எம்பிராயெர்
எம்பிராயெர் எஸ்.ஏ. (Embraer S.A.) வணிக, படைத்துறை, செயலலுவலர், வேளாண்மைப் பயன்பாட்டிற்கான வானூர்திகளைத் தயாரிக்கும் பிரேசிலிய வான்வெளித்துறை நிறுவனக் குழுமம் ஆகும்.[5] இது வான்வெளிவழிப் பயணங்களுக்கான சேவைகளையும் வழங்குகிறது.[6][7] இதன் தலைமையகம் சாவோ பவுலோ மாநிலத்தில் சாவோ ஓசே டோசு கேம்போசில் அமைந்துள்ளது.[8]
வகை | எஸ்.ஏ. (பொதுப்பங்கு நிறுவனம்) |
---|---|
நிறுவுகை | 1969 |
தலைமையகம் | சாவோ ஓசே டோசு கேம்போசு, பிரேசில் |
முதன்மை நபர்கள் | எர்மான் வெவெர், (இடைக்காலத் தலைவர்)[1] பிரெடெரிக்கோ புளூரி குரடொ (முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | வான்வெளித் தொழில், பாதுகாப்பு |
உற்பத்திகள் | வானூர்தி, வானூர்தி உதிரி பாகங்கள், வான்வழி மற்றும் தரைநிலைய கட்டுப்பாட்டு அமைப்புகள் |
வருமானம் | அமெரிக்க டாலர் 5.7 பில்லியன் (2013)[2] |
நிகர வருமானம் | அமெரிக்க டாலர் 329.1 மில்லியன் (2013)[3] |
பணியாளர் | 18,003[4] |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | இன்டஸ்ட்ரியா ஏரோநாட்டிகா நீவா ஓஜிஎம்ஏ ஏடெக் ஓர்பிசாட் |
இணையத்தளம் | www.embraer.com |
எம்பிராயேர் ஏர் டிரான்ஸ்போர்ட் ஆக்சன் குழுமத்தின் அங்கமாகும். இதன் முதன்மை செயல் அதிகாரியாக, பிரெடெரிக்கோ குரடொ பொறுப்பில் உள்ளார். வணிக வான்வெளித்துறையில் இவரது பங்களிப்பிற்காக 2012இல் டோனி யானுசு விருது வழங்கப்பட்டுள்ளது.[9] மிகப் பெரிய வானூர்தி தயாரிப்பாளர்களான ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுக்கு அடுத்தநிலையில் மூன்றாவது இடத்தைப் பெற எம்பிராயெர் கனடாவின் பம்பார்டியெர் நிறுவனத்துடன் போட்டியிடுகிறது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Botelho resigns as chairman of Embraer". Flightglobal. http://www.flightglobal.com/news/articles/botelho-resigns-as-chairman-of-embraer-366924/. பார்த்த நாள்: 15 January 2012.
- ↑ "Embraer on the Forbes Global 2000 List". Forbes.com. பார்க்கப்பட்ட நாள் 2013-03-21.
- ↑ name="marketwatch.com"/
- ↑ Press Room: Embraer in Numbers embraer.com (Official Site)
- ↑ "Aircraft". Embraer official site. பார்க்கப்பட்ட நாள் May 12, 2014.
- ↑ Corporate governance, p. 357 Robert A. G. Monks, Nell Minow. John Wiley and Sons. 2008.
- ↑ Timeline பரணிடப்பட்டது 2014-10-20 at the வந்தவழி இயந்திரம் Embraer Historical Center (Official site)
- ↑ "IR Contact பரணிடப்பட்டது 2014-08-05 at the வந்தவழி இயந்திரம்." Embraer. Retrieved on March 18, 2014. "Address: Av. Brigadeiro Faria Lima, 2170. Putim. São José dos Campos - SP. CEP 12.227-901. Brasil."
- ↑ Gadsen, Sandra J. (March 15, 2012). "Frederico Curado of Embraer named Jannus Award winner". Tampa Bay Times. http://www.tampabay.com/news/humaninterest/frederico-curado-of-embraer-named-jannus-award-winner/1220017. பார்த்த நாள்: 2012-03-15.