கடற்படை
படைத்துறையில் கடலில் முதன்மையாக இயங்கும் படை கடற்படை (ஒலிப்பு (உதவி·தகவல்)) ஆகும்.
போர்க் கப்பல்கள், மறைவேகப்படகுகள், நீர்மூழ்கிகள், கடல்குண்டுகள், தவளைமனிதர் தாக்குதல்கள் என பலதரப்பட்ட தாக்குல் திறன்களை கடற்படை கொண்டிருக்கலாம். தமது கடற்பரப்பை பாதுகாக்க, கடல் தாண்டி தாக்க கடற்படை பயன்படுகிறது.

சங்ககாலத் தமிழகத்தில் கடற்கடை இருந்தது. நலங்கிள்ளி இதனை வைத்திருந்தான். கடலில் படை நடத்தி அள்ளிக்கொண்டுவந்த செல்வம் நாட்டில் மண்டிக் கிடந்தது. இந்தப் பெருமுயற்சியால் [நோன்தாள்] சோழநாட்டுப் பொருநன் (போராளி) என்னும் சிறப்பினைப் பெற்றிருந்தான். இவனிடம் குதிரைப்படையும் [இவுளி] இருந்தது. இவனைப் பாடும் புலவர் கோவூர் கிழார் நான் பொருநர் கூட்டத்துக் கலைஞன். பிறரைப் பாடிப் பரிசில் பெறுவதை விரும்பாதவன். அவனை மட்டுமே பாடுவேன். “அவன் தாள் வாழ்க”. என்று பாடுகிறார். [1] சங்ககாலக் கடல் வாணிகம் பற்றிக் கூறப்படும் செய்திகள் இங்கு எண்ணிப்பார்க்கத் தக்கவை.
மேலும் பார்க்க தொகு
- தரைப்படை
- கடற்படை
- வான்படை
- ஈருடகப்படை
- சிறப்புப்படை
மேற்கோள் தொகு
- ↑
கடற்படை அடல் கொண்டி,
மண்டுற்ற மலிர் நோன் தாள்,
தண் சோழ நாட்டுப் பொருநன்,
அலங்கு உளை அணி இவுளி
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்; 5
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்;
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' - புறநானூறு 382