சார்லசு வைனர் புரூக்

புரூக் பரம்பரையில்; மூன்றாவது இராஜாவாக சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்

வைனர் புரூக் அல்லது சார்லஸ் வைனர் புரூக் (ஆங்கிலம்: Vyner Brooke அல்லது Sir Charles Vyner de Windt Brooke; மலாய்: Raja Putih Charles Vyner Brooke) (பிறப்பு: 26 செப்டம்பர் 1874 – இறப்பு: 9 மே 1963), என்பவர் சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா எனும் புரூக் பரம்பரையில்; மூன்றாவது இராஜாவாக சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்; இவரே வெள்ளை இராஜா பரம்பரையில் கடைசி இராஜாவாகும்.[1]

சார்லஸ் வைனர் புரூக்
Charles Vyner Brooke
மூன்றாவது
வெள்ளை இராஜா
ஆட்சிக்காலம்24 மே 1917 – 1 சூலை 1946
முன்னையவர்சார்லசு புரூக்
(Charles Brooke)
பின்னையவர்முடியாட்சி அகற்றல்
சார்லஸ் ஆர்டென் கிளார்க்
(Charles Arden-Clarke)
பிரித்தானிய சரவாக் முடியாட்சி
யாங் டி பெர்துவா சரவாக்
பிறப்புசார்லஸ் வைனர் டி விண்ட் ப்ரூக்
(Charles Vyner de Windt Brooke)
(1874-09-26)26 செப்டம்பர் 1874
கிரீன்விச், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு9 மே 1963(1963-05-09) (அகவை 88)
லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
வாழ்க்கைத் துணைகள்சில்வியா பிரெட்
(Sylvia Brett)
குழந்தைகளின்
பெயர்கள்
3 மகள்கள்
1. லியோனோரா மார்கரெட் புரூக்
(Leonora Margaret Brooke)
2. எலிசபெத் புரூக்
(Elizabeth Brooke)
3. நான்சி வாலரி புரூக்
(Nancy Valerie Brooke)
மரபுபுரூக் வம்சாவழி
அரசமரபுவெள்ளை இராஜா
தந்தைசார்லசு புரூக்
தாய்மார்கரெட் புரூக்
மதம்கிறிஸ்துவம்

இவர் வெள்ளை இராஜா புரூக் பரம்பரையில் இரண்டாவது இராஜாவான சார்லசு புரூக் என்பவரின் மூத்த மகனாவார். இவரின் தம்பியின் பெயர் பெர்த்திராம் புரூக். சரவாக்கின் துவான் மூடா (Tuan Muda of Sarawak) பதவி வகித்தவர். தாயாரின் பெயர் இராணி மார்கரெட் ஆலிஸ் லிலி டி விண்ட் (Ranee Margaret Alice Lili de Windt). இவர் 24 மே 1917 தொடங்கி 1 சூலை 1946 வரையில் 29 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[2]

பொது

தொகு

வெள்ளை இராஜா, (White Rajahs அல்லது Rajah of Sarawak) என்பது சரவாக் மாநிலத்தில், சரவாக் இராச்சியம் எனும் ஆட்சியை நிறுவிய ஒரு பிரித்தானியக் குடும்பத்தின் வம்ச முடியாட்சி. அதுவே ஒரு முன்னாள் மன்னராட்சி ஆகும்.

1840-ஆம் ஆண்டுகளில், போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியம் ஆட்சி செய்தது.

வரலாறு

தொகு

சார்லசு புரூக் இங்கிலாந்து லண்டன் நகரில் பிறந்தவர். இங்கிலாந்து கிளிவ்டென் வின்செஸ்டர் கல்லூரியில் (Clevedon, Winchester College) படித்தார். பின்னர் சரவாக் பொது சேவையில் இணைந்தார்.

சேவைகள்

தொகு

வைனர் புரூக், சரவாக்கிற்கு வந்த பின்னர் தன் தந்தையார் சார்லசு புரூக்கிற்கு பல அரசு துறைகளில் உதவியாளராகப் பணியாற்றினார்.

