் தமிழ்ப்பள்ளிகள்
தொகுநெகிரி செம்பிலான், செம்போல் மாவட்டத்தின் செம்போல் நகரச் சுற்றுவட்டாரப் பகுதியில் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 176 மாணவர்கள் பயில்கிறார்கள். 28 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்: [3]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
NBD6002 | ஆயர் ஈத்தாம் தோட்டம் | SJK(T) Ladang Air Hitam[4][5] | ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 72120 | பண்டார் ஸ்ரீ செம்போல் | 91 | 14 |
NBD6003 | கெடிஸ் தோட்டம் | SJK(T/Te) Ladang Geddes | கெடிஸ் தோட்டத் தமிழ் தெலுங்கு பள்ளி | 72120 | பண்டார் ஸ்ரீ செம்போல் | 85 | 14 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bandar Seri Jempol, Negeri Sembilan". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 29 January 2024.
- ↑ Volunteers, Author Museum (3 June 2023). "Jempol was declared a district on 1 January 1980. Then on 29 January 2019, the status was upgraded to a municipal council, the fourth municipal council in Negeri Sembilan". Museum Volunteers, JMM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 January 2024.
{{cite web}}
:|first1=
has generic name (help) - ↑ "மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் - Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-11-28.
- ↑ "ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah Jenis Kebangsaan Tamil Ayer Hitam". பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ "ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி". பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.