இசுகந்தர் புத்திரி மாநகராட்சி

இசுகந்தர் புத்திரி மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி

இசுகந்தர் புத்திரி மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Iskandar Puteri; ஆங்கிலம்: Iskandar Puteri City Council); (சுருக்கம்: MBIP) என்பது மலேசியா, ஜொகூர், மாநிலத்தில் இசுகந்தர் புத்திரி மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் ஜொகூர் மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ளது.[1]

இசுகந்தர் புத்திரி மாநகராட்சி
Iskandar Puteri City Council
Majlis Bandaraya Iskandar Puteri
மரபு சின்னம் அல்லது சின்னம்
இசுகந்தர் புத்திரி
மாநகராட்சி மண்டபம்
வகை
வகை
மாநகர் மன்றம்
(இசுகந்தர் புத்திரி)
தலைமை
நகர முதல்வர்
முகமட் அபிசு அகமது
Mohd Haffiz Ahmad
தலைமைச் செயலாளர்
கசானா சுபாட்
Khasanah Sufa’at
கூடும் இடம்
இசுகந்தர் புத்திரி மாநகராட்சி தலைமையகம்
Tapak Bangunan Pejabat MBIP, Jalan Medini Sentral 9, Bandar Medini Iskandar, இசுகந்தர் புத்திரி, ஜொகூர்
வலைத்தளம்
www.mbip.gov.my
அரசியலமைப்புச் சட்டம்
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா)
Local Government Act 1976
அடிக்குறிப்புகள்
2017 வரை முன்பு ஜொகூர் பாரு நகராட்சி (Majlis Perbandaran Johor Bahru Tengah) அல்லது ஜொகூர் பாரு மத்திய ஊராட்சி மன்றம் (Johor Bahru Central Municipal Council) என்று அழைக்கப்பட்டது.

இசுகந்தர் புத்திரி மாநகராட்சியின் அதிகார வரம்பு 104.7 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சி, ஜொகூரில் உள்ள ஜொகூர் பாரு மாவட்டத்தின் (Johor Bahru District) ஒரு பகுதியை நிர்வகிக்கிறது. ஜொகூர் பாரு மாவட்டத்தில் தான் இசுகந்தர் புத்திரி மாநகரமும் உள்ளது.

பொது

தொகு

2017 நவம்பர் 22-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்ட பிறகு இசுகந்தர் புத்திரி மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த மாநகராட்சியின் தலையகம், இசுகந்தர் புத்திரி மாநகரத்தில் மேதினி எனும் இடத்தில் உள்ளது.

இந்த மாநகராட்சியும் பொதுச் சுகாதாரம் (Public Health); கழிவு மேலாண்மை (Waste Removal); நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு (Social Economic Development); மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு (General Maintenance of Urban Infrastructure) போன்ற செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறது.[2]

நிர்வகிக்கும் இடங்கள்

தொகு

கிளை அலுவலகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Iskandar Puteri City Council began with the establishment of 8 Local Councils during the 60s which was under the Town Board Enactment 118". Official Portal of Iskandar Puteri City Council (MBIP) (in ஆங்கிலம்). 1 January 2016. பார்க்கப்பட்ட நாள் 28 August 2022.
  2. "Harnessing the power of data in Iskandar Puteri – from the lens of a city planner | Global Future Cities Programme". www.globalfuturecities.org. பார்க்கப்பட்ட நாள் 28 August 2022.

வெளி இணைப்புகள்

தொகு