பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி

பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pasir Gudang; ஆங்கிலம்: Pasir Gudang Federal Constituency; சீனம்: 巴西古当国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P159) ஆகும்.[6]

பாசிர் கூடாங் (P159)
மலேசிய மக்களவைத் தொகுதி
 ஜொகூர்
Pasir Gudang (P159)
Federal Constituency in Johor
பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி
(P159 Pasir Gudang)
மாவட்டம்ஜொகூர் பாரு மாவட்டம்
வாக்காளர்களின் எண்ணிக்கை198,485 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிபாசிர் கூடாங் தொகுதி
முக்கிய நகரங்கள்பாசிர் கூடாங்; பிளந்தோங்; மாசாய் நகரம்
பரப்பளவு148 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2003
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்அசன் அப்துல் கரீம்
(Hassan Abdul Karim)
மக்கள் தொகை534,659 (2023)[4][5]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2004
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

2004-ஆம் ஆண்டில் இருந்து பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]

பாசிர் கூடாங்

தொகு

பாசிர் கூடாங், ஜொகூர் மாநிலத்தில் ஜொகூர் பாரு மாவட்டத்தில்; அமைந்துள்ள ஒரு மாநகரம். இது ஒரு தொழில்துறை நகரமாகும். போக்குவரத்துத் தளவாடங்கள் உற்பத்தி; கப்பல் கட்டுதல்; இரசாயனப் பொருகள் உற்பத்தி; கனரகத் தொழில்கள்; எண்ணெய் பனை சேமிப்பு; விநியோகம் ஆகியவை இந்த நகரத்தின் முக்கிய தொழில்கள் ஆகும்.[8]

கம்போங் உலு எனும் இடத்தில் இருந்த ஒரு மணல் சுரங்கத்தில் இருந்து, பாசிர் கூடாங் என்ற பெயர் உருவாகி இருக்கலாம் என்று அறியப் படுகிறது. மலாய் மொழியில் பாசிர் என்றால் மணல். கூடாங் என்றால் பொருள் சேமிப்புக் கட்டடம். அந்த வகையில் இந்த இடத்திற்குப் 'பாசிர் கூடாங்' என்று பெயர் வந்து இருக்கலாம் என்றும் அறியப் படுகிறது.

பாசிர் கூடாங் பகுதியில் 1890-ஆம் ஆண்டுகளிலேயே தமிழர்கள் குடியேறி விட்டார்கள். ஏறக்குறைய 130 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். 1916-ஆம் ஆண்டு வரையில், 15,000 ஏக்கர் (61 சதுர கி.மீ.) பரப்பளவு கொண்ட ஆறு ரப்பர், காபித் தோட்டங்கள் பாசிர் கூடாங்; பிளந்தோங் பகுதிகளில் திறக்கப் பட்டன.[9]

பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி

தொகு




 

பாசிர் கூடாங் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[10]

  மலாயர் (46.2%)
  சீனர் (36.1%)
  இதர இனத்தவர் (7.5%)





 

பாசிர் கூடாங் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (50.63%)
  பெண் (49.37%)
 

பாசிர் கூடாங் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (7.59%)
  21-29 (24.52%)
  30-39 (21.51%)
  40-49 (17.72%)
  50-59 (15.8%)
  60-69 (9.04%)
  70-79 (3.01%)
  80-89 (0.7%)
  + 90 (0.11%)
பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பாசிர் கூடாங் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
11-ஆவது மக்களவை P159 2004–2008 முகமட் காலிட் நோர்டின்
(Mohamed Khaled Nordin)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2013
13-ஆவது மக்களவை 2013–2018 நோர்மலா அப்துல் சமாட்
(Normala Abdul Samad)
14-ஆவது மக்களவை 2018–2022 அசன் அப்துல் கரீம்
(Hassan Abdul Karim)
பாக்காத்தான் அரப்பான்
(மக்கள் நீதிக் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

பாசிர் கூடாங் தேர்தல் முடிவுகள்

தொகு
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
அசன் அப்துல் கரீம்
(Hassan Abdul Karim)
பாக்காத்தான் அரப்பான்71,23347.7210.96
முகமட் பாரிட் அப்துல் ரசாக்
(Mohamad Farid Abdul Razak)
பெரிக்காத்தான் நேசனல்39,67526.5826.58  
நூர் அசுலான் அம்புரோஸ்
(Noor Azlen Ambros)
பாரிசான் நேசனல்37,36925.0310.10
முகமட் ரபி பிராம்
(Mohammad Rafi Bram)
தாயக இயக்கம்1,0030.670.67  
மொத்தம்1,49,280100.00
செல்லுபடியான வாக்குகள்1,49,28098.94
செல்லாத/வெற்று வாக்குகள்1,5961.06
மொத்த வாக்குகள்1,50,876100.00
பதிவான வாக்குகள்1,98,48575.2110.62
Majority31,55821.142.41
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது
மூலம்: [11]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "PRU-15: Parlimen Tebrau pengundi paling ramai di Johor [METROTV]". 27 October 2022.
  6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 27 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  8. "Shenzhen Port China Shipping to Pasir Gudang". www.forwarder-cn.com.
  9. "Until 1916, 6 estates which cover an area the size of 15,000 acres have been opened in Mukim Plentong". Official Portal of Pasir Gudang City Council (MBPG) (in ஆங்கிலம்). 2 January 2016. பார்க்கப்பட்ட நாள் 16 June 2021.
  10. "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
  11. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு