எச்ஏஎல் தேசசு
எச்ஏஎல் தேசசு (சமசுகிருதம்: तेजस् "சுடரொளி", Tejas) என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது இந்தியாவின் வானறிவியல் மேம்பாட்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு இந்துசுதான் வானறிவியல் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்ற 4.5 ஆம் தலைமுறை சண்டை வானூர்தியாகும்.[3][4]
தேசசு Tejas | |
---|---|
வகை | பன்முகச் சண்டை வானூர்தி |
உருவாக்கிய நாடு | இந்தியா |
உற்பத்தியாளர் | இந்துசுதான் வானறிவியல் நிறுவனம் |
வடிவமைப்பாளர் | வானறிவியல் மேம்பாட்டு நிறுவனம் |
முதல் பயணம் | 4 சனவரி 2001 |
அறிமுகம் | 7 சனவரி 2015[1] |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் உள்ளது[2] |
முக்கிய பயன்பாட்டாளர் | இந்திய வான்படை |
தயாரிப்பு எண்ணிக்கை | 51 |
தேசசு தனது முதல் பயணத்தை 2001 இல் மேற்கொண்டது, பிறகு 2015 இல் இந்திய வான்படையில் அதிகாரபூர்வமாக சேர்க்கப்பட்டது.[5][6] 2003 ஆம் ஆண்டில், இதற்கு அதிகாரப்பூர்வமாக "தேசசு" என்று பெயரிடப்பட்டது.[7] இது மீயொலிவேக போர் விமானங்களின் வரிசையில் மிகவும் இலகுவான வானூர்தியாகும்.[8]
வடிவமைப்பு
தொகுதேசசு ஒரு ஒற்றை விசைப்பொறி கொண்ட ஒரு பன்முகச் சண்டை வானூர்தியாகும். இது மேம்பட்டபறக்கும் திறனுக்காக தளர்வான நிலையான நிலைத்தன்மையுடன் வால் இல்லாத முக்கோண இறக்கை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. தேசசு இடைமறிப்பு மற்றும் தாக்குதல் பணிகளைச் செய்ய வல்லது.[9] இது பல்வேறு ஆயுதங்களை சுமந்து செல்ல ஏதுவாக எட்டு இணைப்பு புள்ளிகளைக் கொண்டுள்ளது.[10] இதன் முன் பகுதியில் வான்வழி எரிபொருள் நிரப்புதல் கருவியைக் கொண்டுள்ளது.[11]
அலுமினியம், லித்தியம் மற்றும் டைட்டானியம் உலோகக்கலவைகள் மற்றும் , கார்பன் இழையால் செய்யப்பட்ட பொருட்கள் தேசசுவின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகின்றன.[12][13][14] இதன் இறக்கையின் விளிம்புகள் கண்ணாடியிழைகளால் ஆனது.[15] கலவை பொருட்களின் விரிவான பயன்பாடு வானூர்தியை இலகுவாக்குவது மட்டுமல்லாமல் அதிக வலிமையையும் தருகிறது.[9][16] கடற்படைக்காக தயாரிக்கப்படும் வானூர்திகளில் சில மேம்பட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூக்கு சற்றே தாழ்வாக இறக்க ஆவண செய்யப்பட்டுள்ளது. மேலும் இவற்றில் வலுவூட்டப்பட்ட இறங்கமைப்பு மற்றும் வானூர்தி தாங்கிக் கப்பல்களில் தரையிறங்குவதற்கான கொக்கி அமைப்பை கொண்டுள்ளது.[17][18]
இந்த வானூர்தி முக்கோண இறக்கைகளைக் கொண்டுள்ளாது. தலா மூன்று தானியங்கி பட்டிகைகள் இறக்கைகளின் முன் விளிம்புகளில் பொருத்தப்பட்டிருக்கின்றது. இறக்கைகளின் பின் விளிம்புகளில் கட்டுப்பாடு இதழ்கள் மற்றும் இறக்கைத் துடுப்புகள் உள்ளன.பின்பகுதியில் ஒரு செங்குத்து துடுப்பு மற்றும் இரண்டு நிறுத்திகளைக் கொண்டுள்ளது.[19][20]
இந்த வானூர்திகாக காவேரி என்ற பெயரில் ஒரு தாரை பொறியை உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்க எரிவாயு விசையாழி ஆராய்ச்சி நிறுவனம் முட்பட்டது.[21] இருப்பினும் காவேரியின் உருவாக்கம் பின்னடைவைச் சந்தித்த காரணத்தினால் தேசசு வானூர்திகளில் ஜெனரல் எலக்ட்ரிக் பொறிகள் பொருத்தப்படுகின்றன.[22][23] தேசசு நவீன கதிரலைக் கும்பா மற்றும் பல்வேறு மின்னணு போர் உபகாரணங்களைக் கொண்டுள்ளது.[24] இதன் கட்டுப்பாடு கணினிகள் பாரத் மின்னணுவியல் நிறுவத்தால் தயாரிக்கப்படுகின்றன.[25]
விவரக்குறிப்புகள்
தொகுபொது இயல்புகள்
- குழு: 1 அல்லது 2
- நீளம்: 13.2 m (43 அடி 4 அங்)
- இறக்கை விரிப்பு: 8.2 m (26 அடி 11 அங்)
- உயரம்: 4.4 m (14 அடி 5 அங்)
- இறக்கைப் பரப்பு: 38.4 m2 (413 sq ft)
- வெற்றுப் பாரம்: 6,560 kg (14,462 lb)
- மொத்தப் பாரம்: 9,800 kg (21,605 lb)
- தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 13,500 kg (29,762 lb)
- எரிபொருள் கொள்ளவு: 2,458 kg (5,419 lb) 3,060 L (670 imp gal; 810 US gal)
- சக்தித்தொகுதி: 1 × ஜெனரல் எலக்ட்ரிக் எப்404 தாரை பொறி, 48.9 kN (11,000 lbf) உந்துதல் [28] உளர், 85 kN (19,000 lbf) பின்னெரியுடன்[29][30]
செயற்பாடுகள்
