ஜோன் புரூக்

புரூக் பரம்பரையில் 1848-ஆம் ஆண்டில் ராஜா மூடா

ஜோன் புரூக் (ஆங்கிலம்: John Brooke அல்லது John Brooke Johnson Brooke); (பிறப்பு: 1823 – இறப்பு: 1 டிசம்பர் 1868), சரவாக் இராச்சியத்தின் வெள்ளை இராஜா (Raj of Sarawak) புரூக் பரம்பரையில், 1848-ஆம் ஆண்டில், ராஜா மூடா (Rajah Muda) பதவியை வகித்தவர். ராஜா மூடா என்பது ஓர் இளவரசரைக் குறிக்கும் பதவிச் சொல் ஆகும்.

சரவாக் ராஜா மூடா ஜோன் புரூக்

ஜோன் புரூக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால், தன்னுடைய தம்பி சார்லசு புரூக் என்பவருக்குத் தன் மரபுரிமை பதவியை விட்டுக் கொடுத்தார்.

1823-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்தவர். தந்தையாரின் பெயர் பிரான்சிஸ் சார்லஸ் ஜான்சன் (Francis Charles Johnson). தாயாரின் பெயர் எம்மா பிரான்சிஸ் புரூக் (Emma Frances Brooke). எம்மா பிரான்சிஸ், சரவாக்கின் முதல் இராஜாவான ஜேம்ஸ் புரூக்கின் மூத்த சகோதரி ஆவார்.

ஜோன் புரூக், 1837-ஆம் ஆண்டில் ராயலிஸ்ட் (Royalist) கப்பலில் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர். பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் இராணுவப் படையில் சேர்ந்து, ஒன்பது ஆண்டுகளில், தளபதி பதவிக்கு உயர்ந்தவர்.[1]

லபுவான் கூச்சிங் பணிகள்

தொகு

பின்னர் 1848-ஆம் ஆண்டு இராணுவப் படையில் இருந்து விலகி, சரவாக்கிற்கு வந்தார். ராஜா மூடா (Rajah Muda) பதவியை ஏற்றுக் கொண்டு, தன் மாமா ஜேம்சு புரூக்கிற்கு உதவியாக இருந்தார். கொஞ்ச காலம் லபுவான் பகுதியில் சேவை செய்தார். பின்னர் பெரும்பாலும் கூச்சிங் நகரிலேயே பணிகள் தொடர்ந்தன.

1856-ஆம் ஆண்டில் அன்னே கிராண்ட் (Anne Grant) ஸ்காட்லாந்தில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் கூச்சிங்கில் வசிக்கத் தொடங்கினர். அங்கு அவர்களுக்கு பசில் (Basil) (1857-1860), மற்றும் ஜான் சார்லஸ் இவ்லின் ஹோப் (John Charles Evelyn Hope) (1858-1934) ஆகிய இரு மகன்கள் பிறந்தனர்.

இரண்டாவது திருமணம்

தொகு

இரண்டாவது மகன் ஹோப் பிறந்த சிறிது நேரத்திலேயே அன்னே கிராண்ட் இறந்து விட்டார். பின்னர் ஜூலியானா கரோலின் வெல்ஸ்டெடுட் (Juliana Caroline Welstead) என்பவருடன் இரண்டாவது திருமணம். இரண்டு ஆண்டுகளில் மாடில்டா ஆக்னஸ் (Matilda Agnes) (1862-1943) எனும் மகள் பிறந்தார். மகள் பிறந்து ஓர் ஆண்டில் இரண்டாவது மனைவி ஜூலியானாவும் இறந்து விட்டார்.

1862-ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கா போரில் (Battle off Mukah) ஜேம்சு புரூக்கிற்கு உதவியாக இருந்தார். 1868-ஆம் ஆண்டு நீண்ட நோய்க்குப் பிறகு, இங்கிலாந்தில் அவுன்ஸ்லோ (Hounslow) எனும் இடத்தில் காலமானார்.

வெள்ளை இராஜா வம்சாவழியினர்

தொகு
பெயர் தோற்றம் பிறப்பு இறப்பு
ஜேம்சு புரூக்
(1841–1868)
  29 ஏப்ரல் 1803, இந்தியா 11 ஜூன் 1868, இங்கிலாந்து
ஜோன் புரூக்
Rajah Muda of Sarawak
(1859–1863)
  1823, இங்கிலாந்து 1 டிசம்பர் 1868, இங்கிலாந்து
சார்லசு புரூக்
(1868–1917)
  3 ஜுன் 1829, இங்கிலாந்து 17 மே 1917, இங்கிலாந்து
சார்ல்சு வைனர் புரூக்
(1917–1946)
  26 செப்டம்பர் 1874, இங்கிலாந்து 9 மே 1963, இங்கிலாந்து
பெர்த்திராம் புரூக்
Tuan Muda of Sarawak
(1917–1946)
8 ஆகஸ்டு 1876, சரவாக் 15 செப்டம்பர் 1965, இங்கிலாந்து
அந்தோனி புரூக்
Rajah Muda of Sarawak
(1939–1946)
10 டிசம்பர் 1912, இங்கிலாந்து 2 மார்ச் 2011, நியூசிலாந்து

மேற்கோள்கள்

தொகு
  1. James, Lawrence (1997) [1994]. The Rise and Fall of the British Empire. New York: St. Martin's Griffin. pp. 244–245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-16985-X.

வெளி இணைப்புகள்

தொகு
  • The Brooke Trustபுரூக் வம்சத்தின் பாரம்பரியம் பற்றிய கூடுதல் தகவல்கள்

மேலும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_புரூக்&oldid=3657929" இலிருந்து மீள்விக்கப்பட்டது