ஏர் அஸ்டானா
ஏர் அஸ்டானா என்பது கஸக்கஸ்தான் குடியரசின் முதன்மை தேசிய விமானச் சேவையாகும். இது கஸக்கஸ்தானில் உள்ள அல்மாட்டியினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.[1] இது தனது முதன்மை தலைமையகமாக அல்மாட்டி சர்வதேச விமான நிலையத்தினையும், இரண்டாவது தலைமையகமாக அஸ்டானா சர்வதேச விமான நிலையம் மற்றும் அடிரௌ விமான நிலையம் ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
இந்த தலைமையகங்களில் இருந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சேவைகளை 65 வழித்தடங்களில் புரிகிறது. 2001 ஆம் ஆண்டில் இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக உருவானது. அதன் பின்னர் மே 15, 2002 ஆம் ஆண்டில், இது தனது விமானச் சேவைகளைத் தொடங்கியது.
இலக்குகள்
தொகுமத்திய ஆசியா மற்றும் ரஷ்யாவின் நகரங்கள், கஸக்கஸ்தானின் முக்கிய நகரங்கள் என 65 இலக்குகளைக் கொண்டு செயல்படும் விமானச் சேவை நிறுவனம் ஏர் அஸ்டானா ஆகும். 2009 ஆம் ஆண்டு முதல் பாகு, டாஸ்கென்ட், உரும்கி, ட்பிலிசி, டுஷன்பே, பிஷ்கேக், நோவோஸ்பிர்ஸ்க், சமரா, யெகடெரிபர்க், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இடங்களுக்கான விமானச் சேவையினைத் தொடங்கியது. அத்துடன் 2012 ஆம் ஆண்டின் மத்திய கால இடைவெளியில் இருந்து கஸன் மற்றும் ஓம்ஸ்க் ஆகிய பகுதிகள் இதன் விமானச் சேவையில் இணைக்கப்பட்டன. அல்மாட்டி – கீயெவ் மற்றும் அஸ்டானா – கீயெவ் ஆகிய வழித்தடங்களுக்கான சேவைகள் 2013 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் தொடங்கப்பட்டது.
ஏர் அஸ்டானா தினசரி விமானச் சேவைகளை அஸ்டானாவில் இருந்து ஃப்ராங்க்ப்ரூட்டிற்கும், வாரத்திற்கு மூன்று முறை செயல்படுத்தும் விமானச் சேவைகளை அஸ்டானாவில் இருந்து ஹீத்ரூவிற்கும் செயல்படுத்துகிறது. ஐரோப்பாவின் விமானச் சேவைகள் ஏர் அஸ்டானாவுடன் இணைந்து அதிகப்படியான உள்நாட்டு சேவைகளையும், தெற்கு ரஷியா, மத்திய ஆசியா மற்றும் சீனாவின் உள்ளூர் பகுதிகளில் நீட்டிக்கப்பட்ட விமானச் சேவைகளையும் புரிகிறது.
கோட்ஷேர் ஒப்பந்தங்கள்
தொகுஏர் அஸ்டானா தனது கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பின்வரும் நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளது.
- ஏசியானா ஏர்லைன்ஸ்
- ஆஸ்ட்ரியன் ஏர்லைன்ஸ்
- ஏர் இந்தியா
- இடிஹத் ஏர்வேஸ் [2]
- துருக்கி ஏர்லைன்ஸ் [3]
தற்போதைய விமானக் குழு
தொகுஏப்ரல் 2014 இன் படி, ஏர் அஸ்டானா விமானச் சேவை நிறுவனம் பின்வரும் விமானங்களைத் தனது விமானக் குழுவில் கொண்டுள்ளது.[4]
விமானம் | சேவையில்
இருப்பவை |
ஆர்டர்கள் | இருக்கைகள் | இயக்கங்கள் | ||
---|---|---|---|---|---|---|
வணிக
வகுப்பு |
பொருளாதார
வகுப்பு |
மொத்தம் | ||||
ஏர்பஸ் A319-100 | 1 | — | 12 | 114 | 126 | கஸக்கஸ்தான் |
ஏர்பஸ் A320-200 | 8 | — | 16 | 132 | 148 | கஸக்கஸ்தான், ரஷியா, ஆசியா |
ஏர்பஸ் A320 நியோ | — | 2 | அறிவிக்கப்பட உள்ளது | |||
ஏர்பஸ் A321-200 | 4 | — | 28 | 151 | 179 | கஸக்கஸ்தான், ரஷியா, ஆசியா |
ஏர்பஸ் A321 நியோ | — | 5 | அறிவிக்கப்பட உள்ளது | |||
போயிங்க் 757-200 | 5 | — | 16 | 150 | 166 | கஸக்கஸ்தான், ஐரோப்பா, ஆசியா |
போயிங்க் 767-300ER | 3 | — | 30 | 193 | 223 | கஸக்கஸ்தான் (அல்மாட்டி – அஸ்டானா விமானங்கள்),
ஐரோப்பா, ஆசியா |
போயிங்க் 787-8 | — | 3 | அறிவிக்கப்பட உள்ளது | |||
