காஜாங்2
காஜாங்2 (ஆங்கிலம், மலாய்: Kajang2) என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள ஒரு புதிய குடியிருப்பு நகரம் ஆகும். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 22 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது.[1]
காஜாங் 2, ரெகோ சாலைக்கு (Jalan Reko) அருகில், பண்டார் பாரு பாங்கி, (Bandar Baru Bangi) செக்சன் 5-க்கு எதிரே அமைந்துள்ளது. எனவே இந்த நகரம் பெரும்பாலும் பண்டார் பாரு பாங்கியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.[2]
பொது
தொகுஇந்த நகரம் எம்.கே.எச்.பெர்காட் (MKH Berhad) எனும் நிறுவனத்தால் 2020-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. காஜாங் நகரத்தின் மத்திய வணிக மாவட்டமாகவும்; ஒருங்கிணைந்த குடியிருப்பு நகரமாகவும் வடிவமைக்கப்பட்டது. இந்த நகரத்தைக் கட்டி முடிக்க RM 5.7 பில்லியன் செலவானது.[3]
கொமுட்டர் நிலையம்
தொகுஇந்த நகரத்தில் அதற்கே உரிய சொந்த உள்கட்டமைப்பு உள்ளது. இந்த நகரம் தனிப்பட்ட வகையில் சொந்தமாக உள்ள கொமுட்டர் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த நகரத்திற்கு என்றே தனியாக ஒரு கொமுட்டர் நிலையம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையத்தை எம்.கே.எச்.பெர்காட் நிறுவனம் RM 70 மில்லியன் செலவில் கட்டி கொடுத்தது.[4]。
மேற்கோள்கள்
தொகு- ↑ Wolfram Alpha - Kajang2 - Kuala Lumpur Malaysia Distance. (09.01.2015)
- ↑ "An integrated development designed to be the next central business district of Kajang, Kajang 2 is an award-winning integrated township; Bandar Baru Bangi". MKH Berhad. 9 January 2019. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.
- ↑ "MKH Berhad's Kajang 2 designed as to embody the very essence of smart cities". Kajang 2 Township by MKH Berhad. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.
- ↑ "KTM STATION KAJANG 2". Swan & Maclaren (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-12.