நா. மம்மது

தமிழிசை ஆய்வாளர், எழுத்தாளர்

நா. மம்மது (பிறப்பு: 24 திசம்பர் 1946) தமிழிசை ஆய்வாளரும், எழுத்தாளரும் ஆவார். தமிழிசைப் பேரகராதி ஒன்றினை சொற்களஞ்சியம், பண் களஞ்சியம், இசைக்கருவிகள் களஞ்சியம் என மூன்று தொகுதிகளாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுவரும் இவர் அவற்றுள் முதல் தொகுதியான தமிழிசைப் பேரகராதி (சொற்களஞ்சியம்) என்ற நூலை "இன்னிசை அறக்கட்டளை" மூலம் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்[1]. ஆறுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதி பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர் குரலிசைக் கலைஞரான ராஜா முகமதுவுடன் இணைந்து விளக்கமும், நிகழ்த்தலும் கூடிய தமிழிசை நிகழ்ச்சிகளைப் பல்வேறு அரங்குகளில் நிகழ்த்தியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகிலுள்ள இடைகால் என்ற ஊரினரான நா. மம்மது தற்பொழுது மதுரையில் வசித்துவருகிறார். கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், தத்துவவியலில் முதுகலைப் பட்டமும், இசையில் மெய்ம்மையியல் முதுவர் பட்டமும் பெற்றவர். நெடுஞ்சாலைத் துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி 2004இல் ஓய்வு பெற்றவர். புகழ்பெற்ற தமிழிசை ஆய்வாளரான வீ. ப. கா. சுந்தரம் இவரது இசை ஆசிரியராகத் திகழ்ந்திருக்கிறார்[1]. மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழிசை ஆய்வு மையத்தில் முதன்மை ஆய்வாளராக இருந்துவருகிறார்.

விருதுகள்

தொகு
  • தமிழக அரசின் பாரதியார் விருது (2010) [2]
  • எஸ். ஆர். எம். பல்கலைக்கழக தமிழ்ப் பேராயத்தின் முத்துத்தாண்டவர் தமிழிசை விருது (2012)[3]
  • வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' (2008)
  • சிறந்த நூல் விருது – தமிழ்ச் சங்கம், திருப்பூர் (2007)
  • பொங்குதமிழ் அறக்கட்டளையின் "மக்கள் விருது" (2008)
  • தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் பெரியார் விருது (2008)
  • காவ்யா வெள்ளி விழா விருது (2008)
  • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் தமிழ் இசைப்பணி விருது (2009)
  • திண்டுக்கல் தமிழ் மாமன்றத்தின் இசைத்தமிழ் வித்தகா் விருது (2009)
  • த.மு.எ.க.ச விருது (2011)
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது (2011)
  • சென்னை சோமசுந்தரா் ஆகமப் பண்பாட்டு ஆய்வுமன்றம் வழங்கிய தமிழிசைத் தளபதி விருது (2012)
  • சுஜாதா அறக்கட்டளை விருது (2012 )
  • இந்தியத் தொழில் கூட்டமைப்பு விருது, மதுரை (2012)
  • அனைத்துலக இசுலாமியத் தமிழ் இலக்கிய விருது, கும்பகோணம் (2014)[4]

நாட்டுடமை

தொகு

நா மும்முதுவின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதாக தமிழ்நாடு அரசு 2022 திசம்பரில் அறிவித்தது. அதற்காக தமிழ்நாடு அரசு ரூ 15 இலட்சம் இவருக்கு வழங்குவதாக குறிப்பிட்டது.[5]

நூல்கள்

தொகு
  • தமிழிசைப் பேரகராதி, சொற்களஞ்சியம், [இன்னிசை அறக்கட்டளை]
  • தமிழிசைப் பேரகராதி, பண் களஞ்சியம் [தமிழிசை ஆய்வு மையம்]
  • ஆபிரகாம் பண்டிதர், [சாகித்திய அகாதெமி]
  • தமிழிசை வேர்கள், [எதிர் வெளியீடு]
  • தமிழிசைத் தளிர்கள், [தமிழோசை பதிப்பகம்]
  • இழையிழையாய் இசைத் தமிழாய், [தென்திசை]
  • ஆதி இசையின் அதிர்வுகள், [வம்சி பதிப்பகம்]
  • தமிழிசை வரலாறு, [நாதன் பதிப்பகம்]
  • தொல்லிசைச் சுவடுகள் [வம்சி பதிப்பகம்]
  • இந்திய இலக்கியச் சிற்பிகள்: ஆபிரகாம் பண்டிதர் [சாகித்திய அகாடெமி]
  • என்றும் தமிழிசை [நாதன் பதிப்பகம்]
  • தமிழர் திணை [வம்சி பதிப்பகம்]

தமிழக அரசு, டிசம்பர் 2022 ஆண்டு, மம்மது உள்பட தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 பா. ராஜா (செப்டம்பர் 13, 2009). "சாதனை: இசைக்கென்று ஓர் பேரகராதி!". தினமணி கதிர் (இலவச இணைப்பு). தினமணி. http://www.dinamani.com/weekly_supplements/kadhir/article1217839.ece. பார்த்த நாள்: பெப்ரவரி 14, 2016. 
  2. "தமிழிசை அகராதி எழுதிய மதுரை மம்மது". தினமலர். ஜனவரி 17, 2011. http://www.dinamalar.com/news_detail.asp?id=167590&Print=1. பார்த்த நாள்: பெப்ரவரி 14, 2016. 
  3. "2012ஆம் ஆண்டு தமிழ்ப் பேராய விருதுகள்". Archived from the original on 2017-01-08. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 14, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. ஆ. ஷைலா ஹெலின். "தமிழறிஞர் நா மம்மது". எழுத்து.காம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 14, 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "8 தமிழறிஞர்களின் நுால்கள் நாட்டுடைமை". Dinamalar. 2022-12-20. பார்க்கப்பட்ட நாள் 2022-12-21.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நா._மம்மது&oldid=3753539" இலிருந்து மீள்விக்கப்பட்டது