பாசிர் பெலாங்கி
பாசிர் பெலாங்கி (ஆங்கிலம்: Pasir Pelangi; மலாய்: Pasir Pelangi) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில், ஜொகூர் பாருவில் ஓர் அரச கிராமம் (Royal Village) ஆகும்.[1]
பாசிர் பெலாங்கி | |
---|---|
Pasir Pelangi | |
ஜொகூர் | |
ஆள்கூறுகள்: 1°28′59.4″N 103°47′6.9″E / 1.483167°N 103.785250°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
மாவட்டம் | ஜொகூர் பாரு |
அமைவு | 1890 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய குறியீடு | 80050 |
இந்த அரச கிராமம் 1900-களின் முற்பகுதியில் ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்மாயில் (Sultan Ibrahim Sir Abu Bakar) ஆட்சியின் போது நிறுவப்பட்டது. பாசிர் பெலாங்கியின் முக்கிய இடங்கள் அங்கு அமைந்துள்ள பல அரண்மனைகள் ஆகும். ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் கட்டப்பட்ட பல அரண்மனைகள் அங்கு உள்ளன.
பொது
தொகுபாசிர் பெலாங்கி கிராமப் பகுதி பாக்கார் பத்து கிராமத்தின் (Bakar Batu) ஒரு பகுதியாக உள்ளது. பாக்கார் பத்துவில் தாமான் இசுகந்தர், தாமான் செந்தோசா, பெர்மாஸ் ஜெயா (Permas Jaya) போன்ற பல வீட்டு மனை குடியிருப்புகள் உள்ளன.
வரலாறு
தொகுபாக்கார் பத்து கிராமத்தில் முதலில் மலாய்க்காரர்களும் ஜாவானியர்களும் குடியேறினார்கள். 19 - 20-ஆம் நூற்றாண்டுகளில் அப்போதைய சுல்தான் இப்ராகிம் இஸ்மாயிலுக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்தனர்.
அவர்கள் பல வருடங்கள் பணிபுரிந்தனர். அதன் பிறகு, புறநகர்ப் பகுதியில் அவர்கள் தங்குவதற்கு ஓர் இடத்தைக் கண்டுபிடித்தனர். அந்த இடம் அப்போது தெப்ராவ் பக்கார் பத்து என்று அழைக்கப்பட்டது. 1915-ஆம் ஆண்டில் அவர்களுக்கு நில உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேற்கோள்
தொகு- ↑ Malaysia Travel Atlas: includes Singapore & Brunei. Tuttle Publishing. 2013. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-14-629-0949-0.
மேலும் காண்க
தொகு