எப்-15 ஈகிள்
எப்-15 ஈகிள் (F-15 Eagle) தாக்குதல் வானூர்தி மக்டொனல்-டக்லஸ் (பின்பு போயிங்) என்னும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது. எதிரி வானூர்திகளால் வீழ்த்த முடியாத தாக்குதல் வானூர்தி என்று பெயர் பெற்றது.[2][3] இது ஐக்கிய அமெரிக்க விமானப்படையினால் முக்கியமாகவும் இஸ்ரவேல், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளாலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஏவுகணைகளைக் கொண்டு செல்லக் கூடியதாகவும், எதிரி விமானங்களைத் தாக்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருப்பினும் 1981-ஆம் ஆண்டு இது எப்-15இ ஸ்ரைக் ஈகிள் ஆக தரைத்தாக்குதலுக்குப் பயன்படுத்தும் வகையில் நவீனமயப்படுத்தப்பட்டது.
எப்-15 ஈகிள் | |
---|---|
எப்-15 ஈகிள் ஏஐஎம்-7 ஸ்பரோ ஏவுகணையினைச் செலுத்துகிறது | |
வகை | தாக்குதல் வானூர்தி |
உற்பத்தியாளர் | மக்டொனல்-டக்லஸ(பின்பு போயிங்) |
முதல் பயணம் | 27 ஜூலை 1972 |
அறிமுகம் | 9 ஜனவரி 1976 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்கா இஸ்ரவேல், சவூதி அரேபியா, Japan |
தயாரிப்பு எண்ணிக்கை | F-15A/B/C/D/J/DJ: 1,198[1] |
அலகு செலவு | F-15A/B: US$28 million (1998) F-15C/D: US$30 million (1998) |
மாறுபாடுகள் | எப்-15இ ஸ்ரைக் ஈகிள் எப்-15 STOL/MTD எப்-15SE Silent Eagle]] Mitsubishi F-15J |
வகைகள்
தொகு- F-15ஏ
- தனி ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய வான் தக்குதல் விமானம். 1972-1979 வரை 384 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
- F-15பி
- இரு ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய பயிற்சி விமானம்.1972-1979 வரை 61 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன
- F-15சீ
- தனி ஓட்டுனருடன் கூடிய அனைத்து வானிலைக்கும் தாக்குப்பிடிக்கக்கூடிய வான் தாக்குதல் விமானம். 1979-1985 வரை 483 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
- F-15டி
- இரு ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய பயிற்சி விமானம்.1979-1985 வரை 92 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
குறிப்புகள்
தொகு