முதன்மை பட்டியைத் திறக்கவும்

தொழினுட்பம்

(தொழில்நுட்பம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
sharmila
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், மனிதன் புவியைவிட்டுக் கிளம்பி வான்வெளியில் உலாவரும் அளவுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெற்றான்.

தொழில் நுட்பம் என்பது, பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பு. தொழினுட்பம் கருவிகள், கைவினைகள் முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவை எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும், அதனோடு இயைந்து வாழவும் கூடிய தகுதியில், தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுடனும் தொடர்புள்ள ஒரு பரந்த கருத்துரு ஆகும். எனினும் ஒரு இறுக்கமான வரைவிலக்கணம் இதற்குக் கொடுக்க முடியாது. தொழினுட்பம் பொறிகள், வன்பொருட்கள், பயன்பாட்டுப் பொருட்கள் போன்ற மனித இனத்துக்குப் பயன்படும் பொருள்களைக் குறிக்கக்கூடும். ஆனால் இது இன்னும் பரந்த முறைமைகள், அமைப்பு முறைகள், நுட்பங்கள் என்பவற்றையும் குறிக்கக்கூடும். இச் சொல்லைப் பொதுப் பொருளில் ஆள்வதுடன், குறிப்பிட்ட துறைகள் சார்பாகவும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, கட்டுமானத் தொழினுட்பம், மருத்துவத் தொழினுட்பம் போன்ற பயன்பாடுகள் குறிப்பிட்ட துறைகள் சார்ந்தவையாகும்.

அறிவியல் எ.க பொறியியல் எ.க தொழில்நுட்பம்தொகு

அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இம்மூன்றும் ஒன்றுக்கொண்று நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், இம்மூன்றும் வெவ்வாறனவை. இவற்றிற்கிடையே வித்தியாசத்தினை தெளிவாக வரையறுக்கமுடியாது எனினும் தோராயமாக நாம் இவற்றிற்கிடையேயுள்ள வித்தியாசத்தினை அறியலாம்.[1] தியோடர் வோன் கர்மான் அவர்களின் பிரபலமான கூற்றின்படி:'அறிவியல் என்பது இவ்வுலகம் எப்படி இருக்கிறது/உருவானது என்பதை விளக்குகிறது; பொறியல் என்பது அவரின் கூற்றின்படி இதுவரை இல்லாத உலகை/பொருளை/செய்முறையை உருவாக்குகிறது. தொழில்நுட்பம் என்பது பொறியியல் கருவிகள், உபகரணங்கள் அவற்றை எப்படி செயல்படுத்துவது/உபயோகப்படுத்துவது மற்றும் அதன் செயல்முறைகள் அனைத்தையும் உள்ளடக்கியது'.

அறிவியலானது பொதுவான உண்மைகளையும் விதிகளையும் உள்ளடக்கியது, அறிவியல் என்பது உலகினை கவனித்தலின் மூலமாக பெறக்கூடிய ஞானமாகும்; பொறியியல் என்பது அறிவியலால் பெறப்பட்ட அறிவினை கொண்டு இதுவரை இல்லாத ஒரு பொருளினையோ/உலகினையோ வடிவமைப்பு மற்றும் உருவாக்ககூடிய முறையாகும். தொழில்நுட்பம் என்ற சொற்றொடர் ஒப்புமை அளிக்கப்பட்ட அனைத்துவிதமான பொறியியல் கருவிகள்/செய்முறைகளை திரும்ப திரும்ப பயன்படுத்தலின் மூலமாக உருவாகிறது.[2]

அறிவியலாளர்கள் வழக்கத்திலிருக்கும் அறிவு மற்றும் உபகரணங்களை கொண்டு மின்கடத்தியில் எதிர்மின்னியின் ஒட்டம் எவ்வாறு இருக்கிறது என்பதை கண்டறிகின்றனர், இந்தப் புதிய அறிவு மற்றும் கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்து பொறியியலாளர்கள் புதிய உபகரணங்கள் மற்றும் கருவிகளான குறைக்கடத்தி, கணினியை கண்டுபிடிக்கின்றனர். தொழில்நுட்பவாதிகள் புதிதாக கண்டறியப்பட்ட பொருளை அறிவியல் மற்றும் பொறியியல் நுட்பத்தின் உதவி கொண்டு அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்கின்றனர்.

