எச்ஏஎல் தேசசு

(எச்ஏஎல் தேஜாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எச்ஏஎல் தேசசு (சமசுகிருதம்: तेजस् "சுடரொளி", Tejas) என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது இந்தியாவின் வானறிவியல் மேம்பாட்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு இந்துசுதான் வானறிவியல் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்ற 4.5 ஆம் தலைமுறை சண்டை வானூர்தியாகும்.[3][4]

தேசசு
Tejas
வகை பன்முகச் சண்டை வானூர்தி
உருவாக்கிய நாடு இந்தியா
உற்பத்தியாளர் இந்துசுதான் வானறிவியல் நிறுவனம்
வடிவமைப்பாளர் வானறிவியல் மேம்பாட்டு நிறுவனம்
முதல் பயணம் 4 சனவரி 2001
அறிமுகம் 7 சனவரி 2015[1]
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது[2]
முக்கிய பயன்பாட்டாளர் இந்திய வான்படை
தயாரிப்பு எண்ணிக்கை 51

தேசசு தனது முதல் பயணத்தை 2001 இல் மேற்கொண்டது, பிறகு 2015 இல் இந்திய வான்படையில் அதிகாரபூர்வமாக சேர்க்கப்பட்டது.[5][6] 2003 ஆம் ஆண்டில், இதற்கு அதிகாரப்பூர்வமாக "தேசசு" என்று பெயரிடப்பட்டது.[7] இது மீயொலிவேக போர் விமானங்களின் வரிசையில் மிகவும் இலகுவான வானூர்தியாகும்.[8]

வடிவமைப்பு

தொகு

தேசசு ஒரு ஒற்றை விசைப்பொறி கொண்ட ஒரு பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது மேம்பட்டபறக்கும் திறனுக்காக தளர்வான நிலையான நிலைத்தன்மையுடன் வால் இல்லாத முக்கோண இறக்கை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. தேசசு இடைமறிப்பு மற்றும் தாக்குதல் பணிகளைச் செய்ய வல்லது.[9] இது பல்வேறு ஆயுதங்களை சுமந்து செல்ல ஏதுவாக எட்டு இணைப்பு புள்ளிகளைக் கொண்டுள்ளது.[10] இதன் முன் பகுதியில் வான்வழி எரிபொருள் நிரப்புதல் கருவியைக் கொண்டுள்ளது.[11]

 
கடற்படைக்காக தயாரிக்கப்படும் தேசசுகளில் சில மேம்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன

அலுமினியம், லித்தியம் மற்றும் டைட்டானியம் உலோகக்கலவைகள் மற்றும் , கார்பன் இழையால் செய்யப்பட்ட பொருட்கள் தேசசுவின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகின்றன.[12][13][14] இதன் இறக்கையின் விளிம்புகள் கண்ணாடியிழைகளால் ஆனது.[15] கலவை பொருட்களின் விரிவான பயன்பாடு வானூர்தியை இலகுவாக்குவது மட்டுமல்லாமல் அதிக வலிமையையும் தருகிறது.[9][16] கடற்படைக்காக தயாரிக்கப்படும் வானூர்திகளில் சில மேம்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூக்கு சற்றே தாழ்வாக இறக்க ஆவண செய்யப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் வலுவூட்டப்பட்ட இறங்கமைப்பு மற்றும் வானூர்தி தாங்கிக் கப்பல்களில் தரையிறங்குவதற்கான கொக்கி அமைப்பை கொண்டுள்ளது.[17][18]

இந்த வானூர்தி முக்கோண இறக்கைகளைக் கொண்டுள்ளாது. தலா மூன்று தானியங்கி பட்டிகைகள் இறக்கைகளின் முன் விளிம்புகளில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இறக்கைகளின் பின் விளிம்புகளில் கட்டுப்பாடு இதழ்கள் மற்றும் இறக்கைத் துடுப்புகள் உள்ளன.பின்பகுதியில் ஒரு செங்குத்து துடுப்பு மற்றும் இரண்டு நிறுத்திகளைக் கொண்டுள்ளது.[19][20]

இந்த வானூர்திகாக காவேரி என்ற பெயரில் ஒரு தாரை பொறியை உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்க எரிவாயு விசையாழி ஆராய்ச்சி நிறுவனம் முட்பட்டது.[21] இருப்பினும் காவேரியின் உருவாக்கம் பின்னடைவைச் சந்தித்த காரணத்தினால் தேசசு வானூர்திகளில் ஜெனரல் எலக்ட்ரிக் பொறிகள் பொருத்தப்படுகின்றன.[22][23] தேசசு நவீன கதிரலைக் கும்பா மற்றும் பல்வேறு மின்னணு போர் உபகாரணங்களைக் கொண்டுள்ளது.[24] இதன் கட்டுப்பாடு கணினிகள் பாரத் மின்னணுவியல் நிறுவத்தால் தயாரிக்கப்படுகின்றன.[25]

