சூலூர் விமான படை தளம்
கோயம்புத்தூரில் உள்ள விமானப்படை தளம்
சூலூர் விமான படை தளம் ஆனது இந்திய வான்படையின் விமானத்தளமாகும். இது காங்கேயம்பாளையம், கோயம்புத்தூர், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது 1940 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்தியாவின் வேந்திய கடற்படையால் அமைக்கப்பட்டது. இது ராயல் கடற்படையின் விமானப்படை பிரிவின் தளமாகச் செயல்பட்டது. தென் ஆசிய விமானங்களை சரிசெய்ய இந்தத் தளம் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 26 ஆகஸ்ட் 1942 அன்று 1942 ஆகஸ்ட் புரட்சியின் காரணமாக இத்தளம் எரிக்கப்பட்டது. 1943ல் இந்திய ராயல் வான்படை இங்கே வந்தது, பிறகு 1949ல் கொச்சிக்கு மாற்றப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பின் இது இந்திய கப்பற்படையின் வசம் இருந்தது. பிறகு இது இந்திய வான்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
சூலூர் விமான படை தளம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | இராணுவம் | ||||||||||
உரிமையாளர் | இந்திய அரசு | ||||||||||
இயக்குனர் | இந்திய வான்படை | ||||||||||
அமைவிடம் | கோயம்புத்தூர், தமிழ் நாடு, இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 1,250 ft / 381 m | ||||||||||
ஆள்கூறுகள் | 11°00′49″N 077°09′35″E / 11.01361°N 77.15972°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||