வரலாறுதொகு

 
பழங்கால வெட்டி

பழைய கற்காலத்தில் மனிதர்களின் கருவிகள் பயன்பாடு தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்பு மற்றும் பரிமாண வளர்ச்சியின் அடிப்படையில் இருந்தது. ஆதிமனிதன் கற்களை கொண்டு ஆயுதம் செய்தான்; சுமார் 75000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆரம்பகால கல்கருவிகள் ஒரு சிதறடிக்கப்பட்ட பாறைகளை விட சற்று பெரியதாக இருந்தன.[3] பின்பு தீயின் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாடானது எளிமையான ஆதார சக்தியாக மட்டுமில்லாமல், மனிதகுலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.[4] தீ கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டின் விவரம் சரியாத தெரியாதபொழுதும், மனிதகுலத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் பகுதியில் அகழ்வராய்ச்சியின் பொழுது எடுக்கப்பட்ட எரிந்த விலங்குகளின் எலும்புகள் ஆதாரங்கள், வீட்டு உபயோகத்தில் தீ தோரயமாக 1MA ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டிற்கு வந்திருக்கவேண்டும் என்பதை கூறுகிறது.;[5] சுமார் 500000 மற்றும் 400000(400Ka) ஆண்டுகளில் ஹோமா எரக்டஸ் மனித இனம் தீயை கட்டுபடுத்தியதாக அறிஞர்கள் ஒருமித்தவாறு சுட்டிக்காட்டுகின்றனர்.[6][7] ஆரம்பகால மனிதர்கள் தங்கள் உணவை சமைப்பதற்கும், அதன் செரிமானத்தை அதிகரிக்கவும், ஊட்டச்சத்து மதிப்புகளை மேம்படுத்தவும், சாப்பிடக்கூடிய உணவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மரம் மற்றும் நிலக்கரி கொண்டு எரியச்செய்யும் 'தீயானது' அனுமதித்தது.[8] பண்டைய கற்காலத்தின்போது ஏற்பட்ட பிற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஆடை மற்றும் தங்குமிடம் ஆகியனவாகும்; இவ்விரு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டு காலத்தினைச் சரியாகத் தேதியிட முடியாது, ஆனால் அவை மனித முன்னேற்றத்திற்கான முக்கியமான கண்டுபிடிப்புகள் ஆகும். பண்டைய கற்கால வளர்ச்சியின்பொழுது, இருப்பிடமானது பெரியதாகவும், நவீனமாகவும் மாறியது. 380000(380ka) ஆண்டுகளில், மனிதர்கள் மரக்கட்டைகளை கொண்டு இருப்பிடங்களை கட்டினர்.[9][10] ஆடையானது, வேட்டையாடப்பட்ட மிருகங்களின் மென்மையான மயிர்க்கால்களிலிருந்தும்(முடிகள்), தோல்களிலிருந்தும் செய்யப்பட்டது; இது மனித குலத்தினை குளிர்பிரதேசங்களிலும் விரிவுபடுத்த உதவியது. 200000(200ka) ஆண்டுகள்வாக்கில், மனிதகுல இனம் தெற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோவாசியாவிற்கு இடம்பெயர்ந்தனர்.[11]

தொழினுட்பத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியின் காரணமாக உலை மற்றும் துருத்தியின் கண்டுபிடிப்பால், இயற்கையில் கிடைக்கும் தங்கம், செம்பு, இரும்பு மற்றும் காரீயம் போன்ற உலோகங்களை உருக்கி(smelt), கலந்து(forge) உலோக கருவிகள் செய்யப்பட்டன.[12]

 
கி.மு 4000ல் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இடைக் கற்காலத்தில் மனிதர்கள் பிற ஆற்றல்களை தங்களுக்கு பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றக் கற்கத்தொடங்கியிருந்தனர், காற்றின் சக்தியை அறிந்து பாய்மர கப்பலை செலுத்த துவங்கியிருந்தனர், நைல் நதியில் பாய்மர கப்பல் சென்றதற்கான ஆதாரம் இடைக்கற்காலமான கி.மு 8-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த கல்வெட்டினில் காணலாம்.[13] இடைக்கற்காலத்தில் தொழில்னுட்ப வள்ர்ச்சியின் காரணமாக சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது.

