பண்டார் பாரு பாங்கி

பண்டார் பாரு பாங்கி (ஆங்கிலம்; Bandar Baru Bangi; மலாய்: Bandar Baru Bangi) (BBB) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 25 கி.மீ., தொலைவில்; காஜாங் நகரத்திற்கும் புத்ராஜெயா நகரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.[1]

பண்டார் பாரு பாங்கி
Bandar Baru Bangi
பண்டார் பாரு பாங்கி இவோ பேரங்காடி சிலாங்கூர்
பண்டார் பாரு பாங்கி இவோ பேரங்காடி
சிலாங்கூர்
Map
ஆள்கூறுகள்: 2°57′N 101°46′E / 2.950°N 101.767°E / 2.950; 101.767
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்உலு லங்காட் மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
43650
மலேசிய தொலைபேசி எண்03
போக்குவரத்துப் பதிவெண்கள்B
இணையதளம்http://www.mpkj.gov.my

முன்பு இந்த இடத்தில் பிராங் பெசார் ரப்பர் தோட்டம் இருந்தது. பண்டார் பாரு பாங்கி உருவாக்கத்தின் போது அந்தத் தோட்டமும்; பண்டார் பாரு பாங்கி மேம்பாட்டுத் திட்டங்களுக்காகக் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் தெற்கே அமைந்துள்ள சிறிய நகரமான பாங்கியின் பெயரால் இந்த நகரத்திற்கும் பெயரிடப்பட்டது.[2]


பொது

தொகு

பல்கலைக்கழகங்கள்

தொகு

பண்டார் பாரு பாங்கி, காஜாங் நகரத்தின் துணை நகரமாகவும்; மத்திய வணிக மாவட்டமாகவும் செயல்படுகிறது. பெரும்பாலான வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இந்த நகரத்திற்'கு வெளியே செயல்படுகின்றன.

மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (National University of Malaysia) உட்பட ஏராளமான பல்கலைக்கழகங்கள் இங்கு அமைந்து உள்ளதால், 2008-ஆம் ஆண்டு முதல் பண்டார் பாரு பாங்கி நகரம் பாங்கி அறிவுசார் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. தெனாகா நேசனல் பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பிற பொதுப் பல்கலைக்கழகங்களும் இந்த நகரத்திற்கு மிக அருகிலேயே உள்ளன.[3][4]

பல்வகை உணவகங்கள்

தொகு

இந்த நகரத்தின் பெயர் பொதுவாக "பிபிபி" என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. 2016-ஆம் ஆண்டு நிலவரப்படி, நகரத்தில் 16 நகரப் பிரிவுகள் உள்ளன. அதிகாரப்பூர்வ நகரப் பிரிவாக இல்லாவிட்டாலும், புதிய காஜாங்2 நகரம் அருகாமையில் இருப்பதால், பண்டார் பாரு பாங்கி நகரமும் விரிவாக்கம் அடைந்து வருகிறது.

இந்த நகரம் உணவகங்களுக்குப் பிரபலமானது. இங்கு மாமாக் உணவகங்கள் (Mamak Stalls), கடல் உணவு உணவகங்கள், மலேசிய உணவு வகை உணவகங்கள், தாய்லாந்து உணவகங்கள், அரபு உணவகங்கள் மற்றும் ஜப்பானிய உணவகங்களும் உள்ளன. அத்துடன் பல இரவுச் சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், பேரங்காடிகள் மற்றும் தங்கும் விடுதிகளும் உள்ளன.

பண்டார் பாரு பாங்கி, பன்னாட்டு நகர்ப்புற நிபுணரும் கட்டிடக் கலைஞருமான மார்ட்டின் ஜோன்ஸ் (Martin Jones) என்பவரால் திட்டமிடப்பட்டது. இப்போது இந்த நகரம் புதிய நகரமான பாங்கி புறநகர்ப் பகுதியில் முக்கிய வணிக மையமாகத் திகழ்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Shaharir, Syahrul Sazli (1 February 2021). "Bangi New Town Development". Cebisan Sejarah Bangi. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.
  2. "Bandar Baru Bangi originates from a palm oil plantation (West Country Estate) with an area of 5,118 acres and was first developed in 1974 after the land acquisition process was made by the Selangor State Government". Bangi. 28 September 2010. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.
  3. "Facts & Figures". Universiti Kebangsaan Malaysia (UKM). Archived from the original on 12 February 2023. பார்க்கப்பட்ட நாள் 12 February 2023.
  4. Association of Universities of Asia and the Pacific பரணிடப்பட்டது 9 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம் AUAP

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டார்_பாரு_பாங்கி&oldid=3956706" இலிருந்து மீள்விக்கப்பட்டது