பிளந்தோங்

ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம்

பிளந்தோங் (ஆங்கிலம்: Plentong; மலாய்: Plentong; சீனம்: 避兰东; ஜாவி: ڤلينتوڠ) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் ஆகும்.[1]

பிளந்தோங்
Plentong
பிளந்தோங் Plentong is located in மலேசியா மேற்கு
பிளந்தோங் Plentong
பிளந்தோங்
Plentong
ஆள்கூறுகள்: 1°32′0″N 103°49′0″E / 1.53333°N 103.81667°E / 1.53333; 103.81667
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம்ஜொகூர் பாரு
பரப்பளவு
 • மொத்தம்270 km2 (100 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்4,48,160
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
அஞ்சல் குறியீடு
81750
இடக் குறியீடு+6-07
போக்குவரத்துப் பதிவெண்கள்J

பெர்மாஸ் ஜெயா, பாசீர் கூடாங் போன்ற நகர்ப்புற பகுதிகளைப் பிளந்தோங் முக்கிம் உள்ளடக்கியது. ஜொகூர் மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட முக்கிம் நிலப் பகுதி. இந்த முக்கிம் 500,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டது.

மலேசியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறப் பகுதிகளில் ஒன்றாகவும் இந்தப் பிளந்தோங் முக்கிம் கருதப் படுகிறது.[2]

வரலாறு

தொகு

முதன்முதலில் 1859-ஆம் ஆண்டில், தேய் சூ காங் (Tey Chu Kang) என்று அழைக்கப்படும் சீன மக்களின் குடியேற்றமாகத் தொடங்கியது. பின்னர் புதிய சீனக் கிராமமாக மாற்றம் கண்டது.

1949-ஆம் ஆண்டு மலாயாவில் அவசரக்கால நிலைமை. அப்போது ​​கம்போங் பாரு பான் பூ; கம்போங் லஞ்சூ; லாடாங் சான்; ஆகிய இடங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப் பட்டார்கள்.

தற்போது கம்போங் பாரு என்று அழைக்கப்படும் இடத்தில் அந்தப் பழைய குடியேற்றம் உருவாக்கப்பட்டது. அந்த இடம்தான் பிளந்தோங். இப்போது ஜொகூர் மாநிலத்திலேயே மிகவும் பரபரப்பான நகர்ப் பகுதியாக விளங்குகிறது.[3]

புவியியல்

தொகு
 
ஜொகூர் பாரு மாவட்டம்

தொடக்கக்கால வடிகால் அமைப்பின் காரணமாகப் பிளந்தோங் குடியிருப்புப் பகுதிகளில் அடிக்கடி மோசமான வெள்ள நிலைமை. பெர்மாஸ் ஜெயா மற்றும் உலு திராம் ஆகியவற்றில் இருந்து பாயும் தண்ணீரின் சந்திப்பு இடமாக பிளந்தோங் ஆறு உள்ளது. அதனால் அடிக்கடி திடீர் வெள்ளங்கள் ஏற்படுகின்றன.[4]

அந்த வகையில் பிளந்தோங் ஆற்றின் நீரோட்டத்தைச் சீராக்கும் வகையில் பிளந்தோங் பாலத்தை மீண்டும் கட்டுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்தது. 2013-ஆம் ஆண்டில், 57.7 மில்லியன் ரிங்கிட் செலவில் வெள்ளத் தணிப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Latar Belakang Plentong". Portal Rasmi Majlis Bandaraya Iskandar Puteri. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
  2. "Plentong is a mukim in Johor Bahru District, Johor, Malaysia". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
  3. Guinness, Patrick (1992). "On the margin of capitalism: people and development in Mukim Plentong, Johor, Malaysia". Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
  4. "Flash floods force 176 to evacuate in Johor". www.astroawani.com. பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.
  5. "Heavy rain and an exceptionally high tide caused flash floods in Kampung Plentong Baru". பார்க்கப்பட்ட நாள் 25 November 2021.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளந்தோங்&oldid=3505005" இலிருந்து மீள்விக்கப்பட்டது