புதிய கற்காலத்தில் மனிதர்கள் 'கூர்மையான கல் கோடாரியை' கண்டறிந்த பிறகு காடழிப்பு என்பது எளிதானது, பெரிய பரப்பளவில் விவசாய நிலங்கள் உருவானது; விவசாயம் அதிகப்படியான மக்களுக்கு உணவளித்தது, அதன் காரணமாக பண்பாட்டு மானிடவியல் மாறியது, மனிதர்கள் ஒரே இடத்தில் நெடுங்காலம் வசிப்பவர்களாக மாறினர், குழந்தை பிறப்பு அதிகரித்தது, நாடோடிகளாக இருந்தபொழுது குழந்தைகளை சுமந்து திரியவேண்டும், ஆனால் குழந்தைகள் இப்பொழுது தொழிலாளர்களாக மாறி விவசாயத்திற்கு உதவினர்.[14][15]

நடுக்காலத்திலும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன, உரோமைப் பேரரசுவின் வீழ்ச்சிக்குப் பிறகு பட்டு, குதிரைச்சேணம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. பின்பு சிறிய உபகரணங்களான நெம்புகோல், திருகாணி மற்றும் கப்பி போன்றவை கண்டறியப்பட்டு பின்பு சிக்கலான கருவிகளான ஒற்றைச் சில்லு வண்டி, காற்றாலை மற்றும் கடிகாரம் செய்ய உதவின. 14ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான மறுமலர்ச்சி காலத்தில் அச்சு இயந்திரம் போன்ற பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின

 
தானுந்து தனிப்பட்ட போக்குவரத்தில் புரட்சி செய்தது.

18ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் துவங்கிய தொழிற்புரட்சியானது, வேளாண்மை, உற்பத்தி, சுரங்க, உலோகவியல் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில், நீராவி சக்தியின் கண்டுபிடிப்பால் உந்தப்பட்ட பெரும்பாலான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் காலமாகும். இரண்டாம் தொழிற்துறைப் புரட்சியில் மின்சார இயக்கி, ஒளி விளக்கு போன்ற எண்ணற்ற புதுமைகளை உருவாக்க தொழில்நுட்பம் மின்சாரம் கொண்டு உதவியது. வளரும் தொழில்நுட்பம் வானளாவிய கட்டிடங்கள் மற்றும் பரந்த நகர்ப்புற பகுதிகளுக்கு வழிவகுத்தது, இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் போக்குவரத்து மறறும் உணவு விநியோகங்களுக்கு விசைப்பொறிகள் சார்ந்திருக்கின்றனர். தந்தி, தொலைபேசி, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் கண்டுபிடிப்புடன் தொடர்பாடல் மிகவும் பெரிதும் மேம்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பமும் விமானப் போக்குவரத்து மற்றும் ஆட்டோமொபைல் கண்டுபிடிப்புகளால் போக்குவரத்தில் ஒரு புரட்சியைக் கண்டது.

 
1991ல் நடைபெற்ற குவைத்போரில் பங்குபெற்ற எப்-15 மற்றும் எப்-16 விமானங்கள்

இயற்பியலில் அணுக்கரு பிளவின் கண்டுபிடிப்பானது அணு ஆயுதங்கள் மற்றும் அணு சக்தி ஆகிய இரண்டிற்கும் வழிவகுத்தது. திரிதடையம்(ஆங்:Transistor) மற்றும் தொகுசுற்று (ஆங்: Integrated circuits) ஆகியவற்றின் சிறியதாக்கபட்ட பின்பு கணினி கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பம் பின்னர் இணைய உருவாக்கத்திற்கு இட்டுச்சென்றது, இது தற்போதைய தகவல் காலத்தினை அறிமுகப்படுத்தியது. மனிதர்கள் செயற்கைகோள்கள் கொண்டு விண்வெளியை ஆராய முடிந்தது(பின்னர் தொலைத்தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டது) மற்றும் சந்திரனுக்கான மனிதப் பயணங்கள் அனைத்து வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவத்தில், இந்த சகாப்தம் புதிய் கண்டுபிடிப்புகளை கண்டறிந்தது அவை, திறந்த இதய அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் சிகிச்சை மற்றும் புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் ஆகும்.

