மிக்-27 அல்லது மிகோயன் குருவிச் மிக்-27 தரைத்தாக்குதல் விமானமாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது பகதூர் என்றப் பெயருடன் சில வேறுபாடுகளுடன் இந்தியாவின் இந்துஸ்தான் விமான நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இலங்கை வான்படை 2000 ஆம் ஆண்டு முதல் ஈழப் போரில் இதைப் பயன்படுத்தி வந்தது.

மிக்-27
இந்திய வான்படையின் மிக்-27
வகை சண்டை விமானம்
உற்பத்தியாளர் மிகோயன்-குருவிச் OKB
முதல் பயணம் 1972
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர்கள் சோவியத் வான்படை
இலங்கை வான்படை, இந்திய வான்படை
முன்னோடி மிக்-23

பயன்பாட்டாளர்கள்

தொகு
 
MiG-27 பயன்படுத்தும் நாடுகள் (முன்நாள் பயனர்கள் கட்ஞ்சிவப்பு)
 
இந்திய மிக்-27 & USAF F-15
  ஆப்கானித்தான்
  • அப்கானிஸ்தான் வான் படை 1979 முதல் 1993 30 மிக்-27 விமானங்களைக் கொண்டிருந்தது
  பல்கேரியா
  • பல்கேரிய வான்படை தனது மிக்-27 ஐ சேவையில் இருந்து நிறுத்தியுள்ளன.
  கியூபா
  • கியூப வான்படை
  ஈரான்
  • ஈரான் வான்படை
  இந்தியா
  கசக்கஸ்தான்
  • கசகிசுதான் வான்படை
  உருசியா
  • இரசிய வான்படை
  சோவியத் ஒன்றியம்
  • சோவியத் வான்படை பின்னர் பிரிவு நாடுகளுக்கு வழங்கியது.
  இலங்கை
  சிரியா
  • சிரிய வான்படை

இலங்கையில் மிக்-27

தொகு

இலங்கை விமானப்படை மிக்-27 போர் விமானங்களை தரைத்தாக்குதல், மற்றும் வான் உதவி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருகிறது. 2000 ஆம் ஆண்டில் இவை இலங்கையில் சேவைக்கு விடப்பட்டன. ஈழப்போரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவை பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் மிக்-27 போர் விமானம் ஒன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வீழ்ந்து நொறுங்கியதில் உக்ரேனிய விமானி ஒருவர் கொல்லப்பட்டார். 2001 சூலையில், விடுதலைப் புலிகளினால் மிக்-27 விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. 2004 சூன் மாதத்தில் வேறொரு மிக்-27 விமானம் கட்டுநாயக்காவிற்கு அருகில் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. 2012, பெப்ரவரி 13 இல் மிக்-27 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வழமையான பயிற்சிக்குப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் 17 மைல் தொலைவில் புத்தளம் நாத்தாண்டியா தும்மலசூரிய பகுதியில் வீழ்ந்து நொறுங்கியது. விமானி உயிர் தப்பினார்[1].

மேற்கோள்கள்

தொகு
  1. MiG 27 jet crashes, டெய்லிமிரர், பெப்ரவரி 13, 2012
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிக்-27&oldid=2037639" இலிருந்து மீள்விக்கப்பட்டது