பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம்
பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் (ஐஏடிஏ: PEK, ஐசிஏஓ: ZBAA) (எளிய சீனம்: 北京首都国际机场; மரபுவழிச் சீனம்: 北京首都國際機場; மாண்டரின் பின்யின்: Běijīng Shǒudū Guójì Jīchǎng; Jyutping: Bak1ging1 Sau2dou1 Gwok3zai3 Gei1coeng4) ஆனது பெய்ஜிங், சீனாவில் உள்ள முதன்மையான பன்னாட்டு விமான நிலையம் ஆகும். இது பெய்ஜிங் நகர மையத்திலிருந்து வடகிழக்கில் 32 km (20 mi) தொலைவில் சோயங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [3] மேலும் இது அரசுக்குச் சொந்தமான பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலைய கம்பெனி லிமிடெட் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.
பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் 北京首都国际机场 Běijīng Shǒudū Guójì Jīchǎng | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Terminal 3 | |||||||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||||||
வானூர்தி நிலைய வகை | Public | ||||||||||||||||||
இயக்குனர் | பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலைய கம்பெனி லிமிடெட் | ||||||||||||||||||
சேவை புரிவது | பெய்ஜிங் | ||||||||||||||||||
அமைவிடம் | சோயங் மாவட்டம் | ||||||||||||||||||
மையம் | |||||||||||||||||||
உயரம் AMSL | 116 ft / 35 m | ||||||||||||||||||
இணையத்தளம் | en | ||||||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||||||
| |||||||||||||||||||
புள்ளிவிவரங்கள் (2011) | |||||||||||||||||||
| |||||||||||||||||||
பெய்ஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சீன எழுத்துமுறை | 北京首都國際機場 | ||||||||||
எளிய சீனம் | 北京首都国际机场 | ||||||||||
|
2009-ல் பயணிகள் போக்குவரத்து மற்றும் மொத்த போக்குவரத்து இயக்கங்கள் அடிப்படையில் ஆசியாவில் பரபரப்பான விமான நிலையம் எனப் பெயர் பெற்றது. பெய்ஜிங் விமான நிலையம், ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு விமான நிலையத்தை அடுத்து பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கையின் அடிப்படையில் சர்வதேச அளவில் இரண்டாமிடத்தில் (2011-ன் படி) உள்ளது. இந்த விமான நிலையம் 517,584 விமான இயக்கங்களை (take-offs and landings) 2010ல் பதிவு செய்ததன் மூலம் சர்வதேச அளவில் எட்டாம் இடத்தில் உள்ளது. சரக்கு போக்குவரத்து அடிப்படையிலும் பெய்ஜிங் விமான நிலையம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2009-ல் 1,420,997 டன் சரக்குகளை கையாண்டு உலகிலேயே சரக்கு போக்குவத்தை கையாளும் விமான நிலையாங்களில் 14ஆம் இடத்தை பிடித்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Boeing.com Beijing Capital International Airport
- ↑ Final Airport Traffic Results for 2009 பரணிடப்பட்டது 2011-01-11 at the வந்தவழி இயந்திரம், 109 KiB, Airports Council International, 21 March 2010
- ↑ Map from Maptown.cn பரணிடப்பட்டது 2013-01-16 at the வந்தவழி இயந்திரம். ()