தஞ்சோங் பெலப்பாஸ்
தஞ்சோங் பெலப்பாஸ் (UN/Locode: MYTPP) (மலாய்: Pelabuhan Tanjung Pelepas; ஆங்கிலம்: Port of Tanjung Pelepas); (சுருக்கம்: PTP) என்பது மலேசியா, ஜொகூர், ஜொகூர் பாரு மாவட்டம், இசுகந்தர் புத்திரி மாநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொள்கலன் (Container Port) துறைமுகம் ஆகும். ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது துறைமுகம்.
தஞ்சோங் பெலப்பாஸ் Port of Tanjung Pelepas | |
---|---|
தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகம் | |
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும் | |
அமைவிடம் | |
நாடு | மலேசியா |
அமைவிடம் | ஜொகூர், மலேசியா |
ஆள்கூற்றுகள் | 1°21′59″N 103°32′54″E / 1.366347°N 103.548367°E |
ஐநா/லோகோட் | MYTPP[1] |
விவரங்கள் | |
திறக்கப்பட்டது | 13 மார்ச் 2000 |
துறைமுகத்தின் வகை | துறைமுகம் |
நிறுத்தற் தளங்கள் | 14 |
ஊழியர்கள் | 11,000 |
தலைவர் | டான் ஸ்ரீ காலிப் முகம்ட் நோ |
உரிமையாளர் | ஜொகூர் நிறுவகம் (Johor Corporation) |
நிர்வாகம் | தஞ்சோங் பெலப்பாஸ் நிறுவனம் |
அமைவிடம் | இசுகந்தர் புத்திரி, ஜொகூர் பாரு மாவட்டம், |
புள்ளிவிவரங்கள் | |
ஆண்டு சரக்கு டன்னேஜ் | 12.5 மில்லியன் TEU |
ஆண்டு கொள்கலன் அளவு | 6.2 மில்லியன் டன்கள் |
வலைத்தளம் www |
குளோபல் தெர்மினல் நெட்வொர்க் (Global Terminal Network) எனும் உலகளாவிய கொள்கலன் முனைய நிறுவனத்தின் ஒரு பகுதியாக இந்தத் துறைமுகத்தின் முனையங்கள் உள்ளன. இருப்பினும் எம்.எம்.சி. (MMC Corporation Berhad) என்று அழைக்கப்படும் கொள்கலன் முனைய நிறுவனம், இந்தத் துறைமுக முதலீட்டில் 70 விழுக்காடு கொண்டுள்ளது.[2]
பொது
தொகுதஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் உள்ள சில முனையங்களை ஏபிஎம் தெர்மினல் (APM Terminals) என்று அழைக்கிறார்கள். ஏபி மோலர் மார்சுக் (A.P. Moller-Maersk) எனும் டச்சு நாட்டு நிறுவனம் 30 விழுக்காடு முதலீடு செய்துள்ளது.
இந்தத் துறைமுகம் மலேசியாவின் தென்மேற்கு ஜொகூரில் உள்ள பூலாய் ஆற்றின் கிழக்கு முகப்பில் ஜொகூர் நீரிணைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. ஜொகூர் நீரிணை என்பது மலேசியாவையும் சிங்கப்பூசிங்கப்பூரையும் பிரிக்கும் நீர்ப்பகுதி ஆகும். சிங்கப்பூர் துறைமுகங்களுடன் போட்டியிடும் முயற்சியில் இந்தத் துறைமுகம் கட்டப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "UNLOCODE (MY) - MALAYSIA". service.unece.org. பார்க்கப்பட்ட நாள் 2 August 2020.
- ↑ "PTP is a joint venture between MMC Corporation Berhad (70%), a utilities and infrastructure group and APM Terminals (30%), a leading global ports group with a global port network in 74 countries". பார்க்கப்பட்ட நாள் 28 August 2022.
- ↑ "Port Development in Malaysia: an introduction to the country's evolving port landscape" (PDF). Netherlands Enterprise Agency. பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.
மேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- PTP official website
- Map of Road from Tanjung Pelapas Port to Senai Airport பரணிடப்பட்டது 2007-05-15 at the வந்தவழி இயந்திரம்
- Shipping Portal: PTP பரணிடப்பட்டது 2016-08-29 at the வந்தவழி இயந்திரம்