  • (1897 - 1898) சிமாங்காங் மாவட்ட அதிகாரி (Simanggang District Officer)
  • (1898 - 1901) முக்கா மற்றும் ஓயா ஆளுநர் (Resident of Mukah and Oya)
  • (1902 - 1903) மூன்றாம் டிவிசன் ஆளுநர் (Resident of the Third Division)
  • (1903 - 1904) சட்ட நீதிமன்றங்களின் தலைவர் (President of the Law Courts)
  • (1904 - 1911) உச்ச மன்றங்கள்; பொது மன்றங்களின் துணைத் தலைவர் (Vice-President of the Supreme General Councils)

சரவாக் இராஜா பதவி

தொகு

தந்தையார் சார்லசு புரூக் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, வைனர் புரூக் 1917 மே 17-ஆம் தேதி அரசு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். 1917 மே 24-ஆம் தேதி கூச்சிங்கில் சரவாக் வெள்ளை இராஜாவாக அறிவிக்கப்பட்டார்.

1918 சூலை 22-ஆம் தேதி மாநிலச் சட்டமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். தொடக்கக் காலத்தில் தன் இளைய சகோதரர் பெர்த்திராம் புரூக்குடன் இணைந்து பணிகளை மேற்கொண்டார்.

சரவாக் வளர்ச்சி

தொகு

வைனர் புரூக் ஆட்சிக் காலத்தில் சரவாக்கில் ரப்பர் மற்றும் எண்ணெய்த் தொழில்கள் ஏற்றம் கண்டன. சரவாக் பொருளாதாரத்தில் அடுத்தடுத்து நல்வளர்ச்சிகள் ஏற்பட்டன. அதனால் சரவாக் இராச்சியத்தின் பொதுச் சேவை உட்பட பல அரசு நிறுவனங்கள் நவீன மயமாக்கப் பட்டன.

மேலும் 1924-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவில் உருவாக்கப்பட்ட தண்டனைச் சட்டம் சரவாக் இராச்சியத்திலும் அறிமுகம் செய்யப்பட்டது.

1927-இல், வைனர் புரூக்கிற்கு ஐக்கிய இராச்சியத்தால் சர் பட்டம் வழங்கப்பட்டது. வைனர் புரூக் தொடர்ந்து மக்கள் போற்றும் அளவிற்கு அரசு நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்தினார்.[3]

பொதுமக்கள் நலன்கள்

தொகு

கிறித்துவப் பாதிரியார்களின் பிரசாரங்களுக்குத் தடை விதித்து; உள்நாட்டு ஆன்மீக மரபு வழக்கங்களுக்கு ஆதரவு வழங்கினார். தலை வேட்டையாடும் பழக்கம் சட்டவிரோதமாக்கப் பட்டது.

1941-ஆம் ஆண்டு சரவாக் இராச்சியத்தின் புதிய அரசியலமைப்பின் மூலம் வைனர் புரூக், தன் அதிகாரங்களைக் குறைத்துக் கொண்டார். அதற்கு ஈடாக, அவரின் தனிப்பட்ட செலவினங்களுக்காகக் கருவூலத்தில் இருந்து £200,000 பெற்றுக் கொண்டார்.

இரண்டாம் உலகப் போர்

தொகு

இந்தக் கட்டத்தில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. அதே வேளையில் ஜப்பானியரின் போர்னியோ ஆக்கிரமிப்பும் தொடங்கியது.

1941 டிசம்பர் 25-ஆம் தேதி வைனர் புரூக்கும் அவரின் குடும்பத்தினரும் ஆஸ்திரேலியா சிட்னி நகருக்குப் பயணம் கொண்டனர். இரண்டாம் உலகப் போரின் போது அங்கு அவர்கள் தங்கி இருந்தனர்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, வைனர் புரூக் 15 ஏப்ரல் 1946-இல் சரவாக்கிற்குத் திரும்பினார். தற்காலிகமாக, சரவாக் ராஜாவாக அதிகாரத்தைத் தொடர்ந்தார்.