பயன்பாடுகள்தொகு

மனித இனத்தின் தொழினுட்பப் பயன்பாடு, இயற்கை வளங்களை எளிமையான கருவிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தியதுடன் தொடங்குகிறது. வரலாற்றுக்கு முந்திய கண்டுபிடிப்புக்களான, தீயைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தல், உணவு வளங்களைப் பெருக்கிக் கொள்ளவும், சில்லின் கண்டுபிடிப்பு போக்குவரத்துச் செய்வதற்கும், சூழலைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவின. பிந்திய காலக் கண்டுபிடிப்புக்களான, அச்சியந்திரம், தொலைபேசி, இணையம் என்பன தொடர்புகளுக்கான ஸ்தூலமான தடைகளை இல்லாமலாக்கியதுடன், மனிதர்கள் உலக அளவில் எளிதாக தொடர்பு கொள்ள வழி வகுத்தன.

சவால்கள்தொகு

தொழில் நுட்பங்கள் அனைத்தும் ஒட்டுமொத்த மனித இனத்தின் நலனுக்காகவோ அல்லது உலக அமைதிக்காகவோ பயன்படுகின்றன என்பதில்லை. கொலை ஆயுதங்களின் வளர்ச்சிக்கு வரலாறு முழுவதும் தொழினுட்பம் பயன்பட்டிருக்கிறது. எளிமையாக கத்தி முதல், அணுவாயுதங்கள் வரை அதிகரித்துவரும் அழிப்பு ஆற்றலுடன் கூடிய ஆயுதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழினுட்பம் சமூகத்தையும், அதன் சுற்றாடலையும் பல வழிகளில் பாதித்துள்ளது. பல சமுதாயங்களில், உயர்ந்த பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதற்குத் தொழினுட்பம் உதவியுள்ளது. பல தொழில்நுட்பச் செயல்முறைகள், மாசுறுதல் போன்ற தேவையற்ற பக்க விளைவுகளை உருவாக்குவதுடன், இயற்கை வளங்களையும் அளவு மீறிச் சுரண்டுகிறது.

மற்ற விலங்கு இனங்கள்தொகு

 
கொரில்லா குரங்கு ஊன்று கோல் கொண்டு நீரின் ஆழத்தை அளவீடுகிறது, இது தொழினுட்பத்தை மற்ற உயிரினங்களும் பயன்படுத்துவதற்கு எடுத்துகாட்டாகும்.

அடிப்படை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மனித இனத்தைத் தவிர மற்ற விலங்கு வகைகளின் ஒரு அம்சமாகும். இவற்றுள் சிம்பன்சிகள், ,[16] சில ஓங்கில் இனங்கள்,[17] மற்றும் காகங்கள் போன்ற உயிரினங்களும் அடங்கும்.[18][19]

தற்கால தொழினுட்பம்தொகு

தொழில் நுட்பம் வளர்ச்சி அடைவது என்பது மனிதனின் வேகத்திற்கு மற்றும் திறனுக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் வளர்ச்சி கொள்வதே. வளர்ந்து வரும் புதிய தலைமுறைகள் கேஜெட்கள் இல்லாமல் இருப்பது இல்லை. தங்களுக்கு தேவையான அத்தனை தகவல்களும் விரல் நுனியில் தேடி படித்துக்கொள்கிறார்கள்.

தற்கால தொழினுட்பத்தில் இன்றியமையாதது அனிந்து கொள்ளும் கேஜெட்கள். கைக்கடிகாரமாக, கண்ணாடியாக மற்றும் காலனியாக என எல்லாவற்றிலும் தொழில் நுட்பம் தன் அடையாலத்தை பதித்து உள்ளது. உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படி தற்கால் தொழில் நுட்பம் வடிவமைக்கப் படுகிறது. தற்கால தொழில்னுட்பம், அடிப்படை தொழில்னுட்பத்தை கடந்து வாழ்க்கை முறையை மாற்றி, வரும் தலை முறைகளுக்கு ஏற்றார்போல் மாற்றமடைந்து கொண்டே இருக்கும்.

