பாதுகாப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாதுகாப்பு (Defense) என்பது பொதுவாக ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாகும். நமது வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு என்பது பெரிதும் அவசியமாகக் கருதப்படுகிறது. நாம் நமது செயற்பாட்டிலோ அல்லது வேறு செயல்பாட்டிலோ பாதுகாப்பு செயல்முறைகளை பின்பற்றாவிடின் பின் விளைவுகளை தரக்கூடும். அவை உயிர்ச்சேதம், அங்க இழப்பு, இயற்கை அழிவு, பொருளாதாரச் சேதம், போன்ற பல அழிவுகளை உருவாக்கலாம். இது போன்ற அழிவுகள் பாதுகாப்பு முன் எச்சரிக்கை குறைபாடு காரணமாகவே பொதுவாகக் காணக்கூடியதாக உள்ளன. இது போன்ற பல இழப்புகளில் இருந்து முன் எச்சரிக்கையாக அல்லது கவனமாக இருப்பதற்குப் பாதுகாப்பு என்ற முன் எச்சரிக்கை செயற்பாட்டை நாம் பின்பற்ற வேண்டும்.
பாதுகாப்பு செயற்பாடு
தொகுபாதுகாப்பு செயற்பாடானது ஒவ்வொரு செயல்முறைக்கும் ஏற்றவாறு மாறுபடும். அதே வேளை பாதுகாப்பு செயல்முறையானது ஒவ்வொரு நாட்டுச் சட்டத்தின் அடிப்படையிலும், அதேவேளை வேறு பல பாதுகாப்பு செயல்முறைகளும் நமக்குப் பயனுள்ளனவாக இருக்கும். அத்தோடு இந்த பாதுகாப்பு செயல்முறையானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் நமக்கு உதவும் என்று நம்ப முடியாமலும் உள்ளன. ஆனாலும் பாதுகாப்புச் செயல்முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பாரிய அழிவுகளில் இருந்து நம்மை குறிப்பிட்ட அளவில் காப்பாற்றலாம் என்பது திடம். ஒரு சில பாதுகாப்பு நடைமுறைகள் பின்வருமாறு:
- தற்காப்பு
- தற்காப்பு உரிமைகள்
- உலகப் பாதுகாப்பு
- நாட்டுப் பாதுகாப்பு
- மக்கள் பாதுகாப்பு
- இயற்கை வளப் பாதுகாப்பு
- பொருளாதாரப் பாதுகாப்பு
- தொழில் நுட்பப் பாதுகாப்பு
- இரகசியப் பாதுகாப்பு
- மொழிப் பாதுகாப்பு
- சட்டவியல் பாதுகாப்பு
இது போன்ற மேலும் பல பாதுகாப்பு நடைமுறைகளையும் காணலாம்.
தந்திரோபாயம், தற்காப்பு, அரசியல் நடவடிக்கைகள் அல்லது குழுக்கள்
தொகு- படைத்துறை, படைகள் முதன்மையாக போரை நோக்கமாகக் கொண்டது
- ஆயுத உற்பத்தித் துறை, ஆயுதங்கள் மற்றும் இராணுவ தொழில்நுட்பத்தை தயாரித்து விற்கும் தொழில்
- தற்காப்பு, தன்னை தற்காத்துக் கொள்ள சக்தியைப் பயன்படுத்துதல்
- ஹகானா (எபிரேயம்: "பாதுகாப்பு"), பிரித்தானிய பாலஸ்தீனத்தில் ஒரு துணை ராணுவ அமைப்பு
விளையாட்டுகள்
தொகு- தடுப்பாட்ட வீரர், எதிரணி அணி கோல்களை அடிப்பதைத் தடுப்பதே முதன்மைப் பணி
- பாதுகாப்பான மட்டையாட்டம்- ஆட்டமிழக்காமல் மட்டையாட்டம் விளையாடும் முறை
பிற பயன்கள்
தொகு- சதுரங்கத் திறப்பு, கருப்புக் காய்களைக் கொண்டு சதுரங்க ஆட்டத்தை தொடங்குவது
- பாதுகாப்புப் பொறிமுறைகள், பதட்டத்தை குறைக்கும் மயக்க உளவியல் வழிமுறைகள்