எப்-15இ ஸ்ரைக் ஈகிள்
எப்-15இ ஸ்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle) என்பது ஐக்கிய அமெரிக்காவின் எல்லா காலநிலைக்கும் ஏற்ற பல பாத்திர சண்டை வானூர்தியாகும். எப்-15 ஈகிள் வானூர்தியை அடிப்படையாகக்கொண்டு வழித்துணைப் பாதுகாப்பு அல்லது மின்னியல் போர் வானூர்தி இன்றி நீண்ட தூர, அதிவேக தடைக்காக இது 1980களில் வடிவமைக்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்க வான்படை எப்-15இ ஸ்ரைக் ஈகிள் வானூர்திகள் கருமையான உருமறைப்பு, பொறியின் ஓடுங்கிய பகுதியுடன் இணைக்கப்பட்ட மேலதிக எரிபொருள் கொள்கலன் என்பவற்றைக் கொண்டதால் ஏனைய ஈகிள் வகைகளினால் வேறுபடுத்தப்பட்டது.
எப்-15இ ஸ்ரைக் ஈகிள் | |
---|---|
அமெரிக்க வான்படையின் எப்-15இ | |
வகை | பல பாத்திர, தாக்குதல் வானூர்தி |
உற்பத்தியாளர் | மக்டொனல் டக்ளஸ் போயிங் பாதுகாப்பு |
முதல் பயணம் | 11 திசம்பர் 1986 |
அறிமுகம் | ஏப்ரல் 1988 |
தற்போதைய நிலை | செயற்பாட்டில், உற்பத்தியில் |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | ஐக்கிய அமெரிக்க வான்படை அரச சவுதி வான்படை இசுரேலிய வான்படை கொரியக் குடியரசு வான்படை மேலும், பார்க்க பயன்படுத்துபவர்கள் |
தயாரிப்பு எண்ணிக்கை | 420[N 1] |
அலகு செலவு | F-15E: US$31.1 மில்லியன் (1998)[2] Davies[3] F-15K: US$100 million (2006)[4] |
முன்னோடி | எப்-15 ஈகிள் |
மாறுபாடுகள் | எப்-15எஸ்இ சைலண்ட் ஈகிள் |
குறிப்புக்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Davies 2002, p. 90.
- ↑ F-15E Strike Eagle fact sheet, US Air Force, 22 October 2009. Retrieved: 1 September 2011.
- ↑ Davies 2002, Appendix 1.
- ↑ "F-15E Eagle." Aerospaceweb.org. Retrieved: 27 February 2012.