இன்றைய தொழில்னுட்பம் பாதுகாப்பை மேம்படுத்துவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, புதிய கண்டுபிடிப்புகளை தங்கள் தொழில்னுட்பத்தில் இனைத்து பழைய இயகங்களை எளிதில் இயக்கவும், புதிய இயகங்களை உருவாக்கவும் முனைகிறார்கள். ஒவ்வொரு முறை தங்கள் தொழில்னுட்பம் பாதுகாப்பை நழுவ விடும் போதும், புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்க வித்தாக அமைகிறது.

சில தொழில்னுட்பங்கள் மனிதன் மகிழ்ச்சியாக இருக்கவும், சில தன் பாதுகாப்பை மேம்படுத்துவதும், சில தன் வழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிக்கும் படியும் உள்ளது. அல்ட்ரா ஹச்.டி. தொலைக்காட்சியாகட்டும், மெய்நிகர் உண்மை கேஜெட்கள் ஆகட்டும் அல்லது ஸ்பேஸ் எக்ஸ் போன்ற புதிய ராக்கெட் ஆகட்டும் எல்லாம் தற்கால தொழில்னுட்பங்கள் தான்.

இத்தகைய சிறப்பு மிக்க தொழில்னுட்பங்கள் முதியவர்களுக்கும் எளிமையாக உபயோகிக்கும் படி அவர்களுக்காகவே சில கண்டுபிடிப்புகள் உயிர் காக்கும் கருவியாக உள்ளது. இரத்த அழுத்தம், இரத்ததில் சர்க்கரை அளவு கண்டுகொள்ள மேலும் ஊட்டச்சத்து விகிதாச்சாரத்தின் படி உனவு பரிந்துறைத்தல் என சுகாதாரத்தை மேம்படுத்துவதர்க்கும் பயன்படுகிறது.

தற்கால தொழினுட்பம் - விவசாயம்:தொகு

இயற்கை வளங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய முயலும் தற்கால விவசாயிகளுக்கு தொழில்னுட்பம் பெரிய வரப்பிரசாதம். சாகுபடியில் இருந்து, பாசனம் செய்து; அறுவடை முடிக்கும் வரை எல்லாக் காலத்திலும் தொழில்னுட்பம் பயன்படுகிறது. விவசாயத்தில் காலமும், மகசூலும் மிக மிக முக்கியமானது. தற்கால தொழில்னுட்பம் சரியான நேரத்தில் விதைக்கவும், களையெடுக்கவும், அறுவடை செய்யவும் பக்க பலமாக உள்ளது. புதிய தொழில்னுட்பங்கள், பழைய தொழில்னுட்பத்தை விட மேம்பட்டு உள்ளது.

பயிர் செடிகளை அழிக்கும் பூச்சிகளை, கட்டுப் படுத்தவும், விரைவாக பூச்சிகளை அழிக்கவும் இன்றைய தொழில்னுட்பம் இன்றியமையாததாக உள்ளது. புதிய மரபனு மற்றிய விதைகள் இயற்கையாகவே பூச்சிகளை எதிர்க்கவும், நீராதரத்தை குறைவாக பயன்படுத்தும் படியும் மற்றி அமைக்க தொழில்னுட்பம் பயன்படுகிறது.

நீர் மேலன்மையை மனதில் கொண்டு பயிர்களுக்கு தேவையான நீரை பாய்ச்ச, சொட்டு நீர் பாசனத்திற்கு தானியங்கி மூலமாக தேவை அறிந்து நீரை கொடுக்கவும் செய்திகள் பதியப்பட்டு விவசாயிகளுக்கு வேலைப்பழுவை குறைத்துள்ளது.

மறுசுழற்சிக்கு ஏற்றபடி தொழில்னுட்பம் வளைந்து கொடுக்கும் விதமாக வடிவமைத்து இயற்கை வளத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது. விவசாய கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தப் பட்டு, மீண்டும் உறமாக எளிதில் மற்றவும், அறுவடை செய்த பயிர்களை பாதுகாக்கவும், பேக்கிங் செய்து சந்தைக்கு கொண்டு செல்வதிலும் உதவுகிறது.