வெள்ளை இராஜா ஆட்சி முடிவு

தொகு

1946 சூலை 1-ஆம் தேதி, பிரித்தானிய அரசாங்கத்திடம் சரவாக் இராச்சியத்தை ஒரு முடியாட்சிக் காலனியாக விட்டுக் கொடுத்தார். அத்துடன் சரவாக்கில் வெள்ளை இராஜா ஆட்சியும் ஒரு முடிவுக்கு வந்தது.

அவர் இறந்து நான்கு மாதங்களுக்கு பிறகு, சரவாக், மலாயா, வடக்கு போர்னியோ, சிங்கப்பூர் ஆகியக் குடியேற்றப் பகுதிகள் ஒன்றிணைந்து 16 செப்டம்பர் 1963-இல் மலேசியா எனும் கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டன.

வைனர் புரூக், 1963 மே 9-ஆம் தேதி லண்டன் மாநகரில் காலமானார்.[2]

புரூக் குடும்பம்

தொகு
சார்லசு வைனர் புரூக்
புரூக் குடும்பம்
பிறப்பு: 26 செப்டம்பர் 1874 இறப்பு: 9 மே 1963
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் வெள்ளை இராஜா
1917–1946
வெள்ளை இராஜா முடியாட்சி அகற்றல்
சரவாக் அரசாங்கத் தலைவர்
1917–1946
பின்னர்
சார்லஸ் ஆர்டன்-கிளார்க்
சரவாக் கவர்னர் ஆக
பதவியிழப்பு
முடியாட்சி அகற்றல்
— பட்டம் சார்ந்தது —
வெள்ளை இராஜா
1946–1963
பின்னர்

புரூக் வம்சாவழியினர்

தொகு
பெயர் தோற்றம் பிறப்பு இறப்பு
ஜேம்சு புரூக்
(1841–1868)
  29 ஏப்ரல் 1803, இந்தியா 11 ஜூன் 1868, இங்கிலாந்து
ஜோன் புரூக்
Rajah Muda of Sarawak
(1859–1863)
  1823, இங்கிலாந்து 1 டிசம்பர் 1868, இங்கிலாந்து
சார்லசு புரூக்
(1868–1917)
  3 ஜுன் 1829, இங்கிலாந்து 17 மே 1917, இங்கிலாந்து
சார்லசு வைனர் புரூக்
(1917–1946)
  26 செப்டம்பர் 1874, இங்கிலாந்து 9 மே 1963, இங்கிலாந்து
பெர்த்திராம் புரூக்
Tuan Muda of Sarawak
(1917–1946)
8 ஆகஸ்டு 1876, சரவாக் 15 செப்டம்பர் 1965, இங்கிலாந்து
அந்தோனி புரூக்
Rajah Muda of Sarawak
(1939–1946)
10 டிசம்பர் 1912, இங்கிலாந்து 2 மார்ச் 2011, நியூசிலாந்து

மேற்கோள்கள்

தொகு
  1. "The Official Portal of the Sarawak Government - Charles Vyner Brooke, the second son of Charles Brooke, succeeded his father to become the third Rajah of Sarawak on 24 May 1917. The elder son Betram Brooke had earlier on declined the offer to rule. Vyner Brooke formulated a new constitution, which put an end to the absolute power of the Rajah in 1941". sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 6 August 2022.
  2. 2.0 2.1 "Person Page". Thepeerage.com. பார்க்கப்பட்ட நாள் 30 December 2017.
  3. "The London Gazette". 3 June 1927. pp. 3606. https://www.thegazette.co.uk/London/issue/33280/supplement/3606. 

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • The Brooke Trustபுரூக் வம்சத்தின் பாரம்பரியம் பற்றிய கூடுதல் தகவல்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்லசு_வைனர்_புரூக்&oldid=3905801" இலிருந்து மீள்விக்கப்பட்டது