- அதிகபட்ச வேகம்: 2,220 km/h (1,379 mph; 1,199 kn)
- அதிகபட்ச வேகம்: மாக் 1.8[31][32]
- போர் வரம்பு: 739 km; 399 nmi (459 mi) [33][34]
- பயண வரம்பு: 3,000 km (1,864 mi; 1,620 nmi) [35]
- உச்சவரம்பு 15,240 m (50,000 அடி)
- ஈர்ப்பு விசை வரம்பு: +9/-3.5[36][37]
- சிறகு சுமையளவு: 255.2 kg/m2 (52.3 lb/sq ft)
- தள்ளுதல்/பாரம்: 1.07[38]
மேற்கோள்கள்
தொகு- ↑ PTI (17 January 2015). "After 32 years, India finally gets LCA Tejas aircraft". Economic Times இம் மூலத்தில் இருந்து 29 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170329234640/http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/after-32-years-india-finally-gets-lca-tejas-aircraft/articleshow/45921356.cms?imageid=45757544#slide1.
- ↑ Jain, Smriti (2016-07-01). "Tejas: IAF inducts HAL's 'Made in India' Light Combat Aircraft – 10 special facts about the LCA". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 16 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.
- ↑ "HAL hands over first LCA Tejas twin seater aircraft to IAF". The Hindu. 2023-10-04. https://www.thehindu.com/news/national/hal-hands-over-first-lca-tejas-twin-seater-aircraft-to-iaf/article67379361.ece.
- ↑ "Indigenous Tejas joins IAF's fighter squadron". The Hindu. 2016-07-01 இம் மூலத்தில் இருந்து 8 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201108101311/https://www.thehindu.com/news/national/Indigenous-Tejas-joins-IAF%E2%80%99s-fighter-squadron/article14465804.ece.
- ↑ Peri, Dinakar (2016-05-28). "Tejas to replace MiG as key fighter". The Hindu இம் மூலத்தில் இருந்து 1 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201001023038/https://www.thehindu.com/news/national/Tejas-to-replace-MiG-as-key-fighter/article14344179.ece.
- ↑ "Tejas not being inducted as replacement of MIG-21 fighter jet: Defence Ministry". Times Now News (in ஆங்கிலம்). 20 December 2021. Archived from the original on 20 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-12-20.
- ↑ Tewary, Amarnath (2016-07-06). "Pokhran-II delayed Tejas project, says former scientist". The Hindu இம் மூலத்தில் இருந்து 13 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211013231615/https://www.thehindu.com/news/national/Pokhran-II-delayed-Tejas-project-says-former-scientist/article14474390.ece?homepage=true.
- ↑ Siddiqui, Huma (2021-10-06). "LCA could be a good option for Argentine Air Force, says a source". The Financial Express. Archived from the original on 19 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
- ↑ 9.0 9.1 "This is what makes India's Tejas aircraft unique". The Indian Express. 2016-07-01. Archived from the original on 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
- ↑ Jackson, Paul (2007). Jane's All the World's Aircraft 2007-2008 (in ஆங்கிலம்). Jane's Information Group. p. 246. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-710-62792-6.
- ↑ Khera, Kishore Kumar (28 October 2020). Combat Aviation: Flight Path 1968-2018. India: K W Publishers. pp. 157–158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-389-13744-6.
- ↑ Mathews, Neelam (17 July 2006). "Light Steps: India's LCA may be moving at a sedate pace, but it's progressing nonetheless". Aviation Week & Space Technology. Vol. 165, no. 3. New York. p. 126. பன்னாட்டுத் தர தொடர் எண் 0005-2175.
- ↑ Prasad, N. Eswara; Wanhill, R. J. H (11 November 2016). Aerospace Materials and Material Technologies. Springer Singapore. pp. 335–336. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-811-02134-3.
