இங்கிலாந்தின் ஜான்
ஜான் (John, திசம்பர் 24, 1166 – அக்டோபர் 19, 1216), என்றும் ஜான் லாக்லாந்து (நார்மன் பிரான்சியம்: Johan sanz Terre),[1] அறியப்படும் 1199 முதல் தமது இறப்பு 1216 வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். தனது அண்ணன் முதலாம் ரிச்சார்டின் ('ரிச்சர்டு இலயன்ஆர்ட்') மரணத்திற்குப் பின்னர் இங்கிலாந்தின் அரசரானார்.
ஜான் | |
---|---|
அரசர் ஜானின் கல்லறை சிற்பம், வொர்செஸ்டர் கதீட்ரல் | |
இங்கிலாந்தின் அரசர் | |
ஆட்சிக்காலம் | மே 27, 1199 – அக்டோபர் 19, 1216 |
முடிசூட்டுதல் | மே 27, 1199 |
முன்னையவர் | இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் |
பின்னையவர் | என்றி III |
அயர்லாந்துப் பிரபு | |
ஆட்சிக்காலம் | மே 1177 – அக்டோபர்19, 1216 |
பின்னையவர் | என்றி III |
பிறப்பு | திசம்பர் 24, 1166 பியூமோன்ட் அரண்மனை, ஆக்சுபோர்டு |
இறப்பு | அக்டோபர் 19, 1216 (அகவை 49) நெவார்க் கோட்டை, நாட்டிங்காம்சையர் |
புதைத்த இடம் | வொர்செஸ்டர் பேராலயம் |
துணைவர் | இசபெல்லா, குளோசெஸ்டர் சீமாட்டி (தி. 1189; ann. 1199) இசபெல்லா, அங்கூலெமெ சீமாட்டி (தி. 1200) |
குழந்தைகளின் பெயர்கள் | என்றி III, இங்கிலாந்து அரசர் ரிச்சர்டு ஜோன் இசபெல்லா எலெனார் முறைகேடான: ரிச்சர்டு பிட்சுராய் ஜோன் |
மரபு | பிளான்டஜென் அரசமரபு/ஆங்கவென்[nb 1] |
தந்தை | இங்கிலாந்தின் இரண்டாம் என்றி |
தாய் | எலெனார் |
இவரது ஆட்சியில் இவருக்கும் நிலப்பிரபுக்களுக்கும் ஆயர்களுக்கும் இடையே பல பிணக்குகள் எழுந்தன. இதனால் அவர்கள் புரட்சி செய்து அரசரின் அதிகாரத்தை மட்டுப்படுத்தும் மாக்னா கார்ட்டாவில் கையொப்பமிட வைத்தனர். இந்த மாக்னா கார்ட்டா இங்கிலாந்தின் வரலாற்றில் மிக குறிப்பிடத்தக்க சட்ட ஆவணமாகும். இதுவே இங்கிலாந்தின் முதல் உரிமைகள் சட்டமும் ஆகும். இந்த ஆவணம் அரசர்களின் உரிமைகளை மட்டுப்படுத்தியதோடு அவற்றை செயல்படுத்த சில சட்டங்களைப் பின்பற்றுவதைக் கட்டாயமாக்கியது. பிரபுக்களுக்கு அரசாட்சியில் கூடுதல் அதிகாரத்தை வழங்கியது. இது இங்கிலாந்து அரசை மட்டுமல்லாது மற்ற நாட்டு அரசுகளையும் பாதித்தது.[2]
ஜான் இங்கிலாந்து அரசராக இருந்தது இங்கிலாந்தின் வரலாற்றுப் பார்வையில் வெற்றிகரமானது ஒன்றல்ல. நார்மண்டி சிற்றரசை பிரான்சின் இரண்டாம் பிலிப்பிடம் தோற்றார்; இதனால் இவரது அரசமரபான ஆங்கவென் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. 13ஆம் நூற்றாண்டில் கேப்டியன் பரம்பரை அதிகாரத்தைக் கைப்பற்றவும் வழி வகுத்தது. பலமுறை முயன்றும் அவரால் பிரான்சிடமிருந்து இழந்த நிலப்பகுதியை மீட்க இயலவில்லை.
