ஏர்பஸ்

அமெரிக்க விமான தயாரிப்பாளர்கள்

ஏர்பஸ் (Airbus) நிறுவனம் ஒரு விமானத் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் ஈ.ஏ.டி.எஸ் (EADS) எனும் ஐரோப்பிய நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். நிறுவனத்தின் தலைமையகம் பிரான்சு நாட்டின் துலூஸ் நகரின் அருகில் அமைந்துள்ளது. இதன் கிளை நிறுவனங்களும் கட்டுமான இடங்களும் ஐரோப்பிய கண்டம் முழுவதும் ஆங்காங்கே இருக்கின்றன. இந்நிறுவனம் உலகின் பாதி ஜெட் விமானங்களை தயாரிக்கிறது.

ஏர்பஸ் SAS
வகைதுணை நிறுவனம்
நிறுவுகை1970 (as Airbus Industrie)
2001 (Airbus as SAS)
தலைமையகம்துலூஸ், பிரான்ஸ்
முக்கிய நபர்கள்Fabrice Brégier
(Chief Executive Officer)
Guenter Butschek
(Chief Operating Officer)
தொழில்துறைவிண்வெளி
உற்பத்திகள்வர்த்தக விமானங்கள்
வருமானம் €33.10 billion (FY 2011)[1]
நிகர வருமானம் €1.597 பில்லியன் (FY 2008)
பணியாளர்63,000[2]
தாய் நிறுவனம்EADS
துணை நிறுவனங்கள்ஏர்பஸ் இராணுவம்
இணையத்தளம்www.airbus.com
A 330-200 Air Seychelles 2013

ஏர்பஸ் பல வானூர்தி அமைப்புகளின் கூட்டமைப்பாக முதலில் தொடங்கப்பட்டது. ஐரோப்பாவின் தற்காப்பு மற்றும் வானூர்தி நிறுவனம் ஒன்றை உருவாக்குவதன் பொருட்டு ஏர்பஸ் ஒரு நிறுவனமாக 2001-ல் தொடங்கப்பட்டது. அப்போது இந்நிறுவனத்தின் பங்குகள் 80% ஈ.ஏ.டி.எஸ் நிறுவனத்திடமும் 20% பி.ஏ.ஈ (BAE) நிறுவனத்திடமும் இருந்தன. 2006-ஆம் வருடம் பி.ஏ.ஈ தன் பங்குகளை ஈ.ஏ.டி.எஸ் நிறுவனத்திடம் விற்றது.

இந்நிறுவனத்தில் 57,000-க்கும் அதிகமானோர் வேலை செய்கின்றனர். இந்நிறுவனம் ஜெர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. விமானங்களின் கடைசி ஒருங்கிணைந்த உருவாக்கத் தொழிற்சாலைகளை டோலோஸ் (பிரான்சு), கம்பெர்க் (ஜெர்மனி), செவில்(ஸ்பெயின்) மற்றும் (2009 முதல்) தியன்சின் (சீனா) ஆகிய இடங்களில் கொண்டுள்ளது. மேலும் இதன் கிளை நிறுவனங்கள் அமெரிக்க, இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் உள்ளன.

இந்நிறுவனமே முதன் முதலில் மின் கட்டுப்பாட்டு முறையில் செயல்படும் விமானத்தையும் உலகத்திலேயே மிகப் பெரிய விமானத்தையும் (ஏர்பஸ் 380) தயாரித்து விற்பனை செய்தது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்பஸ்&oldid=3807120" இருந்து மீள்விக்கப்பட்டது