- ↑ "Radiance of the Tejas: The Brawn and Brains of the Light Combat Aircraft (Special Edition)". Vayu Aerospace and Defence Review 1: 2–3. February 2005. இணையக் கணினி நூலக மையம்:62787146.
- ↑ Jackson, Paul; Peacock, Lindsay; Bushell, Susan; Willis, David; Winchester, Jim, eds. (2016–2017). "India". IHS Jane's All the World's Aircraft: Development & Production. Couldson: Jane's Information Group. pp. 302–303. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-710-63177-0.
- ↑ Prakash, B.G (16 February 2001). "Dreams lighten in LCA". Strategic Affairs. Archived from the original on 4 March 2008. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.
- ↑ Gady, Franz-Stefan (3 August 2018). "Naval Version of India's Tejas Light Combat Aircraft Successfully Tests Arrestor Hook Capability". thediplomat.com. Archived from the original on 9 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
- ↑ "Tejas trainer jet makes smooth flight". Deccan Herald. 2009-11-27. Archived from the original on 24 October 2012. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
- ↑ "Tejas test-fires missile successfully" (in en-IN). The Hindu. 2010-12-01 இம் மூலத்தில் இருந்து 19 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211019070629/https://www.thehindu.com/news/national/Tejas-test-fires-missile-successfully/article15575578.ece.
- ↑ Krishnan, P.S; Narayanan, K.G (2020). Digital Flight Control Systems for Practising Engineers. Defence Research and Development Organisation, Ministry of Defence. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86514-65-8.
- ↑ Bedi, Rahul (15 December 2020). "India Is Still Throwing Good Money at Hopeless Military Programmes". The Wire. Archived from the original on 29 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
- ↑ "HAL signs contract worth Rs 5,375 crore with GE Aviation, for supply of engines for Tejas aircraft". The Financial Express. 2021-08-17. Archived from the original on 30 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
- ↑ Waldron, Greg (18 August 2021). "HAL orders 99 F404 engines to support Tejas production". Flight Globa. Archived from the original on 19 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
- ↑ "BEL delivers critical systems for over 50 LCAs". The New Indian Express. 29 January 2013. Archived from the original on 7 November 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.
- ↑ "DFCC : Amendment Cum Renewal of Type Approval No. 1569" (PDF). Defence Research and Development Organisation. 8 September 2016. Archived (PDF) from the original on 8 July 2022. பார்க்கப்பட்ட நாள் 7 July 2022.
- ↑ "Leading particulars and performance." tejas.gov.in. Retrieved 19 December 2017. பரணிடப்பட்டது 21 திசம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "DRDO TechFocus." பரணிடப்பட்டது 22 மார்ச்சு 2011 at the வந்தவழி இயந்திரம் DRDO, February 2011. Retrieved 10 December 2012.
- ↑ Asthana, Mansij (2021-03-15). "Why Did India Reject Eurojet Engine In Favor Of GE F404 To Propel Its Tejas Fighter Jets?". Latest Asian, Middle-East, EurAsian, Indian News. பார்க்கப்பட்ட நாள் 2023-12-17.
- ↑ "F404-GE-IN20 Engines Ordered for India Light Combat Aircraft | GE Aerospace". www.geaerospace.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-16.
- ↑ "F404 turbofan engines" (PDF). GE Aviation. Archived (PDF) from the original on 12 November 2021. பார்க்கப்பட்ட நாள் 17 October 2021.
- ↑ Jackson FRAes, Paul (27 April 2017). Jane's All the World's Aircraft: Development & Production 2017-2018 (2017-2018) (in English) (105th ed.). Jane's Information Group. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0710632500.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "How India's LCA Tejas fares against Chinese J-10C fighter jet". Financialexpress. 2023-06-07. பார்க்கப்பட்ட நாள் 2023-12-14.
- ↑ Jackson FRAes, Paul (27 April 2017). Jane's All the World's Aircraft: Development & Production 2017-2018 (2017-2018) (in English) (105th ed.). Jane's Information Group. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0710632500.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Kadidal, Akhil (10 May 2023). "Tejas Mk 2 languishes amid lack of funds". Janes.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-17.
- ↑ "Tejas Light Combat Supersonic Fighter". Airforce Technology. பார்க்கப்பட்ட நாள் 2023-12-16.
- ↑ Jackson FRAes, Paul (27 April 2017). Jane's All the World's Aircraft: Development & Production 2017-2018 (2017-2018) (in English) (105th ed.). Jane's Information Group. p. 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0710632500.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "LCA Tejas Specifications". Aeronautical Development Agency. Archived from the original on 28 August 2021. பார்க்கப்பட்ட நாள் 17 December 2023.
- ↑ "Light Combat Aircraft: US-Backed FA-50 Takes A Clear Lead, JF-17 Banks On Chinese Push, But Tejas Is The Real Darkhorse". The EurAsian Times. 2023-09-03. பார்க்கப்பட்ட நாள் 2023-12-17.