ழீன் உலூயிசு பொன்சு

ழீன் - லூயிசு பொன்சு (Jean-Louis Pons) (24 திசம்பர் 1761 – 14 அக்தோபர் 1831) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார்.[1] எளிமையாக சொந்தமாக்க் கற்று தன் வானியல் வாழ்க்கையைத் தொடங்கினாலும், இவர் எக்காலத்தினும் சிறந்த வால்வெள்ளி கண்டுபிடிப்பாளராக உயர்ந்தார்: வானியல் வரலாற்றிலேயே இல்லாதபடி, இவர் 1801 முதல் 1827 வரை 37 வால்வெள்ளிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

ழீன் - லூயிசு பொன்சு
Jean-Louis Pons
ழீன் - லூயிசு பொன்சு
பிறப்பு(1761-12-24)24 திசம்பர் 1761
பெய்ரே
இறப்பு14 அக்டோபர் 1831(1831-10-14) (அகவை 69)
புளோரன்சு
தேசியம்பிரெஞ்சியர்
துறைவானியல்
விருதுகள்இலாலண்டே பரிசு (1818)

இளமை வாழ்க்கை

தொகு

பொன்சு கவுட்டெசு ஆல்ப்பெசுவில் வாழ்ந்த ஏழைக் குடும்பத்தில் பெய்ரே அல்லது பியேரில் பிறந்தார். எனவே முறையான கல்வி ஏதும் பெறவில்லை. இவர் 1789 இல் மார்செயில் வான்கானகத்தில் அதன் கவனிப்புப் பணியாலராக வேலையில் சேர்ந்துள்லார். மெல்ல மெல்ல இவர் வானியலாலர்களுக்கு அவர்களது நோக்கீடுகளில் உதவும் அளவுக்கு வானியலில் ஈடுபட்டுள்ளார். இவரே தனியாக நோக்கீடுகள் செய்யவும் கற்றுள்ளார். விண்மீன் புலங்களில் புலமைபெற்று அவற்றின் மாற்றங்களைக் குறிக்க கற்றார்.

எளிமையும் நபிக்கைக்கும் உரிய பொன்சை பட்டறிவு வாய்ந்த வானியலாலர்கள் அவரது தொடக்க வானியல் பயில்வு காலத்தில் கேலிசெய்து ஏளனித்துள்ளனர். பிரான்சு சேவியர் வான் சேக் இவரை சூரியக் கரும்புள்ளிகள் புலப்படும்போது வால்வெள்ளிகளைக் காணுமாறு அறிவுரை கூறி பணித்துள்ளார். இவ்வாரு சேக் இவருக்கு வால்வெள்ளிகளைக் கண்டுபிடிக்கும் சிறந்த முறையை அவரையறியாமலேயே, மிக நல்ல அறிவுரையைக் கையளித்துவிட்டார்.[2]

வானியல் பணிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. McGown, Robert D. (2007). "Pons, Jean-Louis". In Hockey, Thomas; et al. (eds.). Biographical dictionary of astronomers. Vol. vol. II, M–Z. Springer. p. 924. {{cite book}}: |volume= has extra text (help)
  2. Calder, N. Comets: Speculation and Discovery, Courier, 1994, p.80

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ழீன்_உலூயிசு_பொன்சு&oldid=3227654" இலிருந்து மீள்விக்கப்பட்டது