விவரக்குறிப்புகள்

தொகு
 
தேசசு வரைபடம்

தரவு எடுக்கப்பட்டது: [26][27]

பொது இயல்புகள்

  • குழு: 1 அல்லது 2
  • நீளம்: 13.2 m (43 அடி 4 அங்)
  • இறக்கை விரிப்பு: 8.2 m (26 அடி 11 அங்)
  • உயரம்: 4.4 m (14 அடி 5 அங்)
  • இறக்கைப் பரப்பு: 38.4 m2 (413 sq ft)
  • வெற்றுப் பாரம்: 6,560 kg (14,462 lb)
  • மொத்தப் பாரம்: 9,800 kg (21,605 lb)
  • தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 13,500 kg (29,762 lb)
  • எரிபொருள் கொள்ளவு: 2,458 kg (5,419 lb) 3,060 L (670 imp gal; 810 US gal)
  • சக்தித்தொகுதி: 1 × ஜெனரல் எலக்ட்ரிக் எப்404 தாரை பொறி, 48.9 kN (11,000 lbf) உந்துதல் [28] உளர், 85 kN (19,000 lbf) பின்னெரியுடன்[29][30]

செயற்பாடுகள்

  • அதிகபட்ச வேகம்: 2,220 km/h (1,379 mph; 1,199 kn)
  • அதிகபட்ச வேகம்: மாக் 1.8[31][32]
  • போர் வரம்பு: 739 km; 399 nmi (459 mi) [33][34]
  • பயண வரம்பு: 3,000 km (1,864 mi; 1,620 nmi) [35]
  • உச்சவரம்பு 15,240 m (50,000 அடி)
  • ஈர்ப்பு விசை வரம்பு: +9/-3.5[36][37]
  • சிறகு சுமையளவு: 255.2 kg/m2 (52.3 lb/sq ft)
  • தள்ளுதல்/பாரம்: 1.07[38]

