ஜொகூர் பாரு மாநகராட்சி
சொகூர் பாரு மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru City Council); (சுருக்கம்: MBJB) என்பது மலேசியா, சொகூர், மாநிலத்தின் சொகூர் பாரு மாவட்டம்; சொகூர் பாரு மாநகரம்; இசுகந்தர் மலேசியாவின் சில பகுதிகள்; ஆகியவற்றை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் சொகூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[1]
சொகூர் பாரு மாநகராட்சி Johor Bahru City Council Majlis Bandaraya Johor Bahru | |
---|---|
சொகூர் பாரு மாநகராட்சி சின்னம் | |
சொகூர் பாரு கொடி | |
வகை | |
வகை | மாநகர் மன்றம் (ஜொகூர் பாரு) |
வரலாறு | |
முன்பு | சொகூர் பாரு நகராட்சி |
தலைமை | |
நகர முதல்வர் | முகமது நூரசாம் ஒசுமான் Mohd Noorazam Haji Osman 15 ஆகத்து 2021 |
தலைமைச் செயலாளர் | மிசுவான் யூசோப் Miswan Yunus 15 ஆகத்து 2021 |
கட்டமைப்பு | |
அரசியல் குழுக்கள் | மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்:
|
கூடும் இடம் | |
சொகூர் பாரு மாநகராட்சி தலைமையகம் Bangunan MBJB, Bukit Senyum, Jalan Medini Sentral 9, Bandar Medini Iskandar, இசுகந்தர் புத்திரி, சொகூர் | |
வலைத்தளம் | |
www | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 |
1994 சனவரி 1-ஆம் தேதி சொகூர் பாரு நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு சொகூர் பாரு மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த மாநகராட்சியின் தலைமையகம், சொகூர் பாரு மாநகரத்தில் உள்ளது.
பொது
தொகுஇந்த மாநகராட்சி பொதுச் சுகாதாரம் (Public Health); கழிவு மேலாண்மை (Waste Removal); நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு (Social Economic Development); மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு (General Maintenance of Urban Infrastructure) போன்ற செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறது.[1]
வளர்ச்சிப் படிகள்
தொகு- ஜொகூர் பாரு நகரக் கழகம் (மலாய்: Lembaga Bandaran Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru Town Board); 1910;
- ஜொகூர் பாரு நகராண்மைக் கழகம் (மலாய்: Majlis Bandaran Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru Town Council); 1952;
- ஜொகூர் பாரு நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru Municipal Council);1 ஏப்ரல் 1977;
- ஜொகூர் பாரு மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru City Council); 1 சனவரி 1994 தொடக்கம்;[2]
மாநகராட்சித் தலைவர்கள்
தொகு# | தலைவர் | சேவைக் காலம் |
---|---|---|
1. | துங்கு அகமட் இப்ராகிம் | 1977-1984 |
2. | அமினா அசிசா மரியம் | 1984-1984 |
3. | ஆசாரி ரபேல் | 1984-1993 |
4. | அசிம் யாகயா | 1994 – 2000 |
5. | சொகாரி சுராட்மான் | 2000 – 2003 [3] |
5. | வாகிட் டாலான் | 2003 – 2007 [4] |
6. | அப்துல் லத்தீப் யூசுப் | 2007 - 2007 |
7. | நைம் நசீர் | 2007 – 2009 |
8. | முகமது ஜாபர் அவாங் | 2009 - 2011 |
p. | புர்கான் அமீன் | 2011 - 2013 |
10. | இசுமாயில் கரீம் | 2013 - 2014 |
11. | அப்துல் ரகுமான் முகம்மது தவாம் | 2014 - 2015 |
12. | ரகீம் பின் நின் | 2015 - 2017 |
13. | அம்ரான் பின் ரகுமான் | 2017 - 2019 |
14. | அசாரி பின் தாவூத் | 2019–2021 |
15. | முகமது நூரசாம் ஒசுமான் | 2021 – [5] |
நிர்வகிக்கும் இடங்கள்
தொகு- தெப்ராவ் - Tebrau
- பாசீர் கூடாங் - Pasir Gudang
- ஜொகூர் பாரு - Johor Bahru
- பூலாய் - Kangkar Pulai
கிளை அலுவலகங்கள்
தொகு- லார்க்கின் - Larkin Sentral
- பெலாங்கி - Taman Pelangi
- பெர்மாஸ் ஜெயா - Permas Jaya
- பண்டார் பாரு உடா - Bandar Baru UDA
- தம்போய் - Tampoi, Johor
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "On April 1, 1977, the Johor Bahru Town Council was elevated to the Municipal Council and later was promoted to a City status on January 1, 1994 and was known as Johor Bahru City Council". Official Portal of Johor Bahru City Council (MBJB). 20 October 2015. Archived from the original on 4 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 6 September 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "History of MBJB started in 1910 with the establishment of Lembaga Bandaran (Town Board), which was upgraded to Majlis Bandaran (Town Council) in 1952, Majlis Perbandaran (Municipal Council) on April 1, 1977 and subsequently Majlis Bandaraya (City Council) on January 1, 1994 when Johor Bahru was declared a City". www.lawyerment.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 September 2022.
- ↑ Carol Murugiah, JB–the tropical garden city: Reowned as shopper's haven with new malls, pg 4, 8 April 2001, New Sunday Times Special (Sultan of Johor's Birthday)
- ↑ Wahid appointed new JB Datuk Bandar ..PX: Wahid: Vast experience., 8 February 2003, New Straits Times
- ↑ [1], 13 August 2021, Berita Harian