குடும்ப வரலாறு
தொகுஇரண்டாம் என்றியின் நான்காவது மகனாகப் பிறந்த ஜான், தான் அரியணை ஏறுவதற்கு எதிர்பார்க்கவில்லை. ஊஆன் பிறப்பதற்கு முன்பாகவே இரண்டாம் என்றி தனது நிலத்தை மகன்களுக்கு இடையே பிரித்துக் கொடுத்திருந்தார். பின்னர் ஜானுக்கு அயர்லாந்தை இராச்சியமாக வழங்க முடிவாயிற்று. என்றியின் மற்ற மகன்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். என்றி இறந்த பிறகு ஜானின் அண்ணன் ரிச்சார்டு அனைத்து சொத்துக்களையும் பெற்றார். ரிச்சர்டிடமிருந்து ஜான் அயர்லாந்தை பிரபுத்துவ சொத்தாக பெற்றார்.[3] இதை ஜானின் மற்ற அண்ணன்கள் எதிர்த்து கிளர்ச்சி செய்ததால் ஜானின் குடும்ப வாழ்க்கை கொந்தளிப்பான ஒன்றாக இருந்தது. ஜானின் அன்னை, எலெனாரை என்றி 1173இல் சிறையிலிட்டார்; அப்போது ஜானிற்கு ஐந்து அகவைகள் தான் நிறைந்திருந்தது.
இளைஞனாக இருந்தபோதே ஜான் நயவஞ்சகத்திற்கு பெயர்பெற்றிருந்தார். தனது அண்ணன்களுடன் சில நேரங்களிலும் அவர்களுக்கு எதிராக சில நேரங்களிலும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டார். 1184இல் ஜானும் ரிச்சார்டும், இருவருமே, பிரான்சின் அக்குவாட்யின் பகுதிக்கு உரிமை கொண்டாடினார்.
ரிச்சார்டின் இராமை
தொகுஇங்கிலாந்தின் அரசராக ரிச்சார்டு 1190 முதல் 1194 வரை மூன்றாம் சிலுவைப் போரில் ஈடுபட்டிருந்தபோது முதன்மை நீதியரசராக (அரசப் பிரதிநிதி அல்லது பிரதமர் போல) இருந்த ஜான் எலி பேராலய ஆயர் வில்லியம் லாங்சாம்ப்பை வெளியேற்ற முயன்றார். இந்த நிகழ்வே இராபின் ஊட் கதையில் ஜானை கெட்டவராக சித்திரிக்க காரணமாயிற்று.
லாங்சாம்ப்பை விட ஜான் இலண்டனில் புகழ்பெற்றிருந்தார். அக்டோபர் 1191இல் மக்கள் நகரக் கதவுகளை ஜானிற்கு திறந்து விட்டனர்; ஆனால் லாங்சாம்ப் கோபுரத்திலேயே தடுத்துவைக்கப்பட்டார். ஊஆன் இலண்டன் நகருக்கு தன்னாட்சி உரிமை வழங்குவதாகவும் ஈடாக தன்னை அவர்கள் ரிச்சர்டின் அரச வாரிசாக ஏற்க வேண்டும் என்றும் உறுதி கூறினார்.[4]
சிலுவைப் போரிலிருந்து திரும்பிய ரிச்சர்டை ஆஸ்திரியாவின் அரசர் ஐந்தாம் லியோபோல்டு சிறை பிடித்து புனித உரோமைப் பேரரசர் ஆறாம் என்றியிடம் ஒப்படைத்தார். ஆறாம் என்றி மீட்புப் பணம் கேட்டு அவரை சிறையிலடைத்தார். அதேநேரம் ஜான் பிரான்சின் மன்னர் பிலிப் அகஸ்டசுடன் இணைந்து கொண்டு என்றிக்கு ரிச்சர்டை இங்கிலாந்திடமிருந்து முடியும் வரை விலக்கி வைக்க வேண்டும் எனக் கடிதம் எழுதினர். இதற்கு என்றி உடன்படவில்லை. பிரான்சிய அக்குடைனின் எலெனார் பிரித்தானிய அரச நகைகளை அடகு வைத்து ரிச்சர்டை மீட்டார். விடுதலையான ரிச்சர்டிடம் ஜான் மன்னிப்புக் கோரினார். ரிச்சார்டு அவரை மன்னித்ததோடன்றி அரச வாரிசாகவும் அறிவித்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ Historians are divided in their use of the terms "Plantagenet" and "Angevin" in regards to Henry II and his sons. Some class Henry II as the first Plantagenet King of England; others refer to Henry, Richard and John as the Angevin dynasty, and consider Henry III to be the first Plantagenet ruler.