மேற்கோள்கள்

தொகு
  1. PTI (17 January 2015). "After 32 years, India finally gets LCA Tejas aircraft". Economic Times இம் மூலத்தில் இருந்து 29 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170329234640/http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/after-32-years-india-finally-gets-lca-tejas-aircraft/articleshow/45921356.cms?imageid=45757544#slide1. 
  2. Jain, Smriti (2016-07-01). "Tejas: IAF inducts HAL's 'Made in India' Light Combat Aircraft – 10 special facts about the LCA". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 16 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.
  3. "HAL hands over first LCA Tejas twin seater aircraft to IAF". The Hindu. 2023-10-04. https://www.thehindu.com/news/national/hal-hands-over-first-lca-tejas-twin-seater-aircraft-to-iaf/article67379361.ece. 
  4. "Indigenous Tejas joins IAF's fighter squadron". The Hindu. 2016-07-01 இம் மூலத்தில் இருந்து 8 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201108101311/https://www.thehindu.com/news/national/Indigenous-Tejas-joins-IAF%E2%80%99s-fighter-squadron/article14465804.ece. 
  5. Peri, Dinakar (2016-05-28). "Tejas to replace MiG as key fighter". The Hindu இம் மூலத்தில் இருந்து 1 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201001023038/https://www.thehindu.com/news/national/Tejas-to-replace-MiG-as-key-fighter/article14344179.ece. 
  6. "Tejas not being inducted as replacement of MIG-21 fighter jet: Defence Ministry". Times Now News (in ஆங்கிலம்). 20 December 2021. Archived from the original on 20 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
  7. Tewary, Amarnath (2016-07-06). "Pokhran-II delayed Tejas project, says former scientist". The Hindu இம் மூலத்தில் இருந்து 13 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211013231615/https://www.thehindu.com/news/national/Pokhran-II-delayed-Tejas-project-says-former-scientist/article14474390.ece?homepage=true. 
  8. Siddiqui, Huma (2021-10-06). "LCA could be a good option for Argentine Air Force, says a source". The Financial Express. Archived from the original on 19 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
  9. 9.0 9.1 "This is what makes India's Tejas aircraft unique". The Indian Express. 2016-07-01. Archived from the original on 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
  10. Jackson, Paul (2007). Jane's All the World's Aircraft 2007-2008 (in ஆங்கிலம்). Jane's Information Group. p. 246. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-710-62792-6.
  11. Khera, Kishore Kumar (28 October 2020). Combat Aviation: Flight Path 1968-2018. India: K W Publishers. pp. 157–158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-389-13744-6.
  12. Mathews, Neelam (17 July 2006). "Light Steps: India's LCA may be moving at a sedate pace, but it's progressing nonetheless". Aviation Week & Space Technology. Vol. 165, no. 3. New York. p. 126. பன்னாட்டுத் தர தொடர் எண் 0005-2175.
  13. Prasad, N. Eswara; Wanhill, R. J. H (11 November 2016). Aerospace Materials and Material Technologies. Springer Singapore. pp. 335–336. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-811-02134-3.
  14. "Radiance of the Tejas: The Brawn and Brains of the Light Combat Aircraft (Special Edition)". Vayu Aerospace and Defence Review 1: 2–3. February 2005. இணையக் கணினி நூலக மையம்:62787146. 
  15. Jackson, Paul; Peacock, Lindsay; Bushell, Susan; Willis, David; Winchester, Jim, eds. (2016–2017). "India". IHS Jane's All the World's Aircraft: Development & Production. Couldson: Jane's Information Group. pp. 302–303. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-710-63177-0.
  16. Prakash, B.G (16 February 2001). "Dreams lighten in LCA". Strategic Affairs. Archived from the original on 4 March 2008. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.
  17. Gady, Franz-Stefan (3 August 2018). "Naval Version of India's Tejas Light Combat Aircraft Successfully Tests Arrestor Hook Capability". thediplomat.com. Archived from the original on 9 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
  18. "Tejas trainer jet makes smooth flight". Deccan Herald. 2009-11-27. Archived from the original on 24 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
  19. "Tejas test-fires missile successfully" (in en-IN). The Hindu. 2010-12-01 இம் மூலத்தில் இருந்து 19 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211019070629/https://www.thehindu.com/news/national/Tejas-test-fires-missile-successfully/article15575578.ece. 
  20. Krishnan, P.S; Narayanan, K.G (2020). Digital Flight Control Systems for Practising Engineers. Defence Research and Development Organisation, Ministry of Defence. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86514-65-8.
  21. Bedi, Rahul (15 December 2020). "India Is Still Throwing Good Money at Hopeless Military Programmes". The Wire. Archived from the original on 29 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  22. "HAL signs contract worth Rs 5,375 crore with GE Aviation, for supply of engines for Tejas aircraft". The Financial Express. 2021-08-17. Archived from the original on 30 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  23. Waldron, Greg (18 August 2021). "HAL orders 99 F404 engines to support Tejas production". Flight Globa. Archived from the original on 19 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
  24. "BEL delivers critical systems for over 50 LCAs". The New Indian Express. 29 January 2013. Archived from the original on 7 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
  25. "DFCC : Amendment Cum Renewal of Type Approval No. 1569" (PDF). Defence Research and Development Organisation. 8 September 2016. Archived (PDF) from the original on 8 July 2022. பார்க்கப்பட்ட நாள் 7 July 2022.
  26. "Leading particulars and performance." tejas.gov.in. Retrieved 19 December 2017. பரணிடப்பட்டது 21 திசம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம்
  27. "DRDO TechFocus." பரணிடப்பட்டது 22 மார்ச்சு 2011 at the வந்தவழி இயந்திரம் DRDO, February 2011. Retrieved 10 December 2012.
  28. Asthana, Mansij (2021-03-15). "Why Did India Reject Eurojet Engine In Favor Of GE F404 To Propel Its Tejas Fighter Jets?". Latest Asian, Middle-East, EurAsian, Indian News. பார்க்கப்பட்ட நாள் 2023-12-17.
  29. "F404-GE-IN20 Engines Ordered for India Light Combat Aircraft | GE Aerospace". www.geaerospace.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-16.
  30. "F404 turbofan engines" (PDF). GE Aviation. Archived (PDF) from the original on 12 November 2021. பார்க்கப்பட்ட நாள் 17 October 2021.
  31. Jackson FRAes, Paul (27 April 2017). Jane's All the World's Aircraft: Development & Production 2017-2018 (2017-2018) (in English) (105th ed.). Jane's Information Group. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0710632500.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  32. "How India's LCA Tejas fares against Chinese J-10C fighter jet". Financialexpress. 2023-06-07. பார்க்கப்பட்ட நாள் 2023-12-14.
  33. Jackson FRAes, Paul (27 April 2017). Jane's All the World's Aircraft: Development & Production 2017-2018 (2017-2018) (in English) (105th ed.). Jane's Information Group. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0710632500.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  34. Kadidal, Akhil (10 May 2023). "Tejas Mk 2 languishes amid lack of funds". Janes.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-17.
  35. "Tejas Light Combat Supersonic Fighter". Airforce Technology. பார்க்கப்பட்ட நாள் 2023-12-16.
  36. Jackson FRAes, Paul (27 April 2017). Jane's All the World's Aircraft: Development & Production 2017-2018 (2017-2018) (in English) (105th ed.). Jane's Information Group. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0710632500.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  37. "LCA Tejas Specifications". Aeronautical Development Agency. Archived from the original on 28 August 2021. பார்க்கப்பட்ட நாள் 17 December 2023.
  38. "Light Combat Aircraft: US-Backed FA-50 Takes A Clear Lead, JF-17 Banks On Chinese Push, But Tejas Is The Real Darkhorse". The EurAsian Times. 2023-09-03. பார்க்கப்பட்ட நாள் 2023-12-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்ஏஎல்_தேசசு&oldid=4014187" இலிருந்து மீள்விக்கப்பட்டது