எசுப்பானியக் கிழக்கிந்தியா
எசுப்பானியக் கிழக்கிந்தியா (Spanish East Indies) 1565 முதல் 1898 வரையில் எசுப்பானியாவின் கைவசம் இருந்த ஆசியா-பசிபிக் பிராந்தியம் ஆகும். பிலிப்பைன்ஸ் தீவுகள், குவாம், மரியானா தீவுகள் மற்றும் கரோலைன் தீவுகளை இது உள்ளடக்கியதாகும். எசுப்பானியக் கிழக்கிந்தியாவானது சில காலங்களில், ஃபோர்மோசா வின் சில பகுதிகள் மற்றும் மொலுக்காச் போன்றவற்றையும் கைவசம் கொண்டிருந்தது. எசுப்பானியக் கிழக்கிந்தியாவின் அரசாங்க அமையிடமாக செபுவே அமைந்திருந்தது, பின்னர் மணிலாவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. 1565 தொடக்கம் 1821 வரையில் இப்பிராந்தியங்கள் புதிய எசுப்பானிய அரசால் எசுப்பானிய மேற்கிந்தியாவுடன் சேர்த்தே மெக்சிக்கோ நகரில் இருந்து நிர்வகிக்கப்பட்டது. மெக்சிக்கோவின் சுதந்திரத்தின் பின்னர் நேரடியாக எசுப்பானியத் தலைநகரான மத்ரித்தில் இருந்தே நிர்வகிக்கப்பட்டன.
எசுப்பானியக் கிழக்கிந்தியா Spanish East Indies Indias orientales españolas | |
---|---|
1565–1898 | |
நிலை | எசுப்பானியாவின் காலனித்துவ நாடு ( புதிய எசுப்பானியாவின் பிராந்தியங்கள் 1565 தொடக்கம் 1821 வரை, எசுப்பானிய மாகாணங்கள் 1821 தொடக்கம் 1898வரை) |
தலைநகரம் | |
பேசப்படும் மொழிகள் | எசுப்பானியம் மற்றும் உள்நாட்டு மொழிகள் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
ஆட்சியாளர் | |
• 1565–1598 (முதலில்) | இரண்டாம் பிலிப் |
• 1886–1898 (இறுதியாக) | அல்ஃபொன்சோ XIII |
கவனர் - ஜெனரல் | |
• 1565–1572 (முதலாவதாக) | மைகுவெல் லொபேஸ் டி லெகஸ்பி |
• 1898 (இறுதி) | த்யாகோ டெ லொஸ் ரியோஸ் |
வரலாற்று சகாப்தம் | எசுப்பானிய காலனியாக்கம் |
• காலனித்துவமாக்கல் | ஏப்ரல் 27 1565 |
டிசம்பர் 10 1898 | |
பரப்பு | |
1877[1] | 301,707 km2 (116,490 sq mi) |
மக்கள் தொகை | |
• 1877[1] | 5567685 |
நாணயம் | பிலிப்பைன் பெசோ |
தற்போதைய பகுதிகள் |
இவற்றையும் பார்க்க
தொகுநூற்பட்டியல்
தொகு- Cunningham, Charles Henry (1919). Stephens, H Morse; Bolton, Herbert E (eds.). The Audiencia in the Spanish Colonies as illustrated by the Audiencia of Manila (1583–1800) (Project Gutenberg). Publications in History. Berkeley: University of California Press. இணையக் கணினி நூலக மைய எண் 19679822.
- Phelan, John Leddy (1959). The Hispanization of the Philippines: Spanish Aims and Filipino Responses, 1565–1700. Madison: University of Wisconsin Press. அமேசான் தர அடையாள எண் B0007DMLSE.
வெளி இணைப்புகள்
தொகு- Philippine "எசுப்பானியக் காலம்"
- The Impact of Spanish Rule in the Philippines பரணிடப்பட்டது 2007-10-01 at the வந்தவழி இயந்திரம்
- குவாம் வரலாறும் கலாசாரமும் பரணிடப்பட்டது 2012-11-03 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Population of the Philippines Census Years 1799 to 2007 பரணிடப்பட்டது 2012-07-04 at the வந்தவழி இயந்திரம். National Statistical Coordination Board.