கோலா கெட்டில்
கோலா கெட்டில் (Kuala Ketil) மலேசியா, கெடா மாநிலத்தில் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் நகரம். இந்த நகரத்தைக் கோலா அன்சோதில் (Kuala Ansotil) என்றும் அங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள். கெடா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் பாலிங் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இந்த நகரம் அமைந்து உள்ளது.
கோலா கெட்டில்
Kuala Ketil கோலா அன்சோதில் | |
---|---|
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
உருவாக்கம் | 1900 |
நேர வலயம் | மலேசிய நேரம் |
• கோடை (பசேநே) | ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | http://www.kualaketil.com |
அண்மைய காலங்களில் பாலிங் வட்டாரத்தில் ஒரு முக்கிய பொருளாதாரப் பகுதியாகவும் விளங்கி வருகிறது. சுங்கை பட்டாணி நகரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள இந்த நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் ஏராளமான செம்பனைத் தோட்டங்கள் இருக்கின்றன. முன்பு அவை ரப்பர்த் தோட்டங்களாகும்.
கோலா கெட்டில் தமிழர்கள்
தொகு1900-ஆம் ஆண்டுகளில் அந்த ரப்பர்த் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆயிரக் கணக்கான தமிழர்கள், தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். அவர்கள் வேலை செய்த ரப்பர்த் தோட்டங்களில் தமிழ்ப் பள்ளிகளை உருவாக்கி இருக்கிறார்கள். சில தோட்டங்களில் நூல் நிலையங்களையும் தோற்றுவித்து அங்கு தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளை ஆண்டு தோறும் கொண்டாடி இருக்கிறர்கள்.
சில தமிழர்ச் சமூக அமைப்புகளும் தோற்றுவிக்கப்பட்டன. மேடை நாடகங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டு உள்ளன. மலாயா தமிழர்களின் வரலாற்றில் கோலா கெட்டில் தமிழர்களுக்குத் தனி ஓர் இடம் உண்டு. சுற்று வட்டாரத் தோட்டங்களில் இருந்து பல தமிழ் எழுத்தாளர்கள்; கவிஞர்கள், கல்விமான்கள் உருவாகி இருக்கிறார்கள். இன்றும் மலேசியத் தமிழ் எழுத்துலகில் வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
தமிழ்ப்பள்ளிகள்
தொகுபெடனோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang Badenoch[1][2]
பிஞ்ஜோல் தமிழ்ப்பள்ளி - SJKT Binjol[3]
புக்கிட் செம்பிலான் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ldg Bukit Sembilan [4]
பத்து பெக்காக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ldg Batu Pekaka[5]
கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Katumba[6]
கோல கெட்டில் தமிழ்ப்பள்ளி - SJKT Ldg Kuala Ketil[7]
கிம் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ldg Kim Seng[8]
மாலகோப் தமிழ்ப்பள்ளி - SJKT Ldg Malakoff[9]
தொழில்துறை வளாகம்
தொகுஇந்தப் பகுதியில் வணிகம் ஒரு முக்கியத் தொழில். இந்த நகரத்திற்கு அருகில் உள்ள தோட்டங்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருள்களை வழங்குவதில் இந்த நகரம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
1993-ஆம் ஆண்டில் கோலா கெட்டில் தொழில்துறை வளாகம் (Taman Perindustrian Kuala Ketil) என அழைக்கப்படும் கோலா கெட்டில் தொழில்துறை பகுதியில் அபிவிருத்திகள் தொடங்கப் பட்டன. கோலா கெட்டிலின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையத் தொடங்கியது.[10]
கோலா கெட்டில் புறநகர்ப் பகுதிகளில் பல வீடமைப்புப் பகுதிகள் உள்ளன. எடுத்துக் காட்டாக தாமான் தேசா பிடாரா (Taman Desa Bidara). இது கோலா கெட்டிலின் மிகப் பெரிய வீடமைப்புப் பகுதியாகும். இதைப் போல மற்றும் ஒரு வீடமைப்புப் பகுதி தாமான் ஹாஜி முஸ்லீம் (Taman Haji Muslim).
மேற்கோள்
தொகு- ↑ Sejarah sekolah sjk(t) Ladang Badenoch
- ↑ "SJK(T) LDG BADENOCH". Archived from the original on 2020-02-22. பார்க்கப்பட்ட நாள் 2021-02-11.
- ↑ Sjkt Binjol is located at Batu 09300, 7, Jalan Kuala Ketil, Kampung Batu Tujoh, 08000 Sungai Petani, Kedah, Malaysia.
- ↑ SJK(T) LDG BUKIT SEMBILAN, KEDAH
- ↑ LDG BATU PEKAKA, KEDAH
- ↑ [ https://www.sekolahmy.com/N_KEDAH/KBD0053.html பரணிடப்பட்டது 2020-02-22 at the வந்தவழி இயந்திரம் SJK(T) LDG KATUMBA KUALA KETIL]
- ↑ - SJK(T) LDG KUALA KETIL, KEDAH
- ↑ - SJK(T) LDG KIM SENG
- ↑ - SJK(T) LADANG MALAKOFF, KEDAH
- ↑ "Kawasan Perindustrian Kuala Ketil". Archived from the original on 2021-07-24. பார்க்கப்பட்ட நாள் 2021-02-11.