எதிர் காலத் தொழினுட்பம்தொகு

தொழில்நுட்பத்தின் கோட்பாடுகள் பெரும்பாலும் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கின்றன, இருப்பினும் எதிர்காலத்தின் அனைத்து கணிப்புகளையும் போல தொழில்நுட்பமும் நிச்சயமற்றது.

எதிர்காலவாதியான ரே கர்வெயில் எதிர்காலத்தில் மரபியல், நானோ தொழில்நுட்பம் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகிய மூன்று முக்கிய தொழில்நுட்பமாக இருக்கும் என கணித்துள்ளார்.[20]

வெளி இணைப்புகள்தொகு

சான்றுகள்தொகு

 1. "Science" (2016).
 2. "Intute: Science, Engineering and Technology". Intute. மூல முகவரியிலிருந்து 17 February 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 February 2007.
 3. Bower, Bruce (October 29, 2010). "Stone Agers Sharpened Skills 55,000 Years Earlier Than Thought". WIRED. https://www.wired.com/2010/10/stone-tool-sharpening/. 
 4. Crump, Thomas (2001). A Brief History of Science. Constable & Robinson. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84119-235-X. 
 5. "Fossil Hominid Sites of Sterkfontein, Swartkrans, Kromdraai, and Environs". ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். பார்த்த நாள் 10 March 2007.
 6. "Stone Age Man". History World. பார்த்த நாள் 13 February 2007.
 7. James, Steven R. (February 1989). "Hominid Use of Fire in the Lower and Middle Pleistocene". Current Anthropology 30 (1): 1–26. doi:10.1086/203705. 
 8. Stahl, Ann B. (1984). "Hominid dietary selection before fire". Current Anthropology 25 (2): 151–68. doi:10.1086/203106. 
 9. O'Neil, Dennis. "Evolution of Modern Humans: Archaic Homo sapiens Culture". Palomar College. பார்த்த நாள் 31 March 2007.
 10. Villa, Paola (1983). Terra Amata and the Middle Pleistocene archaeological record of southern France. Berkeley: University of California Press. பக். 303. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-520-09662-2. 
 11. Cordaux, Richard; Stoneking, Mark (2003). "South Asia, the Andamanese, and the Genetic Evidence for an 'Early' Human Dispersal out of Africa" (PDF). American Journal of Human Genetics 72 (6): 1586–90; author reply 1590–93. doi:10.1086/375407. பப்மெட்:12817589. பப்மெட் சென்ட்ரல்:1180321. http://site.voila.fr/rcordaux/pdfs/04.pdf. 
 12. Cramb, Alan W. "A Short History of Metals". கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம். மூல முகவரியிலிருந்து 8 January 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 January 2007.
 13. "The oldest representation of a Nile boat". Antiquity 81. 
 14. University of Chicago Press Journals (January 4, 2006). "The First Baby Boom: Skeletal Evidence Shows Abrupt Worldwide Increase In Birth Rate During Neolithic Period". ScienceDaily. https://www.sciencedaily.com/releases/2006/01/060103114116.htm. 
 15. Sussman, Robert W.; Hall, Roberta L. (April 1972). "Child Transport, Family Size, and Increase in Human Population During the Neolithic". Current Anthropology (University of Chicago Press) 13 (2): 258–67. doi:10.1086/201274. 
 16. "Chimpanzee Tool Use". மூல முகவரியிலிருந்து 21 September 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 13 February 2007.
 17. Rincon, Paul (June 7, 2005). "Sponging dolphins learn from mum". BBC News. http://news.bbc.co.uk/2/hi/science/nature/4613709.stm. 
 18. Schmid, Randolph E. (October 4, 2007). "Crows use tools to find food". NBC News. http://www.nbcnews.com/id/21135366/#.WCYQR9IrLIU. 
 19. Rutz, C.; Bluff, L.A.; Weir, A.A.S.; Kacelnik, A. (4 October 2007). "Video cameras on wild birds". Science 318 (5851): 765. doi:10.1126/science.1146788. Bibcode: 2007Sci...318..765R. 
 20. Kurzweil, Ray (2005). "GNR: Three Overlapping Revolutions". The Singularity is Near. Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781101218884. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழினுட்பம்&oldid=2775313" இருந்து மீள்விக்கப்பட்டது