தாக்குதல் வானூர்தி
தாக்குதல் வானூர்தி அல்லது தாக்குதல் குண்டுவீச்சு வானூர்தி என்பது ஒரு தந்திரோபாய படைத்துறை வானூர்தியாகும். இது குண்டுவீச்சு வானூர்திகளைவிட அதிக துல்லியத்துடன் வான்வழித்தாக்குதல்களை மேற்கொள்வதில் முதன்மையான பங்கைக் கொண்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடத்தும்போதே வலுவான குறை நிலை வான் பாதுகாப்புகளை எதிர்கொள்ளவும் தயாராகவுள்ளது.[1] இவ்வகை வானூர்திகள் பெரும்பாலும் தந்திரோபாய குண்டுவீச்சுப் பணியை மேற்கொண்டபடி, நெருங்கிய வான் ஆதரவு, கடற்படை வானிலிருந்து தரைக்கான பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. கடற்படை அல்லாத பங்களிப்புகளுக்கு வடிவமைக்கப்பட்டவை பெரும்பாலும் தரைத் தாக்குதல் வானூர்திகள் என்று அழைக்கப்படுகின்றன.[2]