அத்தாப்புக் குடில்
அட்டாப் வீடு என்பது, புரூணை, இந்தோனீசியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் நாட்டுப்புறப் பகுதிகளில் காணப்படும் மரபுவழி வீட்டு வகைகளுள் ஒன்றாகும். அட்டாப் எனப்படும் பனை போன்ற ஒருவகை மரத்தில் இருந்து இவ்வீடுகளில் சுவர்களுக்கு உரிய வரிச்சுக்களும், கூரை வேய்வதற்கான ஓலையும் பெறப்படுவதால், அம்மரத்தின் பெயரால் அட்டாப் வீடு என இது அழைக்கப்படுகிறது.[1] இவ்வீடுகள், சிறிய குடிசைகள் முதல் மிதமான அளவுள்ள வீடுகள் வரை பல்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. 19ம் நூற்றாண்டு வரை கோயில்கள் போன்ற குறிப்பிடத்தக்க கட்டிடங்களும் அட்டாப் வகையினவாக இருந்தன.
மேற்கோள்
தொகு- ↑ Normand-Prunieres, p. 4
உசாத்துணைகள்
தொகு- [http://www.enhr2004.org/files/new_papers/Normand-Prunieres.pdf[தொடர்பிழந்த இணைப்பு] Normand-Prunieres, Helene. 'Malaysian Dwellings', Proceedings of ENHR International Housing Conference 2004, (Cambridge: University, 2004)