எம்ப்ரயர் 190 | 9 | — | 9 | 88 | 97 | கஸக்கஸ்தான், ரஷியா, ஆசியா |
மொத்தம் | 30 | 10 |
உயர்தர வழித்தடங்கள்
தொகுஏர் அஸ்டானா ட்செலினோக்ராட் – அல்மாட்டி, அல்மாட்டி – ட்செலினோக்ராட், இஸ்தான்புல் – அல்மாட்டி மற்றும் மாஸ்கோ – அல்மாட்டி ஆகிய விமானச் சேவை வழித்தடங்களை உயர்தர வழித்தடங்களாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு வாரத்திற்கு முறையே 35, 35, 16 மற்றும் 14 விமானங்களைச் செயல்படுத்துகிறது. இவை தவிர சில குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தப்படும் வழித்தடங்களில் ட்செலினோக்ராட் – ஸ்ஹெக்கஸ்கான் மற்றும் அல்மாட்டி – கீயெவ் ஆகிய வழித்தடங்கள் முக்கியமானவை.[5]
விமானக் குழு வரலாறு
தொகுஏர் அஸ்டானா விமானக் குழுவின் வரலாறு பின்வருமாறு:[6]
விமானம் | செயல்பாட்டினை
தொடங்கியது |
செயல்பாட்டில் இருந்து
வெளியேறியது |
சேவையில் இருந்து
வெளியேற்றப்பட்ட எண்ணிக்கை |
---|---|---|---|
ஏர்பஸ் A319 | 2008 | — | |
ஏர்பஸ் A320 | 2006 | — | 4 |
ஏர்பஸ் A321 | 2007 | — | |
போயிங்க் 737-700 | 2002 | 2007 | 1 |
போயிங்க் 737-800 | 2002 | 2007 | 2 |
போயிங்க் 757-200 | 2003 | — | |
போயிங்க் 767-300ER | 2007 | — | 2 |
எம்ப்ரயர் 190 | 2011 | — | |
ஃபோக்கர் 50 | 2004 | 2012 | 6 |
செயல்பாட்டு அடையாளங்கள்
தொகுபயணிகள் பயணித்ததன் எண்ணிக்கை [7]
- 2006 – 1.5 மில்லியன்
- 2007 – 2.1 மில்லியன்
- 2008 – 2.3 மில்லியன்
- 2009 – 2.2 மில்லியன்
- 2010 – 2.6 மில்லியன்
- 2011 – 3 மில்லியன்
- 2012 – 3.3 மில்லியன்
- 2013 – 3.7 மில்லியன்
- 2014 – 3.8 மில்லியன்
விருதுகள்
தொகு- 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, ஸ்கைட்ராக்ஸ் 4 ஸ்டார் ஏர்லைன்ஸ் விருது [8]
- ஸ்கைட்ராக்ஸ் வேர்ல்டு ஏர்லைன் அவார்ட்ஸ், மத்திய ஆசியா மற்றும் இந்தியாவின் சிறந்த விமானச் சேவைக்கான விருது, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கிடைக்கப்பெற்றது. [9]
- ஸ்கைட்ராக்ஸ் வேர்ல்டு ஏர்லைன் அவார்ட்ஸ், மத்திய ஆசியா மற்றும் இந்தியாவின் சிறந்த வேலையாட்கள் சேவைக்கான விருது, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் கிடைக்கப்பெற்றது. [10]
- ஏர் டிரான்ஸ்போர்ட் வேர்ல்ட் இன்டஸ்ட்ரி விருதுகள், உலகளாவிய சந்தையின் முன்னோடிக்கான விருது, 2015 ஆம் ஆண்டில் கிடைக்கப்பெற்றது. [11]
குறிப்புகள்
தொகு- ↑ "Head Office." Air Astana. Retrieved on 19 Aug 2015. "Registered office 4A, Zakarpatskaya Street, Almaty, 050039, Kazakhstan"
- ↑ "Etihad Signs Codeshare Deal with Air Astana". http://www.airastana.com/common/en/news/Codeshare-with-Etihad.aspx. பார்த்த நாள்: 19 Aug 2015.
- ↑ "Turk Hava Yollari AO : Air Astana and Turkish Airlines sign a codeshare agreement". 4-traders.com. 4 June 2013. http://www.4-traders.com/TURK-HAVA-YOLLARI-AO-6495582/news/Turk-Hava-Yollari-AO-Air-Astana-and-Turkish-Airlines-sign-a-codeshare-agreement-16999879/. பார்த்த நாள்: 19 Aug 2015.
- ↑ Air Astana Fleet
- ↑ "Air Astana Services". cleartrip.com.
{{cite web}}
: Unknown parameter|access date=
ignored (|access-date=
suggested) (help) - ↑ Fleet Air Astana
- ↑ "Annual Reports". airastana.com. பார்க்கப்பட்ட நாள் 19 Aug 2015.