மலாய-பொலினீசிய மொழிகள்

மலாய்-பொலினீசிய மொழிகள் என்பன ஆஸ்திரோனீசிய மொழிகளின் ஒரு துணைக் குழுவாகும். ஏறத்தாழ 351 மில்லியன் மக்கள், மலாய்-பொலினீசிய மொழிகளில் ஒன்றைப் பேசிவருகிறார்கள். இந்த மொழிகள் தென்கிழக்கு ஆசியாவிலும், பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் தீவு நாடுகளிலும், ஆசியாவில் சிறிய அளவில் சில இடங்களிலும் பேசப்படுகின்றன.[1]

மலாய்-பொலினீசிய மொழிகள்
Malayo-Polynesian
Bahasa-bahasa Melayu-Polinesia
புவியியல்
பரம்பல்:
தென்கிழக்காசியா, கிழக்காசியா, பசிபிக், மடகாசுகர்
மொழி வகைப்பாடு: ஆசுத்திரோனீசியம்
 மலாய்-பொலினீசிய மொழிகள்
Malayo-Polynesian
முதனிலை-மொழி: புரோட்டோ-மலாய்-பாலினேசிய மொழி
துணைப்பிரிவு:
ISO 639-5: poz

மலாய்-பொலினீசிய மொழிகள் குழுவைச் சேர்ந்த மலகாசி மொழி, இம் மொழிகள் பொதுவாகக் காணப்படும் புவியியல் பகுதிக்கு வெளியே, இந்துப் பெருங் கடலில் உள்ள மடகாஸ்கர் தீவிலும் பேசப்படுகிறது.

பொது

தொகு

பன்மையைக் குறிப்பதற்கு ஒரு சொல்லையோ அதன் பகுதியையோ இரு தடவை பயன்படுத்துதல் மலாய் போலினீசிய மொழிகளிடையே காணப்படும் ஒரு இயல்பாகும். அத்துடன் ஏனைய ஆஸ்திரோனீசிய மொழிகளைப் போல இம் மொழிகளும் எளிமையான ஒலியனமைப்பைக் (phonology) கொண்டவை.

இதனால் இம்மொழியின் உரைகள் குறைவான; ஆனால் அடிக்கடி வரும் ஒலிகளைக் கொண்டவை. இம் மொழிக் குழுவிலுள்ள பெரும்பாலான மொழிகளில் கூட்டுமெய்கள் (consonant clusters) இருப்பதில்லை. இம் மொழிகளுட் பல உயிரொலிகளையும் குறைவாகவே கொண்டுள்ளன. ஐந்து உயிர்களே பொதுவாகக் காணப்படுவதாகும்.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்

தொகு
  1. Blust, Robert (2013). The Austronesian Languages (revised ed.). Australian National University. hdl:1885/10191. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-922185-07-5.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாய-பொலினீசிய_மொழிகள்&oldid=4085877" இலிருந்து மீள்விக்கப்பட்டது