மின்டனாவ் (Mindanao, /mɪndəˈn/ min-də-NOW-') பிலிப்பீன்சின் இரண்டாவது மிகப்பெரியதும் தெற்குக் கோடியில் உள்ளதுமான முதன்மைத் தீவாகும். இத்தீவுடன் அருகிலுள்ள சிறு தீவுகளும் இணைந்த மின்டனாவ் தீவுக்கூட்டம் நாட்டிலிலுள்ள மூன்று தீவுக் கூட்டங்களில் (மற்றவை லூசோன், விசாயசு) ஒன்றாகும். மின்டனாவில் உள்ள மிகப்பெரிய நகரம் தவாவ் நகரமாகும். 2010 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தீவின் மக்கள்தொகை மட்டும் 20,281,545 ஆகும்; மின்டனாவ் தீவுக்கூட்டத்தின் மக்கள்தொகை 21,968,174 ஆகும்.[1]

மின்டனாவ்
மின்டனாவின் முதன்மை நிலப்பகுதி சிவப்பில்;
தொடர்புடைய தீவுகள் கருஞ்சிவப்பில்
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்8°00′N 125°00′E / 8.000°N 125.000°E / 8.000; 125.000
தீவுக்கூட்டம்பிலிப்பீன்சு
முக்கிய தீவுகள்மின்டனாவ், பசிலன், ஜோலோ
பரப்பளவு104,530 km2 (40,360 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை19th
உயர்ந்த ஏற்றம்2,954 m (9,692 ft)
உயர்ந்த புள்ளிமவுண்ட் அபொ
நிர்வாகம்
மண்டலங்கள்கரகா, வடக்கு மின்டனாவ், சம்போங்கா தீபகற்பம், தவாவ் மண்டலம், தன்னாட்சியான முசுலிம் மின்டனாவு மண்டலம், SOCCSKSARGEN
பெரிய குடியிருப்புதவாவ் நகரம் (மக். 1,449,296)
மக்கள்
மக்கள்தொகை21,968,174 (மின்டனாவ் தீவுக்கூட்டம்)
20,281,545 (மின்டனாவ் தீவில் மட்டும்) (2010)[1]
அடர்த்தி243 /km2 (629 /sq mi)
இனக்குழுக்கள்மரனவு மக்கள்

மின்டனாவின் தென்மேற்குப் பகுதிகளில், குறிப்பாக மகின்டனாவ் மாநிலம், லானாவ் டெல் சுர், சூலு, டாவி-டாவி மாநிலங்களில் (தன்னாட்சி பெற்ற முசுலிம் மின்டனாவ் மண்டலப் பகுதிகள்) முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். பரவலான ஏழ்மை மற்றும் சமய வேறுபாடுகளால் இத்தீவில் பொதுவுடமைவாத ஆயுதப்போராட்டங்களும் மோரோ தனிநாடு இயக்கங்களும் நடைபெற்று வருகின்றன.

மின்டனாவ் பிலிப்பீன்சின் வேளாண்மை ஆதாரமாகக் கருதப்படுகின்றது. பிலிப்பீன்சிலிருந்து ஏற்றுமதியாகும் முதல் பத்து வணிகப்பயிர்களில் எட்டு இங்கு உற்பத்தியாகின்றது.[2]

மேற்சான்றுகள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mindanao
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிண்டனாவோ&oldid=3639202" இருந்து மீள்